Wednesday, September 14, 2011

பொய் சொல்வதனை கண்டு பிடிக்கும் புதிய கருவி.


பொய் சொல்வோரை கண்டு பிடிப்பதற்கு, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கமரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறித்த கமராவின் ஒளிக்கற்றைகளை முகத்தில் ஒளிரச் செய்வதன் மூலம் நபர் ஒருவர் பொய் சொல்கின்றாரா அல்லது மெய் சொல்கின்றாரா என்பதனை கண்டு பிடிக்க முடியும்.அதி நவீன தேர்மல் இமாஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய கணனி முறைமையின் மூலம் இந்த கமரா இயங்குகின்றது.

இந்த அதி நவீன கருவி பாதுகாப்பு தரப்பினருக்கு மிகவும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.இந்தக் கமராவின் மூலம் மூன்றில் இரண்டு வீதமான நபர்களின் முக பாவனையின் அடிப்படையில் உண்மை பேசுகின்றார்களா என்பதனை கண்டறிய முடியும் என பிரித்தானிய விஞ்ஞானி ஹசன் உகேய்ல் தெரிவித்துள்ளார்.

பிரட்போர்ட் மற்றும் அப்ரிஸ்ட்விச் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் பின்னர் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கண் அசைவு, நகம் கடித்தல், உதடுகளை குவித்தல், மூக்கை சுருக்குதல், பலமாக மூச்சு விடல் உள்ளிட்ட பல்வேறு முக உணர்வு வெளிப்பாடுகளைக் கொண்டு நபர்கள் உண்மை பேசுகின்றார்களா அல்லது இல்லையா என்பதனை கண்டு கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF