அண்டார்டிகாவின் அடிப்பகுதியில் அமைந்து உள்ள பனிக்கட்டி படலம் மிகப் பெரிதாக 4.2 கி.மீ உயரமுடையதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
இந்த வெள்ளைக் கண்டத்தின் நடுப்பகுதியை ஆய்வு செய்த போது திரவ நிலைத் தண்ணீர் உறைந்து பனிப்படலம் மீது ஏராளமாக குவிந்திருப்பதை கண்டறிந்தனர். சில இடங்களில் இந்தப் பனிப்படலம் நூற்றுக்கணக்கான மீற்றர் அடர்த்தி உடையதாகவும், மொத்தமுள்ள பனிக்கட்டில் பரப்பில் பாதி அளவுக்கு இருக்கிறது என ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
வியக்க வைக்கும் பல உண்மைகளை தாங்கிய ஆய்வு முடிவுகள் தி ஜர்னல் சயின்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் பனிப்படலங்கள் எவ்வாறு விரிவடைகின்றன மற்றும் நகருகின்றன என்பது ஆய்வின் மூலம் தெரிய வரும். மேலும் உலகம் வெப்பமயமாதலின் அண்டார்டிகா எவ்விதம் மாறும் என்ற உண்மையும் வெளிக் கொண்டு வரும்.
இந்த ஆராய்ச்சியின் போது கேம்பர்ட்சேவ் மலைகள் அண்டார்டிகாவின் அடி ஆழத்தில் புதைந்துள்ளன என தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீர் எவ்வாறு மலைகளின் பள்ளத் தாக்குதல்களில் பாயும் என்பதை பற்றியும் இந்த ஆய்வு அறிக்கை புள்ளி விவரங்களை கூறுகின்றது.
பனிப் படலங்கள் எப்போதும் மேலிருந்து கீழாக தான் வளரும். ஆனால் இது கீழிருந்து மேலாக எவ்விதம் வளரும் என்பது மிகவும் ஆச்சரியம் தருவதாக உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விமான ராடார்கள் மூலம் பனியின் அடர்த்தி, அடுக்குகளாய் மாறும் நிலை மற்றும் பாறைப் படுக்குகளில் பனி படர்தல் கண்டறியப்பட்டது. இதன் மூலம் கடலின் கனிம வளம் பற்றியும் ஆய்வு செய்ய முடிந்தது.இவ்வாறு கண்டறியப்பட்ட பனிப்படலங்களில் டோம்சிக் பகுதியில் உள்ளவைகள் 800000 பழமையானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.