பக்கவாதம் நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பக்கவாத நோய் பாதித்த நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.அவர்களில் 24 மற்றும் அதற்கு குறைவான பற்கள் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதே வேளையில் இதே வயதுடைய அதிக பற்கள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் நோய் பாதிப்பு அதிக அளவில் இல்லை. எனவே பக்கவாதம் நோய் ஏற்படுவதில் பற்களுக்கும் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.