Monday, September 5, 2011

3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மிருகத்தின் படிமங்கள் கண்டுபிடிப்பு.


திபெத்தில் சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 36 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய காண்டாமிருகத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவை உடலில் ரோமங்களுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், பனிப் பிரதேசங்களில் வாழ்பவையாக இருந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சீனாவில் உள்ள அறிவியல் அகடமி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து 2007ம் ஆண்டு இதே இடத்தில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் இதுபோன்ற மிருகங்களின் எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ளனர்.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியக அதிகாரிகள் சுஜியாமிங் வேங் தலைமையில் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் தான் காண்டாமிருகத்தின் மண்டை ஓடு, கீழ்த்தாடை உள்ளிட்ட படிமங்களை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் 3 குதிரைகளின் படிமங்கள், செம்மறி ஆடுகள், 25 அரியவகையை சேர்ந்த பாலூட்டிகளின் எலும்புக்கூடுகளையும் இங்கு கண்டுபிடித்துள்ளனர். இவ்வகை உயிரினங்கள் திபெத், ஆர்டிக், அன்டார்டிக், போன்ற பனிப் பிரதேசங்களில் வாழ்பவை என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
இதுகுறித்த ஆய்வில் வெளியாகி உள்ள தகவல் வருமாறு: உலகிலேயே திபெத்தின் உயரமான மலைப்பகுதிகளில் தான் அதிக குளிர் நிலவுகிறது.
ஆய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள காண்டாமிருகத்தின் படிமங்கள், அவை வித்தியாசமான முறைகளை பின்பற்றி வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. மிகவும் பிரமாண்டமாகவும் ஆனால் சோம்பேறியாகவும் இருந்திருக்கும் என்றும் கருதப்படுகிறது.
பனிப்பிரதேச குளிரை தாங்கும் விதமாக இவற்றின் உடலில் ரோமங்கள் இருந்ததற்கான சாத்தியங்களும் உள்ளன. ஐஸ் ஏஜ் காலத்தில் வாழ்ந்த பூனை குடும்பத்தை சேர்ந்த இவை, தன் கொம்பை பனிப்பாறைகளை குத்தி உடைக்க பயன்படுத்தி இருக்க வேண்டும்.
இங்கு மேலும் பல அரிய உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் ஆய்வுப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF