Wednesday, September 21, 2011

சிறிய கோள்களில் காணப்படும் பாரிய கறுப்பு ஓட்டைகள்: ஆய்வாளர்கள் தகவல்.


நமது வான்பகுதியில் பால்வீதி மண்டலம் எனப்படும் நட்சத்திர கூட்டங்கள் அதிகளவில் உள்ளன.


நமது பூமியிலிருந்து சிறிய தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் பெரும் திறள் கருப்பு ஓட்டைகள் இருப்பதை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தொலைதூர பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதற்காக ஹப்பில் விண்வெளி நுண்ணோக்கியை பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது சிறிய நட்சத்திர கூட்டங்களில் பெரிய கருப்பு ஓட்டைகள் வளர்வதை கண்டறிந்தார்கள். சிறிய பால்வீதி மண்டலத்தின் புதிய பரிணாமத்தின் போது மத்திய கருப்பு ஓட்டைகள் உருவானதைக் கண்டறிந்தனர். 


இந்த ஆய்வின் மூலம் மிகச் சிறிய அடர்த்தி உள்ள நட்சத்திர கூட்டங்களிலும் மிக பெரிய கருப்பு ஓட்டைகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர். அனைத்து பெரும் பால்வீதி மண்டலங்களிலும் ஒரு மைய பெரிய கருப்பு ஓட்டைக் காணப்படுகிறது. அது மிகவும் வெளிச்சம் மிக்கதாக இருக்கிறது. இந்த ஆய்வினை டிரம்ப் மற்றும் இணை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இந்த ஆய்வுப் பகுதி 1000 கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் நடைபெற்று உள்ளது. நாங்கள் 1000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் பிரபஞ்சத்தினுடைய இளம் காலத்தை பார்வையிட்டோம். அப்போது இந்த மிகச் சிறிய இள நட்சத்திரக் கூட்டங்களைக் காண முடிந்தது என டிரம்ப் தெரிவித்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF