
விண்டோஸ் ஓபரேடிங் சிஸ்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது லினக்ஸ் மிகச் சிறந்த ஓபரேடிங் சிஸ்டமாக கருதப்படுகிறது.
1. வைரஸ் அபாயம் கிடையாது: பெரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32 நிரல்களை செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம்.
2. திற-மூலமென்பொருள்: விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source). எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.
3. புத்திசாலி: விண்டோஸில் நாம் புரோகிராம்களை கணணியில் இன்ஸ்டால் செய்யவும், பயன்படுத்தவும் மட்டுமே கற்க முடியாது. ஆனால் லினக்ஸில் அவற்றை டெர்மினலில் கட்டளைகள் மூலமாக அமைக்க, இயக்க கற்றுக்கொள்ளலாம். எனவே GUI எதேனும் பிரச்சனை இருந்தாலும் நாம் அவற்றை சுலபமாக கையாளலாம்.
4. இலவச மென்பொருட்கள்: லினக்ஸில் பயன்படுத்தப்படும் அனைத்து மென்பொருள்களும் இலவச மற்றும் திற-மூல மென்பொருட்கள். விண்டோஸிர்க்கு மாற்றான பல மென்பொருட்கள் லினக்ஸில் இலவசமாக கிடைக்கிறது. எனவே எதற்கும் நாம் கவலைபட தேவையில்லை.
5. பயன்படுத்துவது சுலபம்: ஆம் உண்மை தான். விண்டோஸுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் மிக சுலபம். விண்டோஸிலிருந்து வந்தவர்கள் வெகு சுலபமாக லினக்ஸ் பயன்படுத்த கற்றுகொள்ளலாம்.
6. லினக்ஸ்-சமூகத்தின் உதவி: நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸின் உபுண்டு, பிடோரா போன்ற எந்த வகையானாலும் அந்த்ந்த சமூகத்தின் உறுப்பினர்கள் உங்கள் சந்தேகங்களையும், வினாக்களையும் விரைவில் சரிசெய்ய உதவுவார்கள்.
7. அழகான முகப்பு: விண்டோஸின் ஏரோ அமைப்பு தான் அழகு என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள். ஒரு முறை உபுண்டுவின் compiz இனை அமைத்து பாருங்கள். 3டி எபக்ட்களை கொண்டிருக்கும் அதனை விட்டுவிட்டு வர மனம் வராது.
8. சுலமான அப்கிரேட்: லினக்ஸின் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக மென்பொருட்களை அப்டேட் செய்யவும், புதிய மென்பொருட்களை இணைக்கவும் முடியும். விண்டோஸ் போல் இணையத்தில் மணிக்கணக்காக தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.
9. நமக்கு வேண்டியவாறு அணைத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.
10. உபுண்டுவினை நம்முடைய கணணியில் அமைக்காமலே அதனை சீடியிலிருந்து நேரடியாக உபயோகித்து பார்க்கலாம். உபுண்டு சீடியினை டிவிடி டிரைவில் போட்டு அதிலிருந்து பூட் செய்தாலே போதும்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF
