Monday, September 12, 2011

சனிக்கிரகத்தை சுற்றிலும் ஒளிரும் வளையங்கள்.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது பெரிய கிரகமான சனிக்கிரகம் விசேடமான ஒளிரும் தன்மையுடன் விண்வெளி ஆய்வாளர்களை கவர்ந்துள்ளது.இந்த கிரகத்தின் வெளிப்புற பகுதிகளில் விளக்குகள் தரும் வெளிச்சத்தை போன்ற பளிச் என ஒளிரக்கூடிய வளையங்கள் காணப்படுகின்றன. இந்த அற்புதமான வளைய காட்சியை காசினி ஹியூஜென்ஸ் விண்கலம் பிடித்து அனுப்பி இருந்தது.
இந்த சனிக்கிரகம் நமது பூமியில் இருந்து 8000 லட்சம் மைல் தொலைவில் அமைந்துள்ளது. சனிக்கிரகம் இரவில் ஒளிரும் வளையங்களுடன் வானில் கண்காட்சி நடத்தி கொண்டு இருக்கும் போது விண்கல கமெரா படம்பிடித்து தள்ளியது.இந்த புகைப்படத்தில் உள்ள ஒளிரும் கிரகத்தை கூர்ந்து பார்க்கும் போது இடது புறத்தில் ஒரு சிறிய புள்ளியாக நமது கிரகம் இருப்பது தெரியவரும். இந்த காட்சி வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF