அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ. அமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் விமானமொன்று இரகசிய பயணமொன்றின்போது பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக 2003 ம் ஆண்டு இலங்கையில் தரையிறங்கியதாக வாஷிங்டனிலிருந்து வெளிவரும் ஏ.எவ்.பி. செய்திஸ்தாபனம் தகவல் தெரிவித்துள்ளது.
தரங்குறைந்த பெற்றோலைப் பயன்படுத்தியதால் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க 75 ஆயிரம் ரூபாவை இழந்தார்.அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தரங்குறைந்த பெற்றோலைப் பயன்படுத்தியதால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.
திருகோணமலையில் 4000 இராணுவ வீரர்களுக்கு விசேட பயிற்சி திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமூக வலையமைப்புகளில் பரவலாகப் பேசப்படும் பேஸ்புக் இணையத்தளத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும், இதுவரை 1100 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இலங்கை கணனி பயன்பாட்டாளர்கள் குழுவின் பொறியியலாளர் ரோஹன பள்ளியகுருகே தெரிவித்துள்ளார்
இராணுவத்தினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தாம் குறிப்பிடவில்லை என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கைப் பிரதி பிரதிநிதி மேஜர் ஜெனரல் சாவேந்திரா சில்வா தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக பிரபல சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வெறும் பொய்யே என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மர்ம மனிதர்கள் அல்லது கிறீஸ் பூதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் தனது கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுக்குமாறு பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை வேவு பார்த்த சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக இந்தியாவின் என்.டி.ரீ.வி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடாபியின் விசுவாச ராணுவத் துக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புரட்சி படையினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.
ஐரீன் புயல் தாக்கம் காரணமாக அமெரிக்காவின் கிழக்க கடலோரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகின. இந்த புயலின் தீவரம் காரணமாக 13 மாநிலங்களில் 45 பேர் உயிரிழ்நதனர்.
சிரியாவில் ஒரே நாளில் 72 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் 400க்கும் மேற்பட்ட உடல்கள் பொது பூங்காக்ககளில் புதைக்கப்படன.
லிபியாவில் கர்னல் கடாபியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அங்கு புரட்சி படையினரின் தேசிய மாற்ற கவுன்சில் நிர்வாகம் நடைபெறுகிறது.
நாட்டின் எரி சக்தி தேவையில் தட்டுப்பாடு ஏற்படும் போது மாற்று எரிசக்தி அமைப்பாக அணு உலைகளை பயன்படுத்தும் திட்டம இல்லை என ஜேர்மனி நெட் வொர்க் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்ததிற்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை வெளியிட ஐரோப்பிய நாடுகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி அழைப்பு விடுத்தார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்கூட்டியே தோ்தல் நடைபெறும் சூழல் இல்லை என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
சி.ஐ.ஏ.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமான சேவை நிறுவனங்கள் இரண்டிற்கிடையிலான வழக்கொன்றின் போதே செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, உலகெங்கும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு அமர்;த்தப்பட்ட தனியார் விமானங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
75ஆயிரம் ரூபாவை இழந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
12.08.2003 ஆம் ஆண்டு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள டல்லாஸ் சர்வதேச விhமன நிலையத்தலிருந்து இத்தகைய விமானமொன்று 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்கொக் நோக்கி புறப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்விமானம் நான்கு நாட்களின் பின் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் தரையிறங்கியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் ரிதுவான் இஸாமுதீனின் கைது இடம்பெற்ற வேளையில் இப்பயணம் மேற்கொள்ளப்ட்டுள்ளதாக தென்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தரங்குறைந்த பெற்றோலைப் பயன்படுத்தியதால் பழுதடைந்த தனது வாகனத்தைத் திருத்துவதற்காக 75 ஆயிரம் ரூபாவை செலவழித்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
திருகோணமலையில் 4000 இராணுவ வீரர்களுக்கு விசேட பயிற்சி?
அதேபோன்று, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுத் தலைவரும் தரங்குறைந்த பெற்றோலைப் பயன்படுத்தியதால் 25ஆயிரம் ரூபாவைத் தனது வாகனம் திருத்தும் பணிகளுக்காகச் செலவழித்துள்ளார் என்றும் தயாசிறி ஜயசேகர கூறினார்.
எந்தவொரு அவசர சந்தர்ப்பத்தின் போது, கூட்டாக இணைந்து செயற்படுவது எவ்வாறு எனும் இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த பயிற்சி திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் பேஸ்புக் வலையமைப்பில் இடம்பெறும் குற்றங்கள் அதிகரிப்பு.
இதேவேளை முப்படை இராணுவ வீரர்களையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பயிற்சி திட்டம் ‘தியகாவா’ என அழைக்கப்படுகிறது.
முப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4000 பேர் இப் பயிற்சி திட்டத்தில் இணைந்து பயிற்சி பெறுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி இப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம் மாதம் 03ஆம் திகதி வரை திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் புடவைகட்டு பிரதேச கடற்கரையருகில் இடம்பெறும்.
இராணுவ கமான்டர் படைப்பிரிவு, விசேட படைப் பிரிவும் இப் பயிற்சி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
விமான தாக்குதல் வாகனம், கெலிகொப்டர், கடற்படை தாக்குதல் வாகனங்கள் என்பனவும் இப் பயிற்சி திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
‘தியகாவா’ பயிற்சி திட்டத்தில் தரை, வான், கடலில் இருந்து தாக்குதல்களை மேற்கொண்டு எதிரிகளின் முகாம்கள் மற்றும் இயந்திரங்களை எவ்வாறு தோற்கடிப்பது தொடர்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இணையத்தளங்களில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், சைபர் க்ரைம் எனப்படும் இணையத்தளக் குற்றங்களின் அதிகரிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
போர்க்குற்றங்களில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக நான் குறிப்பிடவில்லை! குற்றச்சாட்டை மறுத்தார் ராஜீவ.
பேஸ்புக் கணக்குகளை முடக்குதல்,
தனி நபர்களால் தரவேற்றப்படும் படங்களை தவறான முறையில் பயன்படுத்துதல்,
தனி நபர்களின் பெயர்களை குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்துதல்,
பலவந்தமாகப் பணம் பெறுதல்
போன்ற சம்பவங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்றன.
எமக்கு நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கின்றன. தற்போது பேஸ்புக் வலையமைப்பில் உருவாக்கப்பட்டுவரும் 'கிறீஸ் மனிதன்' கணக்குகளை இடைநிறுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தின் சிலர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் எனவும் தாம் குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சவேந்திர சில்வா தொடர்பில் இரகசிய அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தாம் ஒருபோதும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படையினர் உண்மையாகவே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் விசாரணைகளின் மூலம் தெரியவரும் என்றே தாம் கருத்து வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில இராணுவ உத்தியோகத்தர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ராஜீவ விஜேசிங்க தமக்கு தெரிவித்ததாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டிருந்தது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சில இராணுவ உத்தியோகத்தர்கள் மனித உரிமைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் ஒப்புக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென விரும்புவதாக தாம் குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு எவரையும் குற்றவாளிகளாக தீர்மானிக்க முடியாது எனவும் அதற்கான சட்ட அங்கீகாரம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை காணப்படுவதாக தாம் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளார். கிழக்கில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை காணப்படுவதாக பரவலாக பேசப்படுவதாகவே தாம் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பிரிகேடியர் அருண வன்னியாரச்சியிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை வெறும் பொய்யே – விஜித ஹேரத்.
அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் சவேந்திர சில்வாவின் நடவடிக்கைகள் குறித்து தகவல் திரட்டப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சொந்த வாழ்க்கை, பெண்களுடனான உறவு, ஊடகவியலளார்களுடனான தொடர்பு, வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளுடன் பேணிய உறவு, சொத்து விபரங்கள் உள்ளிட்ட சகல விடயங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் வேறும் சட்டங்களின் மூலம் அதன் ஒரு சில சரத்துக்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.
கிறீஸ் பூதம் பற்றி தகவல் அறிந்தால் தனக்கு அறிவியுங்கள் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியிலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதாக அறிவித்த அரசாங்கம் மறைமுகமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தொடர்ந்தும் அந்தச் சட்டங்களை அமுல்படுத்த முயற்சிக்கின்றன.
அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளை அடக்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டம் என்னும் பாம்பின் தோல் அகற்றப்பட்டுள்ளதே தவிர பாம்பு உயிருடன் தான் இருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
களனி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது அமைச்சர் மோ்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்திய கடற்படையினரை வேவுபார்த்த சீன உளவு சேவைக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசம்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சராக உள்ள எனக்கு இது தொடர்பில் பெரும் கடப்பாடு இருக்கிறது.
