அமெரிக்க விமானங்கள் ஊடுருவல் தொடர்பான செய்திகளை விமானப்படை வெளியிடக்கூடாது! பாதுகாப்பு செயலர் உத்தரவு.
அமெரிக்காவின் போர் விமானங்கள் சிறிலங்கா வான்பரப்பில் ஊடுருவியது தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு சிறிலங்கா விமானப்படைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச விமானப்படை அதிகாரிகளுக்கு இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் அமுலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு அமைய அதியுயர் பாதுகாப்பு வலயமும் ரத்தாவதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னணி வார இதழ்களில் ஒன்றான சண்டே லீடர் பத்திரிகையை அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்கள் கொள்வனவு செய்ய உள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் தொடர்பலான வழக்கு விசாரணை இன்று 53ம் தடவையாக நடைபெற்றது.
வன்னி இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் புலிப்போராளிகளில் மறுவாழ்வளிக்கப்பட்டு இன்னமும் விடுதலை செய்யப்படாது உள்ளவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் டோனர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளை வேவுபார்த்த சீன உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் துறைமுகத்திற்குள் நுழைந்துள்ளதாக இந்தியாவின் என்.டி.ரீ.வி. ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இலங்கை கடற்படையும் துறைமுக அதிகாரிகளும் மறுத்துள்ளனர்.
மைக்கேல் ஜாக்சனின் இறப்பு வழக்கில் அவரது தோல் மருத்துவரையும் சேர்த்து விசாரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தடைவிதித்தது.
இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சீனாவின் கியாங்டாங் ஆறு திடீரென ஆர்ப்பரித்து பாய்ந்ததில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
ஜப்பான் நாட்டில் தேசிய அளவில் நிலநடுக்க விழிப்புணர்வு ஒத்திகை வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதுவிதமான தகவல்களையும் வெளியிடக் கூடாது என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதால் அதிஉயர் பாதுகாப்பு வலயமும் ரத்து!- பாதுகாப்புச் செயலாளர்.
பத்து அமெரிக்கப் போர் விமானங்கள் சிறிலங்கா வான்பரப்பில் கடந்த மாதம் ஊடுருவிய செய்தியை சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய உறுதி செய்திருந்தார்.
ஆனாலும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும், சிறிலங்காவின் குடியியல் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரட்ணவும் அத்தகைய ஊடுருவல்கள் எவையும் நிகழவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே, இந்த ஊடுருவல் பற்றி எந்தக் கருத்தையும் வெளிடக் கூடாது என்று கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
இது மட்டுமன்றி சிறிலங்கா விமானப்படைக்கு கொள்வனவு செய்யப்படும் புதிய விமானங்கள் மற்றும் கருவிகள் தொடர்பான தகவல்களை வெளியிடவும் கோத்தபாய ராஜபக்ச தடை விதித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படைக்கு ரஸ்யாவிடம் இருந்து 14 எம்.ஐ 171 உலங்குவானூர்திகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
போர் முடிவுக்கு வந்த பின்னர், அதிகளவு உலங்கு வானூர்திகளை சிறிலங்கா கொள்வனவு செய்வது குறித்து பல்வேறு விமர்சனங்களும், கருத்துக்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிங்கள நாளேடு ஒன்றுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யானை கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதியுயர் பாதுகாப்பு வலயத்தை நடைமுறைப்படுத்தும் அவசியம் இல்லையென்று தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, ஆகையால் அதற்கான புதிய கட்டளை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான அவசியம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 4 புதிய கட்டளைகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச'வினால் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகளைத் தொடர்ந்தும் அமுலில் வைத்திருக்கவும் தடுப்புக் காவலில் இருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்துக் கொள்ளவும் ஜனாதிபதியினால் இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச'வுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 27 ஆவது சரத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் புதிய கட்டளைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையால் இந்த புதிய கட்டளைகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாக மொஹான் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இரண்டும் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பெயரிடப்பட்டிருப்பதும் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதும் அதேபோல் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்படுவதும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தான் என்பதால் அந்த ஒழுங்கு விதிகள் ரத்தாகும் அதேநேரம், அதற்குப் பதிலாக புதிய சட்டம் தேவைப்பட்டதாகவும் சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பில் நாட்டில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றில் 1100 குட்டி யானைகள் என்றும் 122 தந்தம் உடைய யானைகள் என்றும் தெரியவந்துள்ளது.
மகாவலி பகுதியை ஒட்டியுள்ள இடங்களில்தான் இலங்கையில் மிக அதிகமான காட்டு யானைகள் காணப்படுவதாகவும். இந்தக் கணக்கெடுப்பின்போது அப்பகுதியில் 1751 யானைகளைத் தாம் கண்டதாகவும் வன உயிர் பாதுகாப்பு திணைக்கலத்தின் பணிப்பாளர் ஜே. எச். டி .ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் பத்திரிகை நிறுவனத்தை கொள்வனவு செய்ய முயற்சிக்கும் அரச தரப்பு?
இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
காட்டில் இருக்கம் நீர் நிலைகளில் ஆட்களை நிறுத்தி அங்கு வந்து நீர் குடிக்கும் யானைகள் கணக்கிடப்பட்டுள்ளன.
இலங்கையில் காட்டு யானைகள் காணப்படும் இடங்கள் அனைத்திலுமாக 1553 கண்காணிப்பு நிலையங்களை அமைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதற்காக 3,600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக ரத்னாயக தகவல் வெளியிட்டார்.
குட்டி யானைகளை பிடிக்கப்போவதில்லை
குட்டி யானைகளை காட்டி இருந்து பிடிக்க இதுவரை அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.
குட்டி யானைகள் காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு கோயில்களுக்கு வழங்கப்படும் என்று இலஙை அமைச்சர் ஒருவர் பேசியது, இந்த கணக்கெடுப்பு தொடர்பில் சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைக் குறைக்க இந்த கணக்கெடுப்பில் தெரியவந்த விபரங்களைப் பயன்படுத்தப் போவதாக வன உயிர் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே. எச். டி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
375 மில்லியன் ரூபாவிற்கு சண்டே லீடர் பத்திரிகை விற்பனை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ், முஸ்லிம் மக்களை சிறுபான்மை சமூகமாக கருத முடியாது : மஹிந்த ராஜபக்ஷ.
ஜனாதிபதி குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமான அசங்கா செனவிரட்னவினால் குறித்த பத்திரிகை கொள்வனவு செய்யப்பட உள்ளதாக இணைய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைக் கொடி வழக்கு சம்பவத்தைத் தொடர்ந்து சண்டே லீடர் பத்திரிக்கைக்கு மக்கள் மத்தியில் இருந்த அபிமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் 75 வீதமான பங்குகளை அசங்க செனவிரட்ன கொள்வனவு செய்துள்ளதாகவும், இதற்கான பணத்தை அரச வங்கியொன்றில் அவர் கடனாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிகையின் பெயரை மாற்றுவதற்கும் ஆசிரியர் பீடத்தை மாற்றுவதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தமிழர்கள், முஸ்லிம் மற்றும் ஏனைய சமூகத்தினரை ஒன்றிணைத்து ஐக்கிய நாடொன்றை உருவாக்குவதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதான நோக்கம்.
லசந்த விக்ரமதுங்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அறுபதாம் ஆண்டு விழா இன்று அலரி மாளிகையில் நடைபெற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிளவு படுத்த சில தரப்பினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.
ஒரே நாடு என்ற கொள்கைக்காக அரசாங்கம் எதனையும் விட்டுக்கொடுக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
குற்ற விசாரணைப் பிரிவினர் இன்றைய தினம் நீதிமன்றில் சில தகவல்களை முன்வைத்தனர்.
இதன்போது லசந்த விக்ரமதுங்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள முன்னாள் புலிச் சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு அமெரிக்கா அழுத்தம்.இதன்போது லசந்த விக்ரமதுங்க துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு விசாரைண எதிர்வரும் 15ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால் லசந்த உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டதனால் லசந்த உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்ததா?- துறைமுக அதிகாரிகள், கடற்படை மறுப்பு.
மேலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச'வின் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட தீர்மானத்துக்கும் வரவேற்பளிப்பதாக தெரிவித்துள்ள அவர், இச்சட்டம் நீக்கப்பட்டமையானது இலங்கை வாழ் மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை சிறப்புற அமைத்துக்கொள்ள உதவும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை முன்வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடி ரோலர் படகை போல் பயணித்த சீனாவின் உளவு சேவைக்குச் சொந்தமான கப்பல் பல்வேறு தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாகவும் என்.டி.ரீ.வி. குறிப்பிட்டுள்ளது.
மைக்கேல் ஜாக்சனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் விசாரிக்க தடை.
குறித்த கப்பலை இந்திய கடற்படையினர் கண்காணித்ததையடுத்து அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தமானின் சிறிய தீவுக்கு அருகில் மீன்பிடியில் ஈடுபடும் தோரணையில் குறித்த கப்பல் தகவல்களை திரட்டிக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த மாதத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படும் இந்த கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், இத்தகைய படகொன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தமை தொடர்பாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இலங்கைக்கு வந்துசெல்கின்ற சீன கப்பல்களில் ஆய்வுகூடங்களோ உளவுபார்க்கும் கருவிகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
அதேவேளை, வேவு பார்க்கும் சீன கப்பல் கொழும்பு துறைமுகத்துக்குள் ஊடுருவியதாக வெளிவந்த செய்திகளை இலங்கை கடற்படையும் துறைமுக அதிகாரிகளும் மறுத்துள்ளனர்.
மைக்கேல் ஜாக்சனின் இறப்பு வழக்கில் அவரது தோல் மருத்துவரையும் சேர்த்து விசாரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தடைவிதித்தது.
பிரபல பொப் பாடகரான மைக்கேல் ஜாக்சன் இறப்பிற்கு அதிக அளவில் அளிக்கப்பட்ட தூக்க மாத்திரையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக அவரது மருத்துவர் கன்ராடு முரேயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மைக்கேல் ஜான்சன் பல முறை தோல் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் தோல் நிபுணரான அர்னால்டு கெலீன் என்பவரிடமும் விசாரிக்க வேண்டும் என முரேயின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். ஆனால் இதற்கு நீதிபதி மறுத்துவிட்டார்.
முன்னதாக ஜாக்சனின் இறப்பு வழக்கில் சாட்சியளித்த மற்றோரு மருத்துவரான ஆடம்ஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜான்சனுக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தவர் முரே. அவரது இறப்பிற்கு 2 மாதங்களுக்கு முன்வரை முரே தான் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
பிரோப்போ போல் மருந்தை ஜான்சன் விரும்பி உட்கொண்டு வந்தார். அதை அவர் செல்லமாக பால் என்றே அழைப்பார். இந்த மருந்தை தருமாறு ஜாக்சன் பலமுறை முரேயிடம் கேட்டுள்ளார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஜான்சனின் வழக்கில் சிக்கியுள்ள மருத்துவர் முரேயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது. அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 8ம் திகதி நடைபெற உள்ளது.
சிறைக் கைதிகளை நூதன முறையில் சித்ரவதை செய்யும் இஸ்ரேல்.இஸ்ரேல் நாட்டில் சிறைகளில் உள்ள சிறைக் கைதிகளுக்கு புதுவித தண்டனைகளை விதித்து கொடுமைப்படுத்துவதாக மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் பல நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை சிறைபிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். இவர்களை நூதன முறையில் கொடூரமாக சித்திரவதை செய்கிறார்களாம் இஸ்ரேலியர்கள்.
இதுகுறித்து மென்டிலா அரசியல் கைதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை நிறுவனமான ஷின் பெட், கைதிகளை மனம் மற்றும் உடல் ரீதியான நிலையில் கொடுமைப்படுத்துகிறது.
வெளிகாயங்களோ, தடயங்களோ தெரியாத நிலையில் அவர்களது கொடுமைகள் உள்ளன. கால்களை சேர்த்து கட்டிய நிலையில் குனிந்த நிலையில் கைகளை கொண்டு உட்கார செய்தல், கழிவறைகளில் பல மணிநேரங்கள் நிற்க வைத்தல், கூண்டிற்குள் போட்டு உறங்கவிடாமல் அதை குலுக்கிக் கொண்டே இருத்தல் ஆகிய கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது.
கொலை மிரட்டல், கற்பழிப்பு, வீட்டின் மீது தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரின் முகத்தை அழுக்கு சாக்குகளை கொண்டு மூடி விட்டு, குளிர்சாதன பெட்டிகளில் வைக்கின்றனர். தனிமைச் சிறையில் உட்கார இடமில்லாமல் பலமணிநேரம் தனிமையில் நிற்கவிடுதல் ஆகிய கொடுமைகளை செய்கிறது இஸ்ரேல் அரசு.
இதனால் மனம் மற்றும் உடலளவில் கைதிகள் கடும் பாதிப்பை அடைக்கின்றனர். சிலர் மனநோயாளிகளாகவும் மாறிவிடுவதாக தெரிகிறது. மேலும் சில கைதிகளுக்கு கழிவறையை பயன்படுத்தவும் கட்டுபாடுகள் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாலஸ்தீன அரசின் புள்ளியியல் கணக்குபடி இஸ்ரேல் நாட்டில் உள்ள 23 சிறைகளில் 7,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 300க்கும் மேற்பட்டோர் 18 வயதிற்கும் குறைவானவர்கள்.
மேலும் 37 பெண்களும், 17 பாலஸ்தீன சட்டசபை உறுப்பினர்களும் இதில் உட்படுவர். 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் அளிக்கப்படும் கொடுமைகளாலும், தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாததாலும் இறந்ததாக தெரிகிறது என அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
சீன ஆற்றில் சுனாமி தாக்கியது: மக்கள் அதிர்ச்சி.சீனாவின் கியாங்டாங் ஆறு திடீரென ஆர்ப்பரித்து பாய்ந்ததில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
கடலில் சுனாமி வருவது போல உலகின் சில பகுதிகளில் உள்ள ஆறுகளில் "டைடல் போர்" என்ற பேரலை சில நேரங்களில் வரும்.
இந்தியாவில் கங்கை, பிரம்மபுத்திரா நதிகள், அவுஸ்திரேலியாவின் ஸ்டைக்ஸ் ஆறு, இங்கிலாந்தின் ஈடன் ஆறு ஆகியவை இதற்கு உதாரணங்கள்.
சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தில் ஓடும் கியாங்டாங் ஆற்றில் செப்டம்பர் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் இந்த பேரலை நிகழ்வு நடக்கும். பூமியை சந்திரன் நெருங்கி வரும்போது ஏற்படும் ஈர்ப்பு விசை அதிகரிப்பு காரணமாக ஆறுகளில் பேரலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஆற்றில் திடீரென அலைகள் திரள ஆரம்பிக்கும். ஹோவென்ற இரைச்சலுடன் கரையை நெருங்கும். ஆர்ப்பரித்து எழுகிற அலைகள், கரையை முட்டி பல அடி உயரத்துக்கு பிரமாண்டமாக எழும். கியாங்டாங் ஆற்றில் அதிகபட்சமாக 30 அடி உயரம் வரை அலை எழுந்ததற்கான சான்றுகள் உள்ளன.
இந்த ஆண்டின் பேரலை நிகழ்வு 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதை காண நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டிருந்தனர்.
சந்திரனின் ஈர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் மக்கள் தொலைவில் இருந்தே கண்டு ரசிக்குமாறு அரசு தரப்பு எச்சரித்திருந்தது. இதை பொருட்படுத்தாமல் கரையில் ஏராளமானோர் நின்றிருந்தனர்.
எதிர்பார்த்தபடியே கியாங்டாங் ஆற்றில் அமைதி நிலவியது. சிறிது நேரத்துக்கு பிறகு அலைகள் எழும்ப ஆரம்பித்தன. கரையை நெருங்க நெருங்க ஆக்ரோஷமாக மாறின.
வழக்கம் போல கரை வரை வந்து ரிவர்ஸ் எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஷாக். அதற்கு பிறகும் ஆவேசம் அடங்காத அலை கரையையும் தாண்டி பல அடி தூரம் வரை ஊருக்குள் புகுந்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம். அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் இல்லை.
ஜப்பானில் நிலநடுக்க ஒத்திகை: 5 லட்சம் மக்கள் பங்கேற்பு.ஜப்பான் நாட்டில் தேசிய அளவில் நிலநடுக்க விழிப்புணர்வு ஒத்திகை வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
டோக்கியோ நகரின் மையப் பகுதியில் மட்டும் 100 இடங்களில் பொது இடத்தில் இந்த ஒத்திகை நிகழ்ந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான அறிவிப்பு வந்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச்செல்லும் நடவடிக்கையைப் பொலிசார் மேற்கொண்டனர்.
கடந்த மார்ச் 11-ல் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமியால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டது. அது இன்னமும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
இந்த நிலையில் ஜப்பானிய அரசு வழக்கமாக மேற்கொள்ளும் நிலநடுக்க விழிப்புணர்வு ஒத்திகை நாடு முழுவதும் மீண்டும் நடத்தப்பட்டது.
1923ம் ஆண்டு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்க அளவுமானியில் அது 7.3 அலகாகப் பதிவானது. அப்போது மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.
செப்டம்பர் முதல் திகதி நடந்த அச்சம்பவத்தை நினைவுகூரும் விதத்தில் ஆண்டுதோறும் அந்த நாளையே விழிப்புணர்வு நாளாக ஜப்பானியர்கள் கொண்டாடுகின்றனர்.
ஈராக் சிறையில் ரகசியமாக சுரங்கம் தோண்டி கைதிகள் தப்பி ஓட்டம்.
ஈராக்கில் சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட பிறகு அங்கிருந்து தொடர்ந்து தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே அங்கு அமெரிக்க படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
கைது செய்யப்படும் தீவிரவாதிகள் வடக்கு ஈராக்கில் உள்ள மொசூல் நகர மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த 14 தீவிரவாதிகள் நேற்று தப்பி ஓடிவிட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் ரகசியமாக சுரங்கம் தோண்டி பாதை அமைத்துள்ளனர். அதன் வழியாக தப்பி சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் மத்திய மொசூல் பகுதியில் அல்- பைசா லியாவில் உள்ள சிறையில் இருந்து 35 பேர் தப்ப முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த தகவலை நைனிவே மாகாண பொலிஸ் அதிகாரி மொகமத் அல் கூறியுள்ளார்.
அல்கொய்தா அமைப்பிற்கு பெண் தீவிரவாதிகள் தெரிவு: விக்கிலீக்ஸ் தகவல்.பல நாட்டின் ரகசியங்களை விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்போது அல்கொய்தா அமைப்பு 6 பெண் தீவிரவாதிகளை தேர்வு செய்யப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 4 பேர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இங்கிலாந்து மற்றொருவர் பிலிப்பினோவைச் சேர்ந்தவர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து மொத்தம் 23 பேரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இவர்களில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு மற்றும் அமெரிக்க வெளிவிவகாரத்துறை, அரேபியன் பெனின்சுலா பகுதியில் உள்ள அல்கொய்தா அமைப்பு ஆகியவற்றுக்கிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் இந்த தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அல்கொய்தா அமைப்பு எதிர்காலத்தில் பெண் தீவிரவாதிகளை தாக்குதலுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கான்பெராவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஜனவரி மாதம் ரகசியமாக அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் அனுப்பி உள்ளது.
இந்த தகவல் உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதார நிலையைக் கையாள்வதில் அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு குறித்தும் விக்லிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில் அல்கொய்தா அமைப்பு தேர்வு செய்துள்ள 23 பேர் பட்டியலை அவுஸ்திரேலியா அமெரிக்காவுக்கு அளித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் விசா அளிப்பது குறித்து கண்காணிக்குமாறு எச்சரித்தது.
இதையடுத்து இவர்களில் 11 பேர் அமெரிக்காவில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 12 பேர் கண்காணிப்புடன் அமெரிக்காவில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது.
லிபியா பற்றி எரியும் வரை போராடுவதை நிறுத்த மாட்டேன்: கடாபி ஆவேசம். "நாங்கள் பெண்கள் அல்ல, தொடர்ந்து லிபியாவில் போராட்டம் நடத்துவோம், லிபியா பற்றி எரியும் வரை போராட்டம் தொடரும்" என தலைமறைவாக உள்ள கடாபி முழங்கினார்.
லிபியாவில் 42 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்து வந்த கர்னல் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடாபி நேட்டோ படையிடமோ அல்லது புரட்சியாளர்கள் படையிடமோ சிக்காமல் தப்பி விட்டார்.
அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் அவரது ஆவேச முழக்கம் சிரியா தொலைக்காட்சியில் நேற்று ஒளிரப்பானது. அந்த உரையில்,"எனது போராட்டத்தை கைவிட மாட்டேன். நான் சரண் அடைய மாட்டேன். நாங்கள் பெண்கள் அல்ல. தொடர்ந்து போராடுவோம்" என முழங்கினார்.
லிபியாவில் போர் தொடந்து நீடிக்கும். அந்த நாடு தீப்பற்றி எரியும் என்றும் அவர் ஆத்திரத்துடன் கூறினார். 42 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தனது ஆட்சிநாளையொட்டி கடாபி இவ்வாறு உரை நிகழ்த்தினார்.
நாங்கள் ஒவ்வொரு நகரமாகவும் ஒவ்வொரு பள்ளதாக்காகவும் தாக்குதல் நடத்துவோம். அவர்கள் லிபியாவை ஆட்சி செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். அவரது ஆவேச பேச்சு ஓடியொ செய்தியாக சிரியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆனது.
போரில் காயமுற்ற வீரர்களுக்கு கூடுதல் நஷ்ட ஈடு வழங்க ஜேர்மனி அரசு முடிவு.
ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஜேர்மனி வீரர்கள் பாதுகாப்புக்கு செல்வது அதிகரித்துள்ள நிலையில் வீரர்கள் காயம் அடைவதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் காயம் அடைந்த வீரர்களுக்கு கூடுதல் நஷ்ட ஈடு அளிப்பதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது. இந்த நஷ்ட ஈடு தற்போது அளிக்கப்படும் தொகையை காட்டிலும் 2 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜேர்மனி கேபினட் புதன் கிழமை கூடிய போது காயம் அடைந்த அல்லது அது போன்ற நிகழ்வை சந்தித்த வீரர்களுக்கு அளிக்கப்படும் நஷ்ட ஈட்டை இரு மடங்கு அதிகரிப்பது தொடர்பான வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அயல் நாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் காயம் அடைந்த ஜேர்மனி வீரர்களுக்கு 150 ஆயிரம் யூரோ அளிக்கப்படும். தற்போது வீரர்கள் 80 ஆயிரம் யூரோ மட்டுமே நஷ்ட ஈடு பெற்று வந்துள்ளனர்.
அயல் நாடுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஜேர்மனி வீரர்கள் காயம் அடைந்தாலோ அல்லது அதிர்ச்சி நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போதோ தரப்படும் நஷ்ட ஈடு குறைவானதாக உள்ளது என ஜேர்மனி ராணுவம் கருதியது. எனவே காயம் அடைந்த வீரர்களுக்கு கூடுதல் நஷ்ட ஈடு அளிக்க தற்போது அரசு முடிவு செய்துள்ளது.
லிபியாவில் வன்முறை: மிருக காட்சி சாலையில் விலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவிப்பு.மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் லிபியாவில் நடைபெற்ற போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
கடந்த 10 நாட்களாக தலைநகர் திரிபோலியில் உள்ள மிருக சாட்சி சாலையில் மிருகங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கிடைக்கவில்லை. அங்குள்ள மிருகங்கள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தன.
திரிபோலி மிருக காட்சி சாலைக்கு சென்ற போது அதில் பராமரிப்பு பணி நடைபெறுவதாக கூறப்பட்டு மூடப்பட்டு இருந்தது. அங்கு வெளிப்பார்வைக்கு மிருகங்களும் தெரியவில்லை. ஆனால் கொஞ்ச தூரத்தில் சிங்கம், மான், முயல், கரடி, ஆமைகள், குரங்குகள் ஆகியவை உரிய உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் பரிதாபமான நிலையில் இருந்தன.
திரிபோலியில் கடாபி ராணுவத்தினருக்கும் புரட்சிப்படையினருக்கும் கடந்த ஒரு வாரமாக கடுமையான சண்டை நடந்துவந்தது. இந்த நிலையில் மிருக காட்சி சாலை ஊழியர்கள் 200 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் மிருக காட்சி சாலை மூடப்பட்டு இருந்தது.
200 ஊழியர்களில் 10 பேர் மட்டும் மிருகங்களின் பரிதாப நிலையை பார்த்து பணிக்கு திரும்பி ஓய்வு இல்லாமல் மிருகங்களுக்கு உணவு அளித்து வருவதாக மிருக சாட்சி சாலை பாதுகாப்பாளர் தெரிவித்தார்.
உலக பொருளாதார மீட்சிக்கு ஜி-20 நாடுகள் கட்டாயம் உதவ வேண்டும்: சர்கோசி வேண்டுகோள்.உலக பொருளாதாரத்தின் நிலைமை சீரடைய தொழில் துறை வளர்ச்சி அடைந்த ஜி-20 அமைப்பின் உறுப்பினர் நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று சர்கோசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜி-20 நாடுகளின் கூட்டம் வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அப்போது உலக பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியான முடிவு எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். தற்போது ஜி-20 அமைப்பின் தலைமையை பிரான்ஸ் வகிக்கிறது.
ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பில் இருக்கும் கால கட்டத்தில் சர்வதேச நிதியத்தில் சீரமைப்பு, பொருட்கள் விற்பனையில் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கை என முன்னோடி அம்சங்களை கொண்டு வந்தது.
வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு வளர்ச்சி மிக முக்கியமானது. பல நூறு மக்கள் வறுமை நிலையில் இருந்து மீள வேண்டும். கடன் பிரச்சனையில் இருந்தும் பற்றாக்குறையில் இருந்தும் மீள வேண்டும் என்றும் புதன் கிழமை நடந்த பிரான்ஸ் தூதர்களுக்கான முதல் மாநாட்டின் போது சர்கோசி உரையாற்றினார்.
ஆண்களுக்கு இணையாக பெண்கள் வருமானம் ஈட்ட 100 ஆண்டுகள் ஆகும்: ஆய்வில் தகவல்.பிரிட்டனில் ஆண்களுக்கு இணையாக பெண் நிர்வாகிகள் சம்பளம் பெறுவதற்கு ஏறக்குறைய 100 ஆண்டுகள் ஆகும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனில் தற்போது ஆண்டு ஒன்றிற்கு பெண் நிர்வாகிகளுக்கு 31 ஆயிரத்து 895 பவுண்ட் ஊதியம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்கள் வருடத்திற்கு 42 ஆயிரத்து 441 பவுண்ட் ஊதியம் பெறுகிறார்கள்.
ஒரே வேலையை பார்க்கும் இரு பால் ஊழியர்கள் இடையே இந்த சம்பள வேறுபாடு காணப்படுகிறது. சார்டர்ட் மானேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
2001ஆம் ஆண்டில் ஆண்களை காட்டிலும் பெண்கள் சம்பள விகிதம் அதிகரித்த போதும் மொத்த சம்பளம் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு குறைவாகவே உள்ளது. தற்போது ஆண்களை காட்டிலும் இளம் பெண் நிர்வாகிகள் அதிக வருமானம் ஈட்டுவதாக சார்ட்டர்டு மானேஜ்மென்ட் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆய்வின் படி தற்போது இளம் பெண் நிர்வாகிகள் 21 ஆயிரத்து 969 பவுண்ட் வருமானம் பெறுகிறார்கள். அவர்கள் இள நிலையில் உள்ள ஆண்கள் பெறும் சம்பளத்தை காட்டிலும் 602 பவுண்ட் கூடுதலாக பெறுகிறார்கள். இருப்பினும் 2010ஆம் ஆண்டை காட்டிலும் 2011ஆம் ஆண்டின் பெண் சம்பள வேறுபாடு பெரிய அளவில் உள்ளது.
எனவே ஆண் பெண் இரு பாலரும் ஒரே நிலையில் உள்ள பணிக்கு சமமான சம்பளம் பெறுவதற்கு இன்னும் 57 ஆண்டுகள் முதல் 98 ஆண்டுகள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லிபியா மீதான தடைகள் நீக்கம்: ஹார்ப்பர் அறிவிப்பு.லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கர்னல் கடாபியின் ஆட்சி முடிந்து விட்டது. தற்போது புரட்சிப்படையினரின் தேசிய மாற்றக்கவுன்சில் இடைக்கால நிர்வாகம் நடைபெறுகிறது.
லிபியாவில் ஜனநாயக ஆட்சி தோன்றி உள்ளதால் அந்த நாடு மீது இருந்த தடைகளை கனடா விலக்கிக் கொண்டு உள்ளது என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் நேற்று தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் லிபிய ஆட்சியாளர்களுடன் கனடா நிறுவனங்கள் தொடர்பு கொள்ளக் கூடாது என கனடா அரசு தடை விதித்தது. லிபியாவில் தற்போது கடாபி ஆட்சியாளர்கள் வீழ்த்தப்பட்டு விட்டார்கள்.
அந்த நாட்டு மக்கள் பாதுகாப்பு மாற்றத்தை பெற வேண்டியவர்களாக உள்ளனர். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் முதல் நடவடிக்கையாக லிபியா மீதான பொருளாதாரத் தடையை நீக்கி கொள்கிறோம் என பிரதமர் ஹார்ப்பர் தெரிவித்தார்.
பாரிஸ் நகரில் உலக தலைவர்கள் நேற்று கூடி லிபியா குறித்து விவாதித்த போது ஸ்டீபன் ஹார்ப்பர் இதனை தெரிவித்தார். கனடா எடுத்த முடிவை போன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளும் லிபியா மீதான தடையை நீக்க முடிவு செய்தன.
இந்த கூட்டத்தின் போது லிபியாவின் இடைக்கால பிரதமர் மகமூதை கனடா பிரதமர் ஹார்ப்பர் சந்தித்து பேசினார்.
இரண்டாம் உலகப் போரின் போது வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 7 பேர் பலி.மியான்மர் நாட்டில் இரண்டாம் உலகப் போரின் போது புதைக்கப்பட்ட குண்டு வியாழக்கிழமை வெடித்ததில் 7 பேர் இறந்தனர்.
மியான்மரின் துறைமுக நகரமான சித்வேக்கு அருகில் உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. கடற்கரையில் புதைந்த நிலையிலிருந்த குண்டுடைச் சிலர் எடுக்க முயன்றபோது அது வெடித்துச் சிதறியது. இதனால் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது இரண்டாம் உலகப் போரின் போது விட்டுச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும், இதைப்போல எவ்வளவு குண்டுகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியாது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசால் ஆளப்பட்டு வந்த மியான்மர், ஜப்பானால் சிறிது காலம் ஆக்கரமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லிபியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் சிறைபிடிப்பு.திரிபோலியின் தென்கிழக்கில் உள்ள பானி வாலித் நகரில் கடாபி ஒளிந்திருப்பதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சரண் அடையத் தயாராக இருப்பதாக கடாபியின் ஒரு மகனான சாடி அல் கடாபி தெரிவித்துள்ளார். ஆனால் சாகும் வரை போராடப் போவதாக மற்றொரு மகன் சயீப் அல் இஸ்லாம் கூறியுள்ளார். இதற்கிடையில் கடாபியின் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்தவரை எதிர்ப்பாளர்கள் நேற்று சிறை பிடித்தனர்.
கடந்த 1969 செப்டம்பர் 1ம் திகதி 27 வயதான மும்மர் கடாபி தலைமையிலான சிறு ராணுவ வீரர்கள் குழு புரட்சி மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் நினைவு நாளான நேற்று திரிபோலியின் தென்கிழக்கில் 153 கி.மீ தூரத்தில் உள்ள பானி வாலித் என்ற நகரில் கடாபி, அவரது மகன் சயீப் அல் இஸ்லாம் மற்றும் உளவுத் துறைத் தலைவர் அப்துல்லா அல் சனாஸ்ஸி ஆகியோருடன் ஒளிந்திருப்பதாக திரிபோலி ராணுவ கட்டுப்பாட்டு அறைகளின் அமைப்பாளர் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அதே போல் இடைக்கால கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹபீஸ் கோகா கூறுகையில்,"சிர்ட் நகரில் உள்ள கடாபி ஆதரவாளர்கள் சனிக்கிழமைக்குள் சரண் அடைய வேண்டும் என்ற கெடு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.
இதற்கிடையில் கடாபி அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த அப்துல் அடி அல் ஒபைடியை சிறை பிடித்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர்.
அல்ஜீரிய அரசிடம் கடாபி அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் அந்நாட்டு அதிபர் அதற்கு மறுத்ததாகவும் அல்ஜீரியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இதுகுறித்து கூறுகையில்,"கடாபி அல்ஜீரியாவில் இல்லை" என மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் கடாபி மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,"நாங்கள் சாகும் வரை போராடுவோம்" என்று கூறியுள்ளார்.
அதே தினத்தில் கடாபியின் மற்றொரு மகனான சாடி அல் கடாபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திரிபோலியில் ரத்தம் சிந்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் சரண் அடையத் தயாராக உள்ளேன். அதற்காக எதிர்ப்பாளர்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளேன். ஆனால் அவர்கள் தான் தொடர்ந்து மறுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
அதே நேரம் கடாபி ஆதரவாளர்கள் குவிந்துள்ள சிர்ட், தென்பகுதியில் உள்ள சபா, திரிபோலியின் தென்கிழக்கில் உள்ள பானி வாலித் ஆகிய மூன்று நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் நெருங்கிவிட்டனர்.
லிபியாவில் உள்ள இடைக்கால அரசுக்கு ரஷ்யா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. லிபியாவில் ஜனநாயக அரசு ஏற்படுவது குறித்தும், அங்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி தலைமையில் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட 60 நாடுகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும் கலந்து கொண்டார்.
இந்திய கப்பலை மிரட்டிய சீன போர்க் கப்பல்.வியத்நாம் அரசின் அழைப்பின் பேரில் அந்த நாட்டுத் துறைமுகத்துக்குச் சென்ற ஐ.என்.எஸ். ஐராவதம் என்ற கடற்படைக் கப்பலை சீன நாட்டுக் கடற்படைக் கப்பலொன்று மிரட்டியிருக்கிறது.
சீனக் கப்பலின் மிரட்டலுக்கு இந்தியக் கப்பல் அஞ்சி நடுங்கவில்லை என்றாலும் தென் சீனக் கடல் முழுக்க தனக்கே பட்டா போட்டுத் தரப்பட்டுவிட்டதைப் போல சீனா நடந்துகொள்ளும் போக்கை உலக நாடுகள் கண்டிக்கின்றன.
ஜூலை 19 முதல் 22 வரை வியத்நாம் அரசின் அழைப்பின் பேரில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பல் நல்லெண்ணத் தூதுப் பயணமாக தென் சீனக் கடலில் வியத்நாமின் துறைமுகங்களுக்குச் சென்றது.
அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டபோது தென் சீனக் கடலில் இந்தியக் கப்பலுக்கு மிக அருகில் வந்த சீன கடற்படைக் கப்பல்,"யார் நீ, ஏன் இங்கு வந்தாய், உன்னுடைய பெயர் என்ன, எங்களுக்குச் சொந்தமான தென் சீனக் கடலில் எங்களிடம் அனுமதி பெறாமல் எப்படி வந்தாய், இங்கு உனக்கு என்ன வேலை?" என்றெல்லாம் பலவாறாகக் கேட்டது.
வியத்நாமியத் துறைமுகத்துக்கு அந்தக் கப்பல் சென்று திரும்புகிறது என்று தெரிந்தும் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றது. இந்தியக் கப்பல் தன்னுடைய பாணியில் அதற்குப் பதில் அளித்தது. அதற்குப் பிறகே சீனக் கப்பல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.
தென் சீனக் கடலில் யாரும் ஒரு துரும்பைக்கூட தன்னைக் கேட்காமல் நகர்த்தக்கூடாது என்று சீனா தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. வியத்நாம் மட்டும் அல்லாது மலேசியா, புரூணை, தைவான் ஆகிய நாடுகளும் சீனாவின் இந்த சட்டாம்பிள்ளைத் தனத்தை அவ்வப்போது கண்டித்து வருகின்றன.
இந்த நாடுகளை விட அளவிலும் பொருளாதார வளத்திலும் பெரிய நாடு என்பதால் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறது. இதையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் கண்டித்துள்ளார்.
தென் சீனக் கடலில் தனக்கு இருப்பதாகக் கருதிக்கொண்டுள்ள உரிமையை நிலைநாட்ட தன்னுடைய கடற்படையை வலுப்படுத்தும் வேலையில் சீனா இப்போது களம் இறங்கியிருக்கிறது என்று அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் எச்சரிக்கிறது.
சிரியாவில் தொடரும் வன்முறை: முதன்மை வழக்கறிஞர் ராஜினாமா.சிரியா அரசு தனது மக்கள் மீது கட்டற்ற வன்முறைகளை ஏவிவிடுவதால் அந்நாட்டின் ஹமா மாகாண அரசு முதன்மை வழக்கறிஞர்(அட்டர்னி ஜெனரல்) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் ஹமா மாகாண அரசு முதன்மை வழக்கறிஞர் அட்னன் பக்கூர் பதவி விலகுவதாக அறிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் அப்பாவி மக்களை கொடூரமான முறையில் ராணுவம் கொலை செய்வது, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்வது போன்ற அரசு வன்முறைச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் தான் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
யூடியூப்பில் வெளியான அந்த வீடியோவில் பேசும் பக்கூர் கடந்த ஜூலை 31ம் திகதி ஹமா மத்தியச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் 72 பேரைக் கொன்றது, கொல்லப்பட்ட 420 அப்பாவி மக்களின் சடலங்கள் பொதுப் பூங்காக்களில் ராணுவ வீரர்களால் புதைக்கப்பட்டது, கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட கைது சம்பவங்களால் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளது, சிறைகளில் நடக்கும் சித்திரவதைகளுக்கு 320 பேர் பலியானது, ஹமா மற்றும் அல் ஹாடிமா மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் இருக்கும் போதே அந்த வீடுகள் ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சிரியா அரசு மீது கூறியுள்ளார். இதற்கான ஆதாரங்களை விரைவில் வெளிப்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ குறித்து சிரியா அரசு செய்தி நிறுவனமான "சனா" வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பக்கூர், அவரது மெய்க்காவலர், கார் டிரைவர் என மூவர் ஆயுதக் கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதகாலமாக சிரியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சிக்கிடையில் இதுவரை அந்நாட்டு அரசில் ஒரு பிளவு கூட ஏற்படவில்லை. பக்கூரின் பதவி விலகல்தான் முதல் பிளவு. அவரது வீடியோ உண்மைதான் என்ற பட்சத்தில் இது சிரியா அரசு வட்டாரங்களில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.