உடலில் கட்டி வளர்ச்சி வேகத்தை கண்டறிவதற்காக ஜேர்மனி ஆய்வாளர்கள் புதிய வகை மைக்ரோசிப் சென்சாரை உருவாக்கி உள்ளனர்.
இந்த மைக்ரோசிப் உடலில் கட்டி வளரும் இடத்தில் வைக்கப்படும். அப்போது கட்டி வளர்ச்சி அடைவதை கண்டுபிடிக்க அருகாமையில் உள்ள திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை இந்த கருவி கண்டுபிடித்து கட்டி நிலையை தெரிவிக்கும்.
இந்த முடிவுகள் வயர்லெஸ் மூலமாக நோயாளியை கவனிக்கும் மருத்துவருக்கும் சென்றடையும். மருத்துவமனை ஸ்கேன் செலவை குறைக்கும் விதமாக இந்த மைக்ரோசிப் பயன்படுகிறது.
இந்த ஆய்வாளர்கள் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருந்தை நேரடியாக செலுத்தும் வடிவத்தை உருவாக்கவும் முனைந்து உள்ளனர்.
புற்றுநோய் கட்டியால் பாதித்த நோயாளிகளுக்கு உதவுவதற்காக இவர்கள் புதிய கருவி ஒன்றை உருவாக்கும் பணியில் உள்ளனர்.
மூனிச் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் மருத்துவ பொறியாளர்கள் இந்த மைக்ரோசிப் சென்சாரை உருவாக்கி உள்ளனர். தண்டுவடம் போன்ற சில இடங்களில் வளரும் கட்டியை அகற்றுவதற்கு மிக சிரமம் ஆகும். அந்த பகுதியில் சிகிச்சை அளிக்க இவர்களது கருவி உதவும்.