நடுவானில் நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறிய கிபிர் விமானங்கள்!
இலங்கை விமானப் படைக்கு சொந்தமான கிபிர் ஜெட் விமானங்கள் இரண்டு காலையில் நடுவானில் நேருக்கு நேர் மோதி வெடித்துச் சிதறின. இவை கம்பஹா மாவட்டத்தில் வரண என்கிற இடத்துக்கு அருகில் வீழ்ந்தன. விமானப் படையின் அறுபதாவது ஆண்டு விழா கொண்டாட்டத்துக்கான ஒத்திகைகளில் ஈடுபட்டபோது 9.30 மணி அளவில் இவ்விபத்து இடம்பெற்று உள்ளது.
இவ்விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இருந்தன. ஒவ்வொரு விமானத்தையும் ஒவ்வொரு விமானி செலுத்தி இருக்கின்றார். விபத்து நேருகின்றமைக்கு முன்பாகவே விமானிகள் பரசூட் மூலமாக வெளியில் பாய்ந்து உயிர் தப்பி இருக்கின்றனர்.
இவர்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்று விமானப் படை பேச்சாளர் தெரிவித்து உள்ளார். விமானங்கள் நொருங்கி வீழந்த இடத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேரில் சென்று பார்வை இட்டார். விபத்துக்கான காரணி குறித்து புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

இலங்கை மக்களை தேங்காய்த் திருடர்களாக மாற்றும் மஹிந்த அரசு! பொன்சேகா கிண்டல்
அரசு கூறும் ஆசியாவின் ஆச்சரியம் அம்பாந்தோட்டைக்கு மாத்திரமே - இலங்கை மக்கள் தேங்காய்த் திருடர்களாக மாறி வருகின்றனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்.
வெள்ளைக் கொடிகளுடன் படையினரிடம் சரண் அடைந்த புலிகள் இயக்க தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சன் டே லீடர் பத்திரிகைக்கு சரத் பொன்சேகாவால் வழங்கப்பட்டது என கூறப்படும் பேட்டி தொடர்பான வழக்கு காலையில் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இவ்வழக்குக்கு ஆஜராகிவிட்டு நீதிமன்றிலிருந்து வெளியே வந்த சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் அவரைச் குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், மக்கள் ஆகியோரிடம் மேற்கண்டவாறு கூறினார்.ஒரு வேளை உணவுக்காக மக்களைத் தேங்காய்த் திருடர்களாக அரசு மாற்றி உள்ளது என்றும் அவர் சொன்னார்.

லிபியாவில் இருந்து படகு மூலம் கிறீஸ் நாட்டுக்கு தப்பி சென்ற இலங்கையர்களில் 16 பேர் மாயம்!
லிபியா நாட்டில் இருந்து உயிர் தப்பி கிறீஸ் நாட்டுக்கு சென்ற இலங்கையர்கள் 36 பேரில் 16 பேர் மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளார்கள். லிபியாவில் அரசுக்கு எதிரான போராட்டக்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் வம்முறைகள் வெடித்து உள்ளன.
இந்நிலையில் லிபியாவில் உணவு விடுதி ஒன்றில் வேலை செய்து வந்த இலங்கையர்கள் 36 பேர் படகு
மூலம் கிறீஸ் நாட்டை சென்று அடைந்தனர்.ஆனால் இவர்களில் 16 பேர் காணாமல் போய் உள்ளனர்.
இந்நிலையில் லிபியாவில் உணவு விடுதி ஒன்றில் வேலை செய்து வந்த இலங்கையர்கள் 36 பேர் படகு
மூலம் கிறீஸ் நாட்டை சென்று அடைந்தனர்.ஆனால் இவர்களில் 16 பேர் காணாமல் போய் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவை சீனக் கம்பனிக்கு விற்ற அரசு!
முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கவின் சிலை கொழும்பு காலிமுகத் திடலில் இருந்து அகற்றப்பட மாட்டாது, அரசின் மேல் நம்பிக்கை இருக்கின்றது என்று தெரிவித்து உள்ளார் அவரின் புதல்வியும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க.
இராணுவ தலைமையகத்துக்கு சொந்தமாக காலிமுகத் திடலில் உள்ள காணி சீன நாட்டு நிறுவனம் ஒன்றால் ஹோட்டல் நிர்மாணப் பணிகளுக்கென வாங்கப்பட்டு உள்ளது. ஓரிரு மாதங்களில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஆனால் எஸ்.டபிள்யூ. ஆர். டி.பண்டாரநாயக்கவுக்கு எழுப்பப்பட்டு இருக்கும் சிலையும் இக்காணியில்தான் அமைந்து உள்ளது.
இந்நிலையில் பண்டாரநாயக்க சிலையையும் சேர்த்து சீன கம்பனிக்கு அரசு விற்று விட்டது என்று குற்றஞ்சாட்டி உள்ளது எதிர்க்கட்சி. ஆனால் அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது, சிலை அகற்றப்பட மாட்டாது என்று கூறி உள்ளார் சந்திரிகா.

இலங்கையின் வட கடல் ஊடாக படையெடுக்க தயாராகும் புலிகள்! 'லக்பிம' பத்திரிகை அதிரடித் தகவல்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அணி ஒன்று இலங்கையின் வட பகுதிக் கடல் ஊடாக படை எடுத்து அடுத்த கட்ட ஈழப் போரை நடத்த உள்ளது என்று 'லக்பிம' வாரப் பத்திரிகை கட்டுரை ஒன்றை பிரசுரித்து உள்ளது. .
அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு இருப்பவை வருமாறு:-
"கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்கு சென்றுள்ள விடுதலைப்புலிகளின் படையணிகள் ஓரணி சேர்கின்றன. ஓரணி சேர்ந்த பின்னர் வடபகுதி கடற்கரை ஊடாக படை எடுக்க உள்ளன. அடுத்த கட்ட ஈழப் போர் இப்படையெடுப்புடன் இடம்பெறும் என்று புலம்பெயர் நாடுகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைக்கின்றன. தென்சூடான் போன்று ஒரு தனி நாட்டை உருவாக்க புலம் பெயர் தமிழ் சமூகம் முற்படுகின்றது.
புலம்பெயர் தமிழ் சமூகத்தினரின் நிதி உதவிகளைப் பெற்றுக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகள் அதிதீவிரமாக செயல்பட்டு வருகின்றன. புலிகள் கனடாவைப் பிரதான தளமாக பயன்படுத்தக் கூடும்.
எம்.வி.சன்.சி கப்பலில் கனடா வந்திருப்பவர்களின் அநேகர் இலங்கையின் இறுதி யுத்தத்தில் தப்பிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பின்ர்கள் என்று க்னேடிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விடுதலைப் புலிகளின் கனிஷ்ட தளபதிகள் ஏராளமானோர் கனடா சென்றுள்ளனர் என்று சிஇலங்கைப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கனடா 250,000 தமிழ் மக்களை கொண்டு உள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஊடாக விடுதலைப் புலிகளை தப்பிச் சென்று இருக்கின்றார்கள். பிரதானமாக தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளின் ஊடாகவே பல படை அணிகள் தப்பிச் சென்று உள்ளன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இரண்டு கப்பல்களில் 600 இற்கு மேற்பட்டோர் புலிகள் ஏற்கனவே கனடாவுக்கு தப்பிச் சென்று உள்ளனர்.
நிதி திரட்டும் பணிகள் நிறைவடைந்தமையுடன் இராணுவ கட்டமைப்பு நடவடிக்கைகளை புலிகள் ஆரம்பிப்பார்கள். தற்போது பல அரசியல் நகர்வுகள் அனைத்துலக மட்டத்தில் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படுகின்றனதான். ஆனால் இராணுவ நடவடிக்கையையே புலம்பெயர் தமிழ் சமூகம் விரும்புகின்றது என இலங்கை புலனாய்வுத் துறை தெரிவிக்கின்றது. புலிகள் முதலில் கொரில்லாத் தாக்குதல்களை நடத்தக் கூடும்.
ஆனால் அவர்கள் எப்போது, எப்படி, என்ன தாக்குதல்களை ந்டத்துவார்கள் என்பதை கள நிலைம், சுழ்நிலை ஆகியனவே தீர்மானிக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக படையினரை இலங்கை அரசு குவித்துள்ளது. எனவே தென்னிந்தியாவில் வைத்துதான் போராளிகளை விடுதலைப்புலிகள் தயார்படுத்தக் கூடும்.தாக்குதல்களுக்கான திட்டங்களும் அங்கிருந்தே வகுக்கப்பட உள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் தற்போதும் அதிக ஆதரவுகள் உண்டு. தமிழகத்தின் காடுகளில் விடுதலைப்புலிகள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர் என்று இந்திய புலனாய்வுப் பிரிவும் தகவல் வெளியிட்டு உள்ளது. விடுதலைப்புலிகளின் நிதிப் பிரிவும், வான் படையும் தமிழ் நாட்டில் பிரவேசித்து உள்ளன. விடுதலைப்புலிகளின் தற்கொலைப் படைகளும் அங்கு தயார் நிலையில் காத்திருக்கின்றன.

லிபியாவில் போராட்டக்காரர்களிடம் 3-வது நகரம் வீழ்ந்தது: கடாபிக்கு அமெரிக்கா எச்சரிக்கை.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டக்காரர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தும் ராணுவத்தின் ஒரு பிரிவினர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பென்காசி உள்ளிட்ட 2 நகரங்கள் போராட்டக்காரர்கள் பிடித்தனர்.
அதன் புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது, “மிசுரதா” என்ற 3-வது நகரத்தையும் போராட்டக்காரர்கள் பிடித்துள்ளனர். இது தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நகரத்தை விட்டு அதிபர் கடாபியின் ஆதரவு படைகள் ஓடிவிட்டன. இந்த நகரின் சிறு பகுதி மட்டுமே ஆதரவு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
இதையொட்டியுள்ள பாப் ஆல்- அஷிஷியா நகரமும் போராட்டக்காரர்கள் வசம் செல்லும் நிலை உள்ளது. எனவே, அதை காப்பாற்றிக் கொள்ள கடாபி தனது டாங்கி படைகளை அரண்போல் நிறுத்தி வைத்துள்ளார். இதுவரை லிபியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு அதிபர் கடாபியை 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. மேலும், கடாபி அரசுக்கு ஆயுதத்தடை விதித்தும், கடாபியின் சொத்துக்களை முடக்கியும், அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை தடை செய்யும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராட்டத்தின்போது கடாபி அரசால் நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் குற்றங்கள் குறித்து சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் விசாரிக்கவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிபர் கடாபி லிபியாவை விட்டு விரைவில் வெளியேற வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது. இதில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அதிபர் கடாபியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். எனவே, அவர் மேலும் ரத்தம் சித்தாமல், வன்முறையை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் பேர் லிபியாவில் இருந்து துனிசியாவுக்கு சென்றுவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எகிப்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை தெரிவித்துள்ளது.

பஹ்ரைனில் நாடாளுமன்றம் முற்றுகை.
பஹ்ரைனில் அரசு நிர்வாகத்துக்கு எதிராகப் போராடி வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை இன்று முற்றுகையிட்டனர்.
சன்னி முஸ்லீம்களையும், சன்னி அரசகுடும்பத்தாரையும் எதிர்த்து போராடும் ஷியா முஸ்லீம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யும் படி கேட்டுக் கொண்டனர். மத்திய மனாவில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு கூடியுள்ள 500 பேர் கொண்ட போராட்டக் குழுவினரில் ஒருவரான மிர்சா அல் சிகாபி நாங்கள் இந்தப் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வந்தது எங்களை பிரதிநிதித்துவபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளத் தான்.
இராணுவத்தினர் சுட்டுக் கொன்றவர்களின் குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். வெளிநாடுகளைச் சேர்ந்த சன்னி முஸ்லீம்களுக்கு இராணுவம், காவல் துறையில் பணியிடங்கள் தரப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஷியா முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகள் தராததையும், மருத்துவ உதவிகளும் மற்ற சலுகைகளும் தங்களுக்கு மறுக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏமன், பாகிஸ்தான் மற்றும் ஜோர்டன் நாட்டினர் காவல்துறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எங்கள் குழந்தைகளுக்கோ வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதுவும் செய்யாத பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உம் ஜாசர் என்பவர் கூறினார்.
பஹ்ரைன் ஆட்சியாளர்களும் அமைதியாக போராட்டங்கள் நடத்தவும், பேச்சு வார்த்தைக்கு இசைவு தெரிவித்தும் உள்ளனர். சென்ற ஆண்டு கைது செய்யப்பட்ட 300 பேரை விடுதலை செய்தும் 4 புதிய அமைச்சர்களை நியமித்தும் மன்னர் உத்தரவிட்டிருந்தார்.
பேர்ல் ஸ்கோயர் மனாமா நீதிமன்ற வளாகப்பகுதிகளில் அரசு எதிர்ப்பாளர்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஆதரவு தரப்பினரும் தெருக்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
பிரிட்டனில் விற்கப்படும் சிம்பன்ஸி குரங்குகளின் இறைச்சி.
பிரிட்டனின் சில இடங்களில் சட்ட விரோதமாக சிம்பன்ஸி குரங்குகளின் இறைச்சி விற்கப்பட்டு வருகின்றது.
மிட்லேன் பிரதேச சந்தைகளில் புஷ்மீட் என்ற பெயரில் இது விற்கப்படுகின்றது. விஷேட வைபவங்களுக்கு விஷேட இறைச்சியை வாடிக்கையாளர்கள் கேட்கின்ற போது இவை வழங்கப்படுகின்றன.வர்த்தக தரப்படுத்தலின் போது அதிகாரிகள் சில கடைகளைச் சுற்றி வளைத்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. முன்னர் எலி மாமிசம் விற்கப்பட்டமை அகற்றப்பட்டுள்ளது.
ஆனால் அதை விட இது அதிர்ச்சியாக உள்ளது. இது மிகவும் அரியது. இது ஆப்பிரிக்கச் சந்தைகளில் கூட கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கூறினர்.4 கிலோ எடை கொண்ட ஒரு குரங்கை 85 பவுணுக்கு விற்கக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வருடங்களாக வெப்பமற்ற அறையில் அடைக்கப்பட்ட பெண் மீட்பு.
68 வயதான பெண்மணி ஒருவரை அவருடைய மகனும், மருமகளும் சேர்ந்து சிறிதும் வெப்பமற்ற இன்சுலேட் பண்ணப்படாத அறையில் அடைத்து வைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் சரியான முறையில் உணவு வழங்கப்படாமலும், வசதியற்ற சூழ்நிலையிலும் வைத்ததற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்கள். வெப்பமற்ற அறையில் பனிக்குளிர் தாக்குதலுக்கு ஆளான அப்பெண்மணி மயக்கமுற்ற நிலையில் மருத்துவர்களால் மீட்டெடுக்கப்பட்டார்.
உடனடியாக இன்சுலேட் பண்ணப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின் மருத்துவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். பனிக்குளிரால் உறைந்து போன நிலையில் வெப்பக்காற்று சிறிதும் உள்ளே நுழையாத அறையில் சென்ற நவம்பரில் அடைத்து வைக்கப்பட்டார்.
இது ஒரு சிக்கலான விசாரணை. ஆனால் அப்பெண்மணி ஏன் அடைக்கப்பட்டார் என தெரியவில்லை என பொலிஸ் அதிகாரி டோனி வெள்ளா தெரிவித்தார். அடிப்படை வசதிகளை மறுத்ததற்காகவும், உடல் ரீதியாக துன்புறுத்தியதற்காகவும் அவரது மகனும் மற்றும் மருமகளும் கைது செய்யப்பட்டனர் என அவர் கூறினார்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள் கூறுகையில்,"அந்த அறை மூன்று ஆண்டுகளாக திறக்கப்படவே இல்லை. இப்படி ஒரு பெண்மணியை பார்த்ததே இல்லை"என அவர்கள் கூறினர்.
அமெரிக்காவில் 1.1 கோடி பேர் சட்ட விரோதமாக குடியேற்றம்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 1.1 கோடி பேர் என்று அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க குடியுரிமை புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வசிப்பவர்களின் எண்ணிக்கை 1.1 கோடி. அதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் 62 சதவீதம் பேர். எனினும் 2007 ம் ஆண்டுக்குப் பிறகு சட்ட விரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கை 10 லட்சம் வரை குறைந்துள்ளது.
2000 முதல் 2010 ம் ஆண்டு வரை அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்தது. குடியுரிமை ஆவணம் இல்லாமல் வசிக்கும் வெளிநாட்டினரில் 39 சதவீதம் பேர் 2000 அல்லது அதற்கு பிறகு வந்த ஆண்டுகளில் குடியேறியவர்கள் என தெரிய வந்துள்ளது.
சோதனைக்கு உள்ளாகமல் நுழைந்தவர்கள், தற்காலிக குடியுரிமை அனுமதி பெற்று காலக்கெடு முடிந்த பிறகும் வசிப்பவர்கள் இந்த பட்டியலில் அதிகம். 2000 முதல் 2007 வரை சட்ட விரோதமாக குடியிருப்போரின் எண்ணிக்கை 33 லட்சம் அதிகரித்தது.
சட்ட விரோதமாக குடியேறியவர்களில் 80 சதவீதத்தினர் வட அமெரிக்க நாடுகள், மெக்சிகோ, கனடா, கரீபியன் கடல் தீவுகள் மற்றும் மத்திய அமெரிக்காவை சேர்ந்தவர்கள். ஆசியாவை சேர்ந்தவர்கள் அடுத்த இடம் பிடித்துள்ளனர். ஆசியர்களில் இந்தியர்கள் அதிகம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துனிஷிய பிரதமர் பதவி ராஜினாமா.
வட ஆப்ரிக்க நாடான துனிஷியாவில் பிரதமர் முகமது கன்னவுச்சிக்கு எதிரான போராட்டம் வலுவடைந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அல் செப்சி என்பவர் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. துனிஷியாவில் தான் அரசுக்கு எதிராக முதலில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதையடுத்து அங்கு 20 ஆண்டுகளாக அதிபராக இருந்த ஜைன் அல் அபிதின் பென் அலி சவுதிக்கு ஓடி விட்டார்.
அதையடுத்து அவரது கூட்டாளியும் அப்போதைய பிரதமருமான முகமது கன்னவுச்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. கன்னவுச்சியே புதிய பிரதமராகத் தொடர்ந்தார். ஆனால் முன்னாள் அதிபர் அலியின் கூட்டாளிகள் எவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெறக் கூடாது என்று துனிஷிய மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக போராட்டம் வலுவடைந்தது. கடந்த 25, 26 மற்றும் 27 தேதிகளில் தலைநகர் துனிஷில் நடந்த போராட்டத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு நெருக்கடி முற்றியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பிரதமர் கன்னவுச்சி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அரசு தொலைக்காட்சியில் பேசிய அவர்,"நான் எனது பொறுப்பில் இருந்து ஓடவில்லை. எனது பதவி விலகல் புதிய பிரதமருக்கு வழி வகுக்கும். மேலும் போராட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க நான் தயாராகவில்லை" என்றார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் அல் பாஜி காயித் அல் செப்சி புதிய பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. கன்னவுச்சியின் ராஜினாமா குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றம் தான் என்றாலும் அதுவே போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தி விடாது. அமைச்சரவையில் முன்னாள் அதிபர் அலியோடு தொடர்புடையவர்கள் இருக்கும் வரை போராட்டம் நிற்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் போராட்டத்தின் போது சிலர் பலியானது தொடர்பாக 188 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். முன்னாள் அதிபர் அலியின் நெருங்கிய அதிகாரிகள் சிலர் இவர்களுக்குப் பணம் கொடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் சிலரை கொன்றுள்ளனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.
விமானப்படை விபத்து குறித்து மஹிந்த கடும் அதிர்ச்சி: சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்துள்ளார்! விமானி ஒருவர் பலி! மற்றையவர் படுகாயம்
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு கிபீர் விமானங்கள் இன்று முற்பகல் விபத்துக்குள்ளானது குறித்து கடும் அதிர்ச்சியுற்றுள்ள மஹிந்தா உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு நேரில் விஜயம் செய்துள்ளார்.விமானப்படையின் கிபீர் விமானங்கள் விபத்துக்குள்ளானதை அறிந்தவுடன் ஜனாதிபதியின் இன்றைய நிகழ்ச்சி நிரல்கள் யாவும் உடனடியாக இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அதனையடுத்து ஜனாதிபதி விபத்து இடம்பெற்ற அத்தனகல்லைப் பிரதேசத்துக்கு விரைந்துள்ளார்.
விபத்தில் காயமானவர்களை கொழும்பு தேசிய மருத்துவமனை அல்லது கம்பஹா பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் விசேட ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் இருக்கும் வதுபிட்டிவலை மருத்துவமனை மற்றும் கம்பஹா பொதுமருத்துவமனை என்பன காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிக்க உச்சகட்ட தயார்நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பிரஸ்தாப மருத்துவமனைகளிலிருந்து தலா இரண்டு வீதம் நான்கு அம்புலன்ஸ் வண்டிகளும் விபத்து இடம்பெற்ற பிரதேசத்தை நோக்கி துரித கதியில் அனுப்பப்பட்டுள்ளன. ஆயினும் விபத்தின் காரணமாக காயமுற்றவர்கள் தொடர்பான எண்ணிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை.
விமானத்தின் தானியங்கி பரசூட் காரணமாக விமானிகள் இருவரும் தெய்வாதீனமாக உயிர்தப்பிக் கொண்டுள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரில் பெரும் பங்காற்றிய இரண்டு கிபீர் விமானங்களே விபத்துக்குள்ளாகியிருப்பதாக விமானப்படை வட்டாரங்களின் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
விபத்துக்குள்ளான விமானங்களில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த விமானியும் கடும் காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக விமானப்படை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த விமானி ப்ளைட் லெப்டினன்ட் தர அதிகாரியான மொனாத் பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் கட்டுநாயக்க வான்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ஸ்குவாட்ரன் லீடர் ஜயகொடி எனும் விமானியே விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் ஆரம்ப கட்டமாக வதுபிட்டிவலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அதன் பின் பெரும்பாலும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விமான விபத்தின் போது ஒரு விமானம் அத்தனகல்லையின் நெல்லிகஹமுல பிரதேசத்தின் வீடொன்றின் மீது விழுந்துள்ளதால், வீடு பலத்த சேதமடைந்துள்ளது. மற்றைய விமானம் அதற்கு இருநூறு மீட்டர் தூரம் தள்ளி வனப்பகுதிக்குள் விழுந்துள்ளது.
இச்செய்தி எழுதப்படும் நேரத்திலும் விமானங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதுடன், அப்பிரதேசத்தின் பெரும்பாலான மரங்களும் விமானங்களின் தீச்சுவாலை காரணமாக கருகிப் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.ஆயினும் விமான விபத்துக் காரணமாக சிவிலியன்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.
லிபியாவில் இறுதி கட்ட மோதல்.
லிபியாவின் கிழக்குப் பகுதியை ஏற்கனவே கைப்பற்றிய கடாபி எதிர்ப்புப் புரட்சிப் படைகள் நேற்று முன்தினம் முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவைக் கைப்பற்றிவிட்டன.
தொடர்ந்து தலைநகர் டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. டிரிபோலியில் எந்நேரமும் கடாபி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் இறுதிக் கட்ட மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பெங்காசி, அல்பைடா, டெர்ணா உள்ளிட்ட நாட்டின் கிழக்குப் பகுதிகளை கடாபி எதிர்ப்பாளர்கள் ராணுவத்தின் துணையுடன் கைப்பற்றினர். பெங்காசியில் முன்னாள் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா முகமது அப்த் அல் ஜலீல் தலைமையில் இடைக்கால அரசு உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களான ஜாவியா மற்றும் மிஸ்ரட்டாவில் கடாபி ராணுவம் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கு இடையில் மோதல் நடந்தது. இறுதியில் ஜாவியா நகரம் எதிர்ப்பாளர்கள் கைகளில் வீழ்ந்தது. ஜாவியா நகரைச் சுற்றியுள்ள ரிபாத், கபா, ஜடோ, ரோக்பன், ஜென்டன் உள்ளிட்ட பல்வேறு சிறு நகரங்களையும் எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
எனினும் ஜாவியா நகரின் வெளிப் பகுதியில் 2000 ராணுவ வீரர்கள் எதிர்ப்பாளர்களைத் தாக்கத் தயார் நிலையில் உள்ளனர். மிஸ்ரட்டாவின் பெரும் பகுதியையும் எதிர்ப்பாளர்கள் கைப்பற்றி விட்டனர். டிரிபோலிக்கு வெளியே 28 கி.மீ., தூரத்தில் தற்போது எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளனர்.
அந்நகரில் உள்ள அரசு வானொலி கட்டடம் மீது குண்டு வீசித் தாக்கிய விமானம் ஒன்றை எதிர்ப்பாளர்கள், துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்கினர். இதனால் அந்த விமானம் வேறு வழியின்றித் தரையில் இறங்கியது. அதில் இருந்தவர்களை எதிர்ப்பாளர்கள் சிறை பிடித்தனர்.
பெங்காசியில் உள்ள ராணுவப் பிரிவின் தலைவர் கர்னல் ரமாதான், டிரிபோலியை நெருங்கிச் செல்லும் எதிர்ப்பாளர்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இதனால் டிரிபோலியில் எந்நேரமும் பயங்கர மோதல் ஏற்படலாம். டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான டஜோராவில் கடாபி ஆதரவாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிரிபோலியின் சில பகுதிகளில் பொதுமக்கள் தடுப்புகளை ராணுவ வீரர்கள் மீது தூக்கி எறிந்தனர். சிலர் ராணுவப் படைத்தளங்களைச் சூறையாடி ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமை அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடாபியை உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையில் லிபியா மீது ஆயுதப் பரிமாற்றம், சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியனும் நேற்று விதித்தது. லிபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடான இத்தாலி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கடாபி உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளன.