Saturday, September 24, 2011

நிலவைத் தொடும் பில்கேட்ஸ் சொத்து மதிப்பு!!!!!


பொதுவாக நம்மில் பலர் தினமும் சலித்துக் கொள்வதுண்டு என்னடா இது வாழ்க்கை என்று இது ஒரு ரகம், இதற்கு முக்கியக் காரணம் பணம் என்பார்கள் . இன்னும் சில பிறந்தால் இவன் போல் பிறக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்வார்கள் இதற்கு காரணம் பணம் என்பார்கள். இப்படி பணத்திற்கு தினமும் பல முகங்களை பொறுத்து நம்மில் ஒவ்வொருவரும் ஒரு கோணத்தில் வாழ்க்கையை நகர்த்தி வருகிறோம் . அப்படிப்பட்ட இந்த பணம் அதிகம் இருக்கும் உலகத்தின் தலை சிறந்த சாதனையாளரைப் பற்றிய பதிவுதான் இது என்று சொல்லலாம் . இந்த மனிதரைப் பற்றி தெரியாதவர்கள் இன்று மிகவும் குறைவு என்று சொல்லலாம் இவரின் முயற்சி இல்லை என்றால் இன்று உலகமே பின்தங்கிபோய் இருக்கும். ஆம் நண்பர்களே..! அவர் வேறு யாரும் இல்லை உலகத்தின் உயர்ந்த பணக்காரகளில் பல முறை முதல் இடம் பிடித்து உலகையே இன்று தன்பக்கம் திரும்ப செய்த பில்கேட்ஸ் (Bill Gates microsoft) தான் அவர் . இவரைப் பற்றி சொல்லத் தொடங்கினால் இவரின் சொத்தின் மதிப்பை விட நீளமாக செல்லும் இந்த தகவல். 

அமெரிக்காவின் முதல் 400 கோடீஸ்வரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.400 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் கோடி. உலகம் முழுவதும் கோடீஸ்வரர்கள் பட்டியலை பொருளாதார இதழான போர்ப்ஸ் ஆண்டுதோறும் வெளியிடுகிறது.இந்த ஆண்டின் அமெரிக்க முன்னணி கோடீஸ்வரர்கள் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில் 400 பேர் இடம்பெற்றுள்ளனர்.பட்டியலில் ரூ.2.83 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
கடந்த ஓராண்டில் மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ.20,000 கோடி உயர்ந்தது. ரூ.1.75 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவன தலைவர் வாரன் பப்பெட் 2வது இடம்பெற்றுள்ளார்.நிதி முதலீட்டு குழுமத்தை நடத்தி வரும் அவரும், பில்கேட்சும் ஒன்றாக இணைந்து உலக அளவில் சமூக நல திட்டங்களுக்கு அதிக நன்கொடை அளித்து வருகின்றனர்.
அத்துடன் கடந்த ஆண்டை விட தனது வருமானத்தை பெருமளவு குறைத்துக் கொண்டதால் அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் 20 பேரைவிட முதல் முறையாக குறைவாக வரி செலுத்தினார். கடந்த ஓராண்டில் சொத்து மதிப்பு ரூ.28,000 கோடி அதிகரித்தது.
ரூ.1.48 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் ஆரக்கிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி லேரி எலிசன் 3ம் இடத்தில் இருக்கிறார்.பைனான்சியர் ஜார்ஜ் சாரோஸ் ரூ.99,000 கோடி சொத்து மதிப்புடன் 7ம் இடமும், பேஸ்புக் சமூக இணைப்பு இணைய தள நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ரூ.84,000 கோடியுடன் 14வது இடமும் வகிக்கின்றனர்.
அமெரிக்க கோடீஸ்வரர்கள் 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் கோடி என்றும் போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ்.
 ம்மில் பலர் தினமும் ஒரு ரூபாய் என்று சொல்லப்படும் நாணயத்திற்காக தினமும் எப்படியெல்லாமோ உழைத்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் இந்த மனிதரின் சட்டைப் பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் ஒரு வேலை தவறி கீழே விழுந்துவிட்டால் அதை குனிந்து எடுப்பதற்குள் பல மில்லியன்கள் இவருக்கு நஷ்ட்டமாகிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுமட்டும் இல்லைங்க இன்னும் ஒரு தகவல் இருக்கு அது இவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு எவ்வளவோ என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக ஒரு திறவுகோல் என்று சொல்லலாம்.

மக்கு தெரிந்த வரை உலகத்தில் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் என்றால் அதிக பட்சமாக நடிகர்களைப் பற்றிதான் தெரியும் ஆனால் இவரின் ஒரு நிமிட வருமானம் பற்றி தெரிந்தாலே நமக்கெல்லாம் தலை சுற்றல் வந்துவிடும் . பில்கேட்ஸ் (Bill Gates ) ஒரு விநாடியில் 350 அமெரிக்க டொலர்களை சம்பாதிக்கிறார். அதாவது இவரது ஒரு நாளைய சம்பாத்தியம் 25 மில்லியனை தாண்டும் என்கிறார்கள். அதுமட்டும் இல்லைங்க இவரின் ஒரு வருட வருமானம் 10.8 பில்லியனுக்கும் அதிகம் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.

த்துடன் மட்டும் நின்று விடவில்லை இந்த மனிதனைப் பற்றிய பிரமிப்புகள் இன்னும் இருக்கிறது. ஒருவேளை பில்கேட்ஸ் வைத்திருக்கும் மொத்தப் பணத்தையும் ஒரு டாலர் அளவில் உருவாக்கினால் அதை வைத்து பூமியில் இருந்து நிலவு வரை பாதை அமைத்து பத்திற்கும் அதிகமானவர்கள் சுதந்திரமாக வந்து போகலாம். அப்படி இந்தப் பாதை அமைப்பது என்றால் இதற்கு 2000 ஆண்டுகளுக்கும் அதிகம் ஆகலாம் என்று ஒரு கருத்துக் கணிப்பு சொல்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் ,

ப்பொழுது ஒவ்வொரு நாடும் தனது பொருளாதாரத்தில் தன்னை உயர்ந்த தரவரிசையில் கொண்டுவர பல விதமான முயற்சிகளை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு வேலை பில்கேட்ஸ் தனக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கினால் இப்பொழுது இருக்கும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பணக்கார நாடுகளின் பட்டியலில் பத்து இடங்களுக்குள் பில்கேட்ஸ் வந்துவிடுவார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . ப்படி இன்னும் இவரின் சொத்து மதிப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டு இருப்பது போல் அவரின் சொத்தின் மதிப்பு நிலவைத் தாண்டும் என்பது உண்மை.முயற்சி செய்து நம்பிக்கை இழக்காமல் உழைத்தால் நாளை நாம் ஒவ்வொருவரும் ஒரு பில்கேட்ஸ் தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF