Wednesday, September 21, 2011

டாடாவின் தங்க நானோ கார்!


நானோ காரை தங்கத்தில் வடிவமைத்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை இந்தியாவின் ஏழை மக்களுக்கு வராது போகலாம். இந்தியாவின் முக்கியபணக்காரரான ரத்தன் டாத்தாவுக்கு வராது போகுமா?. அவரது சிந்தனைக்கு வடிவம் கொடுத்தது கோல் பிளஸ் நகை வடிவமைப்பு நிறுவனம்.


நேற்று மாலை மும்பையின் நானோ காட்சி அறை ஒன்றில் இந்தத் தங்கக் காரை, டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா அறிமுகம் செய்து வைத்தார். இதன் போது இக்கார் குறித்த விபரங்கள் செய்தியாளர்களிடம் தெரியப்படுத்தப்படுகையில், இந்தத் தங்கக் கார், இந்திய நகைத் தயாரிப்பில் பாராம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும், 14வகைத் தொழில் நுணுக்கங்களுடன், 80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி மற்றும் அலங்காரக் கற்களும், சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தக் காரினை இவ்வாறு தங்கத்தால் அலங்கரித்த, கோல்ட்பிளஸ் சாரிபில் கருத்துத் தெரிவிக்கையில், உலகெங்கிலும் இந்திய நகைவடிவமைப்புக்கு தனிமரியாதை உண்டெனவும், 5 ஆயிரம்ஆண்டுகள் கடந்து நிற்கும் இந்தப் பாராம்பரியத்தைக் கொண்டாடும் வகையிலும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியப்படுத்தப்பட்டது.இந்தியாவின் விலைகுறைந்த கார் என்ற அறிமுகத்துடன் விற்பனைக்கு வந்த நானோ காரின், தங்கமாடலின் தயாரிப்புப் பெறுமதி 22 கோடி ரூபா. இந்த கார் விற்பனைக்கு அல்ல. நானோவின் விளம்பரத்துக்கான காட்சிப்படுத்தலுக்கு மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலான செய்தி. இந்தியா ஏழைநாடல்ல, ஏழைகளின் நாடு என்பதைச் சொல்லாமல் சொல்லும் அரசியல் ஆடம்பரங்கள், தங்கக் கோவில்களுடன், நானோவின் தங்கக் காரையும் சேர்த்துக் கொள்ளலாமோ..?
இந்தக் காரும் அதேஇந்தியாவில்தான்..

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF