Saturday, September 17, 2011

உடலிலுள்ள நீர் எப்படி முறைப் படுத்தப்படுகிறது?


உங்கள் இல்லங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வரும்போது, அவசியமான காரியங்கள் எவை யெனப் பகுத்துப் பார்த்துத்தானே காரியமாற்றுவீர்கள்.உதாரணமாக, குடிப்பதற்கும் சமையலுக்கும் முதற்கட்ட முன்னுரிமை கொடுத்துப் பின், குளிப்பதற்கும், கழுவுவதற்கும் தண்ணீரைக் குறைத்துத்தானே நீங்கள் பயன்படுத்துவீர்கள்.அதைப் போலவே, குறைந்த தண்ணீரைச் சரீரம் பெறும்போது, எல்லா உயிரணுக்களிலும் அடங்கியுள்ள ஹிஸ்டாமின் என்ற வேதியியல் சேர்க்கை, உடனடியாகவே ஒரு நீரமைப்பை உருவாக்கிக் கொள்ளும்.இந்த அமைப்பு, உடலில் உள்ள அவயங்களுக்கு முன்னுரிமை அளித்து & அதாவது மூளை, இதயம் நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு நீரை விநியோகம் செய்யும்.


ஹிஸ்டாமின், நரம்பியல் செய்தி சாதனம் என்றொரு வேதியியல் முறையினை இயக்குகின்றது. இந்த வேதியியல் பொருட்கள், நரம்பு மண்டலங்களில் உந்தும் சக்திகளை மாற்றி அமைத்தோ அல்லது உள்ளே அனுப்பி வைப்பது போன்ற வேலைகளைச் செய்யும்.அதேபோல் இந்தச் சாதனம், தண்ணீரை உள்ளே எடுப்பதையும் முறைப்படுத்தும் துணை அமைப்புகளையும் இயல்பாகச் செய்கின்றன.இந்தத் துணை அமைப்புகள் க்ஷிணீsஷீஜீக்ஷீமீssவீஸீ, ஸிமீஸீவீஸீணீஸீரீவீஷீ - sமீஸீsவீஷீஸீ போன்ற இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு, தண்ணீரை உள்ளே எடுப்பதையும், அதனை விநியோகம் செய்வதையும் சரியாகவே முறைப்படுத்துகின்றன.


வாசோபிரஸ்ஸின் என்பது ஒரு உட்சுரப்பியாகும். இது சிறுநீரகங்கள் உள்வாங்கும் தண்ணீரைக் கூடுதலாக்கும் வேலையைச் செய்கின்றன.சிறுநீர் உற்பத்தியைக் குறைக்கச் செய்துவிடும். ரெனின் என்பது (ஒருவகை செரிமானப் பொருளாகும்.) என்சைம் ஆகும்.இது சிறுநீரகங்களில் சேமித்து வைக்கப்படுபவையாகும். எப்பொழுதெல்லாம் இரத்த அளவு குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த ரெனின் தொடர்ச்சியான இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ஒரு இரசாயனப் படிவத்தை உற்பத்தி செய்கின்றன.இதுவே ஆஞ்சியோசென்சன் என்பதாகும். இந்த ஆஞ்சியோசென்சன், சிறுநீரகங்கள் வடிகட்டும் இரத்த விகிதாச்சாரத்தைக் குறைக்கச் செய்கின்றன. 


இப்படி குறைத்து வடிகட்டியதன் விளைவால், தண்ணீரை மேலும் தக்க வைக்க அது உடலுக்கு உதவி செய்கின்றன.வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில், உடம்பின் நீரோட்டம் மூன்று நிலைகளில் இயக்கப்படுகின்றன. அவை, ஒன்று & ---பிறப்பிற்கு முன்; அடுத்து பிறந்ததற்கும் பருவ வயதை அடைவதற்கும் இடையில்; மூன்றாவதாக & வாலிபப் பருவ காலத்தில்.ஜனனத்திற்கு முன்பு, உலகம் காணாத குழந்தை, தனது வளர்ச்சிக்காகக் கூடுதல் தண்ணீர் தேவையெனக் கருதும்போது, தனது தாய்க்கு உரிய அறிவிப்புகளை சைகைகளை அனுப்பி வைக்கும். அப்படியொரு சைகை வராமல் இருந்தால் கூட,  குழந்தை தேவையை தாயாரே அனுபவித்து, உணர்ந்து கொள்வார். கருவுற்ற தாயாருக்கு காலையில் ஏற்படும் உடல் கோளாறுகளுக்கு, தனக்கான கூடுதல் நீர்த் தேவையின் அடையாளத்தினை, வெளிவராத  குழந்தை காட்டும் அறிகுறிதான் இது.


தண்ணீர் விநியோகத்தின் மேம்பாட்டுத் தன்மை, இருபதாம் வயதில்தான் உடலின் உச்சகட்டத்தை அடைகின்றது. பின்னர் இது படிப்படியாக இறங்குமுகமாகவே வாழ்க்கையில் இருக்கிறது.எனவே வயது ஏறும்பொழுது, தாக உணர்வும் காலமுறையாக தணிந்து கொண்டே இருக்கும். இதனால்தான் வயதான காலத்தில், ஒருவேளை போதிய தண்ணீர் எடுக்காத காரணத்தினால் தான், உயர் இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி போன்ற அச்சமூட்டும் நோய்கள் தாக்கத் தொடங்குகின்றன. தேநீர், காபி, மது, கரியமில வாயு கலந்த பானங்களை நீங்கள் வழக்கமாக உட்கொள்வதால், வாழ்வின் கடைசிப் பகுதியில், உடலின் நீரோட்டத்தை வெகுவாகவே பாதிக்கச் செய்துவிடுகின்றன.


உடலின் பல்வேறு அவயங்களில் காணப்படும் திசுக்களின் உள்ளேயும் உள்ள தண்ணீரின் விகிதாச்சாரம் மிக முக்கியமானதாகும். வயது கூடும் போதெல்லாம் திசுக்களின் தண்ணீர் கொள்ளளவு குறைந்து கொண்டே போகும்.ஒவ்வொரு திசுவிலுள்ள தண்ணீரும் வழக்கமான வேலையினை நெறிப்படுத்துவதில் சரியான பங்கை ஆற்றுவதால், தண்ணீர் பற்றாக்குறை ஒரு சில வேலைகளைச் செயலற்றுப் போகச் செய்துவிடும். வேலைகள் முடங்கிப் போகும் போது, உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றிவிடும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF