இங்கிலாந்தில் உள்ள கர்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தாயின் கருப்பையில் வளரும் குழந்தைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
கர்ப்பபையில் இருக்கும் 24 முதல் 35 வார குழந்தைகளை வீடியோ படம் எடுத்தனர். பின்னர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.
அப்போது குழந்தைகள் தங்களின் முகபாவனைகளை அதாவது முகத்தில் இருக்கும் உறுப்புகளின் அசைவுகளை தாயின் வயிற்றுக்குள் இருந்தே கற்றுக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது உதடுகளை சுழிப்பது, மூக்கை வளைத்து சுருக்கத்தை ஏற்படுத்துவது, புருவங்களை நெரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். மொத்தம் 19 கருக்குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில் ஒரு குழந்தை அழுதும் மற்றொரு குழந்தை சிரித்தும் தங்களது முக பாவனையை அழகாக வெளிப்படுத்தின.
இதன் மூலம் குழந்தைகள் தங்களது முகபாவனைகளை தாயின் கருப்பைக்குள்ளேயே கற்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF