Tuesday, September 13, 2011

பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: மைக்ரோசொப்ட்டுடன் இணையும் செம்சுங்?


தென்கொரிய நிறுவனமான சம்சுங் மற்றும் மைரோசொப்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய டெப்லட் கணனியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புதிய கணனியானது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 இனைக் கொண்டியங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது இம்மாதம் 13- 16 வரையான திகதிகளில் நடைபெறவுள்ள (Microsoft's BUILD developers ) மாநாட்டில் அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சம்சுங் கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினையே தனது டெப்லட் கணனிகளில் உபயோகித்து வந்தது. இம்முறை விண்டோஸ் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு இதனை சம்சுங் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF