வழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு கிரீம்களை தடவிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை.
யேல் பல்கலைகழக ஆய்வாளர்கள் முடிவளர தூண்டும் ஸ்டெம் செல்களை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த ஆதார செல் தோலின் கொழுப்பு அடுக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த செல்களின் மூலக்கூறுகளின் சமிஞ்ஞை தான் முடிவளர்வதற்கு உதவுகிறது என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். இவர்களது இந்த அற்புதமான ஆராய்ச்சி முடிவு செல் குறித்த இதழில் செப்டம்பர் 2ம் திகதி பதிப்பில் வெளியாகியுள்ளது.
முடியின் வேர்ப் பகுதியில் உள்ள ஸ்டெம் செல்களை தூண்டுவதற்கு தோலில் உள்ள கொழுப்புச் செல்களை சமிஞ்ஞை தரச் செய்ய வேண்டும் என ஆய்வுக் குழுவின் மூத்த நபரான மூலக்கூறு செல் உயிரியல் மேம்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் வாலரே ஹார்ஸ் கூறுகிறார்.
வழுக்கை தலையுடன் உள்ளவர்களுக்கு முடி வேர்க்கால்பகுதி உள்ளது. அதனை தூண்டும் போது அந்த முடி சீக்கிரமாக வளர்ந்து தலை முழுவதும் பரவி விடும்.