வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால் இந்த ஜோடி வாழ்க்கையையே சாதனையாக்கிவிட்டனர். ஹேர்மன் மற்றும் கண்டலரியா சாப் ஆகியோர்தான் இந்த சாதனைத் தம்பதி. இவர்களுடைய இந்தக் கார் 83 வருடங்கள் பழமையானது.
இந்தப் பழைய நீளமான கார் தான் இவர்களின் வாகனம் வீடு எல்லாமே. கடந்த 11 வருடங்களாக தமது நான்கு பிள்ளைகள் சகிதம் உலகம் முழுவதையும் இந்த வாகனத்தில் சுற்றி வந்த வண்ணம் உள்ளனர். இன்னமும் இவர்களின் பயணம் தொடருகின்றது. இதுவரை நான்கு கண்டங்களைக் கடந்துள்ள இவர்களின் பயணம் ஒரு ஆயுள் காலப் பயணமாக நீடிக்கின்றது.
இவர்களது பிள்ளைகள் நால்வரும் இந்த உலகப் பயணத்தின் போதே பிறந்துள்ளனர். மூத்த பிள்ளைக்கு எட்டு வயது. கடைசிப் பிள்ளைக்கு ஒரு வயது. இதுவரை இவர்கள் பயணம் செய்துள்ள தூரம் 142000 மைல்கள்.இவர்களின் கார் 1928ம் ஆண்டுக்குரியது. மணிக்கு 40 மைல் வேகத்தில் மட்டும் தான் ஓடக்கூடியது. இந்தக் காரைப் படகில் ஏற்றிக் கொண்டு அமஸோன் நதியையும் அவர்கள் கடந்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF

இவ்வாறு பல சோதனைகளுக்கும், இடைஞ்சல்களுக்கும் அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். முன்னாள் தகவல் தொழில்நுட்ப நிபுணரான 42 வயதான ஹேர்மன் தனது மனைவி கண்டலரியா சகிதம் 2000 மாம் ஆண்டு ஆர்ஜன்டீனாவிலிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்தார். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா,அவுஸ்திரேலியா நியுஸிலாந்து தற்போது ஆஸியா என இவர்களிக் பயணம் தொடருகின்றது. ஹேர்மன் சென் பிரான்ஸிஸ்கோவில் பிறந்து ஆர்ஜன்டீனாவில் தனது பாட்டனின் பண்ணையில் வேலை செய்வதற்காக சிறு வயதிலேயே அங்கு குடியேறியவர்.
10 வயதில் அவர் கண்டலரியாவைச் சந்தித்தார். அப்போது அவருக்கு வயது 8. கண்டவுடனேயே காதல். அது மட்டுமல்ல அப்போது முதலே இருவரும் சேர்ந்து வாழவும் ஆரம்பித்தும் விட்டனர். 1996ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பயணத்தைத் தொடங்க விரும்பிய போது பாட்டனார் கொடுத்த பரிசு தான் இந்தக் கார். ஆரம்ப கட்டத்திலேயே கையிலிருந்த காசு தீர்ந்து விட்டது. அதன் பிறகு பலரும் வழங்கும் பெற்றோல் மற்றும் உணவு தங்குமிட வசதி ஆகியவற்றின் உதவியோடு இன்னமும் இந்தப் பயணம் நான்கு பிள்ளைகளுடன் தொடருகின்றது.
இதுவரை தனக்கு சுமார் 12 ஆயிரம் பேர் இந்தப் பயணத்தில் உதவியுள்ளதாக ஹேர்மன் கூறுகின்றார். இப்போதைக்கு முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணமும் இல்லையாம். இவர்கள் இப்போது பிலிப்பைன்ஸில் உள்ளனர்.