பொதுமக்கள் தொடர்பாடல் என்பதில் கிறீஸ் பூதமும் உள்ளடங்கும். கிறீஸ் பூதம் தொடர்பில் சந்தேகம் நிலவினால் 0722287210 என்ற தனது கைத்தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
நள்ளிரவு 12 மணிக்கும் எடுக்கலாம். கிறீஸ் பூதம் கிடைத்தால் சுற்றிவளைத்து பிடித்துக் கொள்ளுங்கள். அந்த இடத்துக்கு நான் வருவேன். முச்சந்திக்கு கொண்டுவந்து கட்டிவைப்பேன். அந்தநாளில் எனக்கு சிறைவாசல் திறக்கும். கிறீஸ் பூதத்துக்கு சுடுகாட்டின் கதவு திறக்கும் என்று மேர்வின் சில்வா முழங்கியுள்ளார்.
மீன்பிடி ட்ரோலர் படகை போல் பயணித்த சீனாவின் உளவு சேவைக்கு சொந்தமான கப்பல் பல்வேறு தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
லிபியா புரட்சி படையிடம் சரண் அடைய தயார்: கடாபி மகன் ஸாதி அறிவிப்பு.
இந்தக் கப்பலை இந்திய கடற்படையினர் கண்காணித்ததையடுத்து அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தமானின் சிறிய தீவுகளுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் தோரiணில் குறித்த கப்பல் தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த மாதத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இந்த கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இத்தகைய படகொன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடாபியின் விசுவாச ராணுவத் துக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புரட்சி படையினருக்கும் இடையே கடும் சண்டை நடக்கிறது.
புரட்சி படைக்கு, ராணுவ உதவியை அமெரிக்கா அளித்துள்ளது. இதனால் புரட்சி படையினரிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் கடாபி ராணுவம் பின் வாங்கி வருகிறது.
முக்கிய நகரங்களை புரட்சி படையினர் கைப்பற்றி உள்ளனர். சமீபத்தில், தலைநகர் திரிபோலியும் புரட்சி படையிடம் வீழ்ந்தது. அதிபர் மாளிகையையும் புரட்சி படை கைப்பற்றியது.
அதற்கு சற்று முன்பாக கடாபியும், அவரது மகன் ஸாதியும் ரகசிய பாதை வழியாக அங்கிருந்து தப்பி விட்டனர். கடாபியின் மனைவி, மற்றும் 3 மகள்களும் இந்த வார தொடக்கத்தில் அல்ஜீரியா நாட்டுக்கு பறந்து விட்டனர். அங்கு அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். கடாபியையும் மகன் ஸாதியையும் புரட்சி படையினர் தேடி வருகின்றனர்.
மறைவிடங்கள், பாதுகாப்பான இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் பகுதிகளில் எல்லாம் புரட்சி படையினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கடாபியும், அவரது மகன் ஸாதியும் கொல்லப்படுவார்கள் என்று புரட்சி படை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கடாபியின் மகன் ஸாதி, புரட்சி படையிடம் சரணடைந்து உயிர்ப் பிச்சை பெற முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி, புரட்சி படையின் தளபதி அப்துல் ஹக்கிம் பெல்ஹாச் கூறியதாவது:-
கடாபியின் மகன் அல்-ஸாதி கடந்த செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) முதன் முறையாக என்னை தொடர்பு கொண்டு போனில் பேசினார். தான் சரண் அடைய விரும்புவதாகவும், தனது உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்றும் கேட்டார்.
உங்கள் உயிரைப் பற்றி நீங்கள் அச்சப்பட தேவையில்லை. உங்களது உயிருக்கும், உரிமைக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். மேலும், நீங்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவீர்கள் என்று அவரிடம் கூறினேன். ஸாதி சரண் அடைந்த பிறகு, சட்டத் துறையின் பாதுகாப்பையும் கோர திட்டமிட்டு உள்ளார். நான் ஒருவரையும் கொல்லவில்லை. மக்களுக்கு விரோதமாக ஒருபோதும் செயல்பட்டது கிடையாது என்றும் ஸாதி தெரிவித்தார்.
அதற்கு நீங்கள் சரண் அடைய எடுத்த முடிவு சிறப்பானது. லிபிய மண்ணில் மேலும் ரத்த கறை படிவதை எங்களில் யாரும் விரும்பவில்லை. நீங்கள் மட்டுமின்றி உங்களுடன் சேர்ந்தவர்களும் சரண அடைவதுதான் நல்லது என்று அவரிடம் விளக்கி கூறினேன் என அப்துல்ஹக்கிம் பெல்ஹாச் தெரிவித்துள்ளார்.
ஸாதி எங்கு மறைந்து வாழ்கிறார் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், அதுபற்றி விளக்கமாக கூற முடியாது என்று அவர் மறுத்துவிட்டார்.
வடக்கு கரோலினாவின் தாக்க்கம் : நியூயோர் 'புயல் பேரிடர்' பகுதியாக ஓபாமா அறிவிப்பு.ஐரீன் புயல் தாக்கம் காரணமாக அமெரிக்காவின் கிழக்க கடலோரப்பகுதிகள் கடுமையான சேதத்துக்கு உள்ளாகின. இந்த புயலின் தீவரம் காரணமாக 13 மாநிலங்களில் 45 பேர் உயிரிழ்நதனர்.
புயல் காரணமாக வாராந்த இறுதியில் கிழக்கு கடல் பகுதியில் 38 செமீ மழை கொட்டி தீர்த்தது.17 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கு இன்னும் மின் இணைப்பு சீராகவில்லை.
ஐரீன் புயல் காரணமாக தெற்கு ஜெர்சியில் உள்ள 3 அணு உலைகளில் மின் உற்பத்தி பாதிக்கபட்டது. அந்த அணு உலைகளுக்கு வரும் குளிர்விக்கும் குழாய்களுக்கு வரும் தண்ணீர் அடைப்பு காரணமாக தடைபட்டது.
புயல் காரணமாக கடுமையாக பாதிக்கபட்ட வடக்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் புயல் பேரிடர் பகுதி என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த பகுதிகளின் மேம்பாடடு நடவடிக்கைக்கு கூடுதல் நிதி ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது.
சிரியாவில் ஒரே நாளில் 72 கைதிகளுக்கு மரண தண்டனை : அதிர்ச்சி அடைந்த சட்டத்துறை தலைவர் ராஜினமா.சிரியாவில் ஒரே நாளில் 72 கைதிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் 400க்கும் மேற்பட்ட உடல்கள் பொது பூங்காக்ககளில் புதைக்கப்படன.
ஜனாதிபதி பஷார் அல்-சாத் மற்றும் அவரது படையினரின் கொடூர நடடிவடிக்கை சகிக்காமல் சிரியாவின் தலைமை சட்ட தலைவரான அட்னன் முகமது பகோர் தனது அட்டர்னி ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார்.
சிரியாவில் புரட்சிப் படையினர் அட்னனை கடத்திச் சென்று விட்டதாக திங்கட்கிழமை அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது. அவர் மத்திய நகரமான ஹமாவில் இருந்து பணிக்கு சென்று கொண்டிருந்த போது கர்னாஸ என்ற கிராமத்தில் புரட்சிப்டையினர் கடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அட்னன் பகோர் வீடியோவில் பேசுகையில் ஹமா மத்திய சிறையில் ஜீலை 31 ஆம் திகதி 72 கைதிகள் கொல்லப்பட்டதையும் அவர்களில் அமைதி வழி போராட்டக்காரர்களும் இருந்தனர் என்றும் தெரிவித்தார்.
பொது பூங்காக்களில் உள்ள கல்லறைகளில் 420 உடல்கள் புதைக்கப்பட்டு உள்ளன. அமைதி போராட்டக்காரர்கள் 10 ஆயிரம் பேர் சிறையில் உள்ளனனர். 320 கைதிகள் சித்திரவதை தாங்காமல் மரணம் அடைந்துள்ளனர் என்றும் அவர் வேதனையடன் குறிப்பிட்டார்.
லிபியாவில் புதிய ஆட்சி மாற்றம் குறித்து விவாதிக்க பாரிசில் கூடும் தலைவர்கள்.லிபியாவில் கர்னல் கடாபியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அங்கு புரட்சி படையினரின் தேசிய மாற்ற கவுன்சில் நிர்வாகம் நடைபெறுகிறது.
போரால் உருக்குலைந்துள்ள லிபியா கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதிக்கவும் புதிய ஜனநாயக ஆட்சி மலர்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 60 நாடுகளின் தலைவர்கள் இன்று கூடுகிறார்கள். இந்த முக்கியக் கூட்டத்தில் 10 சர்வதேச அமைப்புளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று இரவு பாரிஸ் புறப்பட்டார். லிபியாவில் ஜனநாயக ஆட்சி மாற்றம் உரிமையுள்ள அரசை தீர்மானிப்பதற்க விவாதிக்கிறோம் என்று வாஷிங்டனில் அயல் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
லிபியா விவகாரம் தொடர்பான கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு கூட்டமைப்பு, நேட்டோ, மற்றும் இதர ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லிபியா தேசிய மாற்ற கவுன்சில் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
மாற்று எரிசக்தி தேவைக்காக அணு உலைளை பயன்படுத்தும் திட்டம் இல்லை : ஜேர்மனி.நாட்டின் எரி சக்தி தேவையில் தட்டுப்பாடு ஏற்படும் போது மாற்று எரிசக்தி அமைப்பாக அணு உலைகளை பயன்படுத்தும் திட்டம இல்லை என ஜேர்மனி நெட் வொர்க் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
வருகிற மழைககாலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் அணு உலை மின்சார உற்பத்தி குறித்து ஆலோசிக்க மாட்டோம் அதற்கு பதிலாக வாயு மற்றும் கரி மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்ததை கூடுதலாக பெறுவோம் என ஏஜென்சியின் தலைவர் மத்தியாஸ் தெரிவித்தார்.
ஜேர்மனியில் மூனிச், மான்ஹய்ம், விஸ்படன், என்ஸ்டார்ப் ஆகிய இடங்களில் இந்த வகை மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றிற்கு 1009 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின் உற்பத்தி எதிர்பாராத மின் தேவையை பூர்த்தி செய்யும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம் மற்றம் சுனாமி ஏற்படடதால் அங்குள்ள அணு மின்நிலையத்தில் கதிர்வீச்சு பரவி உயிர் அபாயத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தை தொடர்ந்து அணு உலைகளை மூட ஜேர்மனி முடிவு செய்தது படிப்படியாக அதன் இயக்கத்தை நிறுத்தி வருகிறது.
பாலஸ்தீனம் தனிநாடு என குரல் எழுப்ப ஐரோப்பா ஒன்றியத்திற்கு சர்கோசி அழைப்பு.பாலஸ்தீனத்ததிற்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை வெளியிட ஐரோப்பிய நாடுகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி அழைப்பு விடுத்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்த மாதம் பாலஸ்தீதிற்கு தனி நாடு அளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. அப்போது ஐரோப்பிய நாடுகள் ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் என சர்கோசி வலியுறுத்தி உள்ளார். அந்த பிராந்தியத்தில் அமைதி நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளும் பாலஸ்தீனம் தனி நாடு விவகாரத்தில் ஒரே முடிவை அறிவிக்க வேண்டும் என்று அவர் பிரான்ஸ் தூதர்கள் மாநாட்டில் நேற்று ஆற்றிய துவக்க உரையின் போது குறிப்பிட்டார். அப்போது அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கை மதத்தானது. அதற்கு இணையாக வேறு ஒன்று வரமுடியாது என்றும் சர்கோசி தெரிவித்தார்.
அரபு நாடுகளில் கிளர்ச்சி எழுந்துள்ள நிலையில் பாலஸ்தீன அமைதி நடவடிக்கை உறைந்து போக உலகம் அனுமதிக்ககூடாது என்றும் அவர் திட்டவடட்டமாக தெரிவித்தார்.
முன் கூட்டியே தேர்தலா? பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் ஓபிஸ் மறுப்பு.பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்கூட்டியே தோ்தல் நடைபெறும் சூழல் இல்லை என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.
முதல்வர் கிறிஸ்டி கிளார்க் ஓபிஸ் இதுபற்றி கூறுகையில் மாகாணத் தோதல் வருகிற 2013ஆம் ஆண்டு மே மாதம நடைபெறுகிறது என திட்டவட்டமாக தெரிவித்தது.
கிறிஸ்டி கிளார்க் கடந்த மார்ச் மாதம் முதல்வராக பதவி ஏற்றார் அவர் லிபரல் தலைமையை வென்றதை தொடர்ந்து இந்த பதவிக்கு வந்தார்.
அவர் பதவி ஏற்கும் போது விரைவில் தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக பிராசரத்தை துவக்க விரும்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இதனால் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற யுகம் இருந்தது.
கடந்த வாரம் விற்பனை வரி உயர்வை பொது மக்கள் நிராகரித்தனர். இந்த சூழ்நிலையால் தேர்தலை உடனடியாக சந்திக்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லலை என்று நிபுணர்கள் கருத்து தொவித்து உள்ளனர்.
முன் கூட்டியே தேர்தல் என்பது இப்போது இல்லை என்பதை பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வரின் அலுவலகமும் தெரிவித்தள்ளது.