முன்னர் கொழும்பிலிருந்த சிங்களவர்கள் 95%, தற்போது 27%! - மஹிந்த ராஜபக்ச.
கொழும்பில் முன்னர் 95 சதவீதமான சிங்கள மக்கள் வாழ்ந்து வந்த போதும், தற்போது 27 சதவீதமான சிங்களவர்களே வாழ்கிரார்கள். இது மற்றைய இனங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவர்கள் ஒற்றுமையுடன் வாழும் தன்மையை வெளிக்காட்டுவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் நேற்று ஊடக பிரதானிகளை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையில் அனைத்து இனத்தவரும் ஒற்றுமையுடன் தான் வாழ்கிறார்கள். அரசியல் வாதிகளே தமது அரசியல் நோக்கத்திற்காக பிரச்சினைளை உருவாக்கி வருகின்றனர் என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் 'த.தே.கூட்டமைப்புடன் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எனினும் இதுவரை எந்தவொரு தீர்மானத்திற்கும் வரவில்லை. விரைவில் பொது இணக்கப்பாடு ஒன்றை எட்ட எதிர்பார்த்து வருகிறோம். இருப்பினும் வி.புலிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நாம் தயாரில்லை. சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் பற்றி உரிய கவனம் செலுத்தப்படும். வடக்கின் சகல காவல் நிலையங்களிலும் குறைந்த பட்சம் ஒரு தமிழ் மொழி பேசும் காவல்துறை உத்தியோகத்திரையேனும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் வட பிராந்திய நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை ஐ.தே.கவின் தலைமை பதவிக்கு நிலவிய போட்டி பற்றி கருத்து தெரிவிக்கையில்,
ஒருவர் கட்சிதலைமைத்துவத்திற்கு தெரிவாகுவதற்கு முன், அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும், தன்மையும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தன்மையும் இருக்க வேண்டும் என்றார். ரணசிங்க பிரேமதாஸவிற்கு, ரணில் செய்த உதவிகளுக்கு, சஜித் பிரேமதாஸ நன்றிக்கடன் செலுத்த தவறிவிட்டார் என்ற கருத்துப்படவே ஜனாதிபதி இக்கருத்தை வெளியிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும் நாட்டின் வலுவான, பிளவுபடாத எதிர்க்கட்சி ஒன்று இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியக் கிராமமொன்றில் குழந்தைகளைக் கொஞ்சி விளையாடும் பில்கேட்ஸ் தம்பதி!
மைக்ரோ சொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலின்டா கேட்ஸ் இந்தியா வந்துள்ளனர்.பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள, ஜாம்சாட் கிராமத்திள்ள, மக்களுடன் தரையில் அமர்ந்து பில்கேட்ஸ் தம்பதியினர் சகஜமாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, வறிய குழந்தை ஒன்றை தூக்கி, இருவரும் கொஞ்சினர்...
விலங்கின் உறுப்புகளை மனித உடலில் பொருத்த திட்டம்: சீன விஞ்ஞானிகள் ஆய்வு
பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகள் மற்றொரு நபரிடம் இருந்து தானமாக பெற்று மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது.
தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட மிருகங்களின் உடல் உறுப்புகளை பொருத்த சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.சீனாவில் உள்ள நாஜ்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளின் உடல் உறுப்புகள் மனித உடலில் பொருத்தப்பட உள்ளன.
அது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தொடக்கத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகள் பயன்படுத்தப்பட உள்ளன.பின்னர் மற்ற விலங்குகளின் உடல் உறுப்புகளையும் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
'அஜ்டபியா'மீண்டும் புரட்சிப் படையிடம் வீழ்ந்தது : நேட்டோ படை தாக்குதல் தொடர்கிறது
நேட்டோ படைகள் கடந்த 6 நாட்களாக நடத்திய கடும் விமானத்தாக்குதல்களை அடுத்து, கடாபி அரச படைகளிடமிருந்து, லிபியாவின் முக்கிய நகரமான அஜ்டபியா (Ajdabiya) நகரை புரட்சிக்குழு மீட்டெடுத்துள்ளதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை, அஜ்டபியா நகரில் உள்ள கடாபி இராணுவ இலக்குகளை குறிவைத்து, நேட்டோ கூட்டுப்படை நடத்திய தாக்குதல்களில், கடாபி இராணுவத்தினரின் தாங்கிகள் மற்றும் ஆட்டிலெறி வாகனங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. இதை தொடர்ந்து கடாபியின் அரச படைகள் அங்கிருந்து வெளியேறி லிபியாவின் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்துள்ளன.
எங்களால் இப்போது நகரின் உள் நுழைய முடிவதாக, புரட்சிப்படையின் மௌம்மட் எஹ்ஸேயெர் எனும் கேனல் தெரிவித்துள்ளார். இதேவேளை மிசுராட்டா நகரின் மீது கடாபி இராணுவம் தொடர்ந்து எறிகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆபிரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான மிசுராட்டாவின் மீதான நேற்றைய தாக்குதல்களில், 3 சிறார்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு புரட்சிப்படையினருக்கும், கடாபி இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான தாக்குதல் தொடர்ந்து வ்அருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவெளை, லிபிய விவகாரங்களில் வெளிநாட்டுக்கூட்டுப்படைகளின் தலையீட்டினை கண்டித்தும், லிபிய வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடைவிதித்த ஐ.நா சபை, தன் நேட்டோ படைகளுக்கு மாத்திரம் பறப்பதற்கு அனுமதி அளித்ததுள்ளது என குற்றம் சாட்டியும் ஆபிரிக்க ஒன்றியம் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளது.
மேலும் லிபிய யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, அரச தரப்பிற்கும், மக்களுக்கும் இடையில் உடனடி பேச்சுவார்த்தை ஒன்றுக்கும் அது அழைப்பு விடுத்துள்ளது.இதேவேளை கூட்டுப்படை தாக்குதலில், இதுவரை 33 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகியிருந்தன.நேற்று திரிபொலி நகரில் உயிரிழந்தவர்களுக்கான மாபெரும் இறுதிச்சடங்கும் பொதுமக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அதிநவீன ஓபரேஷன் மூலம் இளமையாக மாறிய கடாபி.
68 வயதான அதிபர் கடாபி கடந்த 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வருகிறார். கடந்த 1994 ம் ஆண்டு அதாவது தனது 53 வது வயதில் தன்னை இளமை ஆக்கி கொள்ள அதிநவீன ஓபரேசன் செய்து கொண்டார்.
அப்போது அவர் உடல் குண்டாகவும், முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுருக்கங்களுடனும் காணப்படுவார். எனவே இளைய தலைமுறையினர் தன்னை வயதானவர் என கூறி வெறுத்து விடக்கூடாது. எப்போதும் தான் இளமையாக காட்சி அளித்து மக்கள் மத்தியில் கவர்ச்சி கதாநாயகனாக வலம் வரவேண்டும் என விரும்பினார்.அதற்காக அதிநவீன ஓபரேசன் செய்து கொண்டார். அவருக்கு இந்த அறுவை சிகிச்சையை பிரேசிலை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர் லியாசிர் ரிபைரோ மேற்கொண்டார். இது மிகவும் ரகசியமாக நடைபெற்றது.
இதற்காக லிபியா தலை நகர் திரிபோலிக்கு அவர் பரமரகசியமாக வரவழைக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள ஒரு பாதாள மறைவிட அறையில் வைத்து இந்த ஓபரேசன் நடத்தப்பட்டது. சுமார் 4 1/2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போது கடாபியின் வயிற்று பகுதியில் இருந்த கொழுப்புகள் வெளியேற்றப்பட்டது.பின்னர் அது அவரது முகத்தில் செலுத்தப்பட்டு வசீகரமாக்கப்பட்டது. மேலும் அவரது முகம், கழுத்து பகுதியில் இருந்த சுருக்கங்கள் அகற்றப்பட்டன. மேலும் அவரது தலை முடியும் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் அவர் சுமார் 10 வயது குறைவான தோற்றத்துடன் காட்சி அளித்தார். அப்போது அவரது வயது 53.
இந்த தகவலை அவருக்கு அதிநவீன ஓபரேசன் செய்த பிரேசில் டாக்டர் லியாசிர் ரிபைரோ தெரிவித்துள்ளார். முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என நான் தெரிவித்த கருத்தை கடாபி ஏற்றுக் கொள்ளவில்லை. தனது முகம் மாறாமல் இளமை தோற்றம் அளிக்கும் விதத்தில் உருவாக்கும்படி கூறினார்.
அதன்படி செய்தேன். மேலும் இந்த ஓபரேசன் மூலம் சுமார் 5 ஆண்டுகள் வரை தான் இளமை தோற்றம் இருக்கும். அதன் பின்னர் மீண்டும் முக சுருக்கம் ஏற்படும் என்றேன். அப்போது தேவைப்பட்டால் என்னை மீண்டும் அழைக்கிறேன் என்றார்.அதன் பிறகு அவர் என்னை அழைக்கவில்லை என்றும் டாக்டர் ரிபைரோ தெரிவித்தார். இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனிக்கும் இதே போன்று இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் முடிமாற்று ஓபரேசன் செய்து இளமை ஆக்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகளின் தாக்குதலில் நேற்று பெருமளவான சிவிலியன்கள் பலி: சர்வதேச விசாரணை ஆரம்பமாகவுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் நேற்றைய தினம் ஏராளம் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.மரணித்த பொதுமக்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை கணக்கிட முடியாத நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாங்கள் தலிபான்களைத் தாக்கியதாகவே கடைசி வரை நேட்டோப் படைகள் வாதிட்டன. ஆயினும் இறந்தவர்கள் பொதுமக்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட பின் தலிபான் தலைவர்கள் பயணிக்கும் வாகனம் என்று தகவல் கிடைத்த காரணத்தாலேயே தாங்கள் பொதுமக்களின் வாகனங்கள் மீது தாக்குதலைத் தொடுத்ததாக அவர்கள் தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர்.ஆப்கானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் நவ்சாட் மாகாணத்தின் தூரப் பிரதேசமொன்றில் இந்தச்சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
இன்று மாலை வரை அப்பகுதியில் சிதறிக்கிடக்கும் சடலங்களை மீட்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆயினும் பல சடலங்கள் சின்னபின்னமாகிக் கிடப்பதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதற்கிடையே நேட்டோப் படைகளின் பிரஸ்தாப தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் கடாபியின் போர் விமானம் குண்டு வீசி தகர்ப்பு; பிரான்ஸ் ராணுவம் அதிரடி தாக்குதல்
லிபியாவில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க கடாபி ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட கூட்டு படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று பிரான்சின் போர் விமானங்கள் லிபியாவின் 3வது பெரிய நகரமான மிஸ்ரதாவின் புறநகர் பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. அந்த நகரத்தின் அருகேயுள்ள ராணுவ தளங்களின் மீது குண்டு வீசப்பட்டது.
அப்போது கடாபியின் ராணுவ டாங்குகள் அழிக்கப் பட்டன. அதே நேரத்தில் ராணுவ போர் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. லிபியாவில் அமெ ரிக்க கூட்டுப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது இதுவே முதல் முறையாகும். இருந்தும் மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவம் இருளில் பதுங்கியபடி எதிர் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ளள ஆஸ்பத்திரி சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து அப்பகுதியில் டெலிபோன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் பிடியில் ஷின்தான் என்ற நகரமும் உள்ளது.
இது திரிபோலி அடுத்து தென் மேற்கில் உள்ளது. அந்த நகரத்தையும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர கடாபியின் ராணுவம் தீவிரமாக உள்ளது. அதற்காக அஜ்தாபியா நகரின் புறநகரில் இருந்தபடி கடந்த 3 நாட்களாக அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க கூட்டுப் படைகள் நேற்று இரவு நடத்திய குண்டு வீச்சில் லிபியா ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் தொடங்கிய ஆப்பிள் ஐபேட் 2 விற்பனை.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 உலகம் முழுவதும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் அதை வாங்க அதிகாலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட், ஐபேட் கருவிகள் மிகப் பிரபலம். வீடியோ சேட்டிங் செய்ய வசதியாக 2 கேமராக்கள், அதிவேகம், மிக மெல்லிய வடிவம் ஆகிய சிறப்பம்சங்களுடன் ஆப்பிள் ஐபேட் 2 கடந்த 11 ம் திகதி அமெரிக்காவில் அறிமுகமானது.அதற்கு அமோக ஆதரவு கிடைத்தது. அங்கு முதல் வாரத்தில் ஐபேட் 2 விற்பனை 10 லட்சத்தை தாண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மற்ற நாடுகளில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் முக்கிய நகரங்களில் ஐபேட் 2 ஐ வாங்க ஆப்பிள் ஸ்டோர்கள் முன்பு மக்கள் காலை முதலே காத்திருந்தனர்.
ஆனால் வெலிங்டன் நகரின் ஆப்பிள் ஸ்டோருக்கு 12 ஐபேட் 2 மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்ததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். வரிசையில் நின்ற முதல் 12 பேர் மட்டுமே அதை வாங்க முடிந்தது. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து, கனடா, டென்மார்க், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளிலும் அதற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது.
பிரான்ஸ் எரிபொருளை ஜப்பான் வாங்க தாமதம்.
பிரான்ஸ் அணு எரி பொருளை வாங்குவதில் இரு ஜப்பான் நிறுவனங்கள் தாமதப்படுத்தியுள்ளன. அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட அணுக்கசிவே இதற்கு காரணம் என்று கூறுகின்றனர்.
ஜப்பானில் இந்த மாதம் 11 ம் திகதியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.இந்த பாதிப்பால் அணுக்கதிர் வீச்சு பரவியது. இந்த கதிர் வீச்சு புகுஷிமாவில் மட்டுமல்லாது தலைநகர் டோக்யோவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் குழந்தைகள் குடிக்க முடியாத அளவில் தண்ணீரில் கதிர்வீச்சு கலந்தது.
ஜப்பானின் கான்சாய் எலக்ட்ரிக் பவர் கம்பெனி மற்றும் சுபு எலக்ட்ரிக் பவர் மின் நிறுவனம் கூறுகையில்,"ஏப்ரல் மாதம் 4 வாரத்திற்கான யுரேனியம், புளுட்டொனியம் கலப்பு ஆக்ஸைடை கடல் வழியாக கொண்ட வர திட்டமிட்டு இருந்தோம். தற்போது இந்த அணு எரிபொருளை இறக்குமதி செய்வதில் தாமதம் செய்துள்ளோம்" என்றன.கான்சாய் எலக்ட்ரிக் நிறுவனம் கப்பலில் இறக்குமதி செய்யப்படும் அணு எரிபொருளை தகாமா அணு மின் நிலையத்தில் உள்ள 3 வது அணு உலைக்கு பயன்படுத்த திட்டமிட்டிருந்தது.
சுபு எலக்ட்ரிக் நிறுவனம் ஹமொகா அணு மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்த அணு எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டு இருந்தது.ஜப்பான் இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் நிலையில் அங்கு அணு எரிபொருளை கப்பலில் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று பிரெஞ்ச் பசுமைக்கட்சி வலியுறுத்தி இருந்தது.
ஈரானுக்கு எதிராக அடுத்த தாக்குதலை மேற்கொள்ளுங்கள்: மேற்கு நாடுகளிடம் இஸ்ரேல் வலியுறுத்தல்.
லிபியாவின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தலையீட்டை மேற்கொண்ட அதே முறையில் ஈரானிலும் தலையீடுகளை மேற்கொள்ள மேற்கு நாடுகள் முன்வர வேண்டுமென இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாகு வலியுறுத்தியுள்ளார்.லிபியாவை விடவும் ஈரான் சர்வதேச சமாதானம் மற்றும் பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மேலும் ஈரான் தற்போதைக்கு அணு ஆயுத உற்பத்தி தொடர்பில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. அதன் மூலம் உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அது திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டுகின்றார்.லிபியாவை மண்டியிட வைத்த பின் அ மெ ரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஈரான் மீதான தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்றும் அவர் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லிபியாவை தகர்க்க அடுத்த திட்டம் தயார்.
லிபிய விமானப்படை தாக்குதலை முறியடித்துள்ள அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் தற்போது அந்நாட்டின் தரைப்படைகளை தாக்க புதிய திட்டம் வகுத்துள்ளன.லிபியாவை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வரும் கடாபியை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் மீது லிபிய விமானப்படை விமானங்கள் குண்டு வீசியதால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். கடாபியை பதவி விலகும் படி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வற்புறுத்தின.இதற்கிடையே ஐ.நா வின் ஒப்புதலோடு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாட்டு படைகள் லிபியா மீது தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் லிபியாவின் விமானப்படை தாக்குதல் ஒடுக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தும் பீரங்கி மற்றும் ஏவுகணைகளை தவிடுபொடியாக்க அமெரிக்கா தலைமையிலான படைகள் திட்டமிட்டுள்ளன. ஐந்தாவது நாளாக ஜின்டான், ஜாவியா, மிஸ்ரட்டா, அஜ்தாபியா ஆகிய நகரங்களில் கடாபி ராணுவத்தின் தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது.