


காலத்தின் கோலத்தால் உலகம் சந்திக்கும் விந்தைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. புதியஉலகத்தின் புதுமை விரும்பிகளுக்காக வருகிறது இன்னுமொரு வினோத தகவல். குழந்தை பிறந்தால் அதற்கு முதல் மருந்தும் உணவும் தாய்ப்பால்தான் என்று கூறுவார்கள்… ஆனால் கம்போடியாவில் 20 மாதக்குழந்தை நேரடியாக பசுவிடம் இருந்து மடிப்பால் உறிஞ்சிக்குடிக்கும் சம்பவம் அனைவரையும் வியப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- கம்போடியாவில் பிறந்தது இந்த 20 மாதங்களே ஆனது ” தா சோபட்” எனும் குழந்தை. இதனுடைய பெற்றோர்கள் வேலை தேடுவதற்காக தமது கிராமத்தினை விட்டு ஜூலை மாதம் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
செல்லும் போது தனது 20 மாதமான குழந்தையை தங்களது பெற்றொருடன் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் குறித்த குழந்தை அங்குள்ள பசுவின் கீழ் தானே சென்று அதன் மடியினை கவ்வி பால் அருந்தியுள்ளது. பசுவும் தாய்மைக்கு பறைசாற்றும் முகமாக எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படுத்தாமல் குழந்தைக்கு பால் கொடுத்து வருகின்றது. தமது பேரக்குழந்தையின் செயற்பாட்டை கண்ட ” செய்ம் றீப்” இதை கண்டித்துள்ளார். இருந்தும் குழந்தை தொடர்ச்சியாக அடம்பிடித்து மறுத்துள்ளது. எனவே குழந்தையை அப்படியே விட்டுள்ளார்கள். எனினும் இதுபற்றி கருத்து தெரிவித்த குழந்தையின் தாத்தா பாட்டி குழந்தை தனது மடிப்பாலை குடிப்பது பற்றி பசு கவலைப்படவில்லை இருந்தாலும் குழந்தையின் ஆரோக்கியத்தை நினைக்கும் போது எங்களுக்கு கவலையாக இருக்கிறது என்றார்கள்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF