Monday, September 5, 2011

எரிமலை பாறைகளில் இருந்து உயிரினங்கள் தோன்றியிருக்கலாம்: ஆய்வாளர் தகவல்.


உலகில் உயிரினங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்த நிலையில் தற்போது மிதக்கும் எரிமலை பாறைகளில் இருந்து ஆதிகால உயிரினங்கள் தோன்றியிருக்கக்கூடும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 3,500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மிதக்கும் தன்மையுள்ள எரிமலை பாறைகள் உருவாக்கியிருக்கலாம். அவற்றின் மீது மின்னல் தாக்கியதால் அவை நொறுங்கி பலவித ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்.
அதில் இருந்து எண்ணை வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் உலோகங்கள் உருவாகி அதன் மூலம் உயிரினங்கள் தோன்றி இருக்கக்கூடும் என பேராசிரியர் மார்ட்டின் பிராசியர் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF