Tuesday, March 29, 2011

ஓசோனில் விழுந்த ஓட்டை மெல்ல சுருங்குகிறது: விஞ்ஞானிகள் தகவல்.

Ozone_008
விண்வெளியில் இருந்து வரும் பல்வேறு ஆபத்தான ஒளிக்கற்றைகளில் இருந்து பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டையை இயற்கை மெல்ல சரி செய்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த நூற்றாண்டின் மத்தியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை முழுமையாக மூடப்பட்டு விடும் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலையில் மனித குலத்தை மிரட்டும் மிகப் பெரிய விடயமாக புவி வெப்பமாதல் உள்ளது.பூமி உருண்டையில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம் நிலவுவதும், வருடந்தோறும் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. புதிய நோய்கள் விவசாய உற்பத்தி பாதிப்பு, பருவ நிலை மாற்றம் என பல பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
புவியின் வெப்பம் அதிகரிப்பிற்கு மனிதனின் தவறுகளால் பூமியின் மேற்பரப்பில் போர்வை போல் போர்த்தப்பட்டுள்ள ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையே முக்கிய காரணம்.சூரியனில் இருந்து வரும் புற ஊதா உள்ளிட்ட மனிதர்களை பாதிக்கும் கதிர்களை தடுத்து வெப்பத்தை பூமிக்கு அனுப்பும் கேடயமாக இருப்பது ஓசோன் படலம். அதிகரித்து வரும் கார்பன் கழிவுகள் காரணமாக பூமியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் பூமிக்கு பாதுகாப்பு அளித்து வரும் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளது என்று 1970 ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அண்டார்டிக் கண்டத்தின் மேலே உள்ள பகுதில் இருக்கும் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை கொஞ்சம் கொஞ்மாக பெருத்து வருவதாக 1980 ம் ஆண்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக புறஊதாக்கதிர்களால் மனிதர்களுக்கு தோலில் அழற்சி, கண்ணில் கட்ராக்ட், தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படும் என்றும் தாவர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 1987 ம் ஆண்டு 196 நாடுகள் கனடாவின் மொன்ட்றியல் நகரில் கூடி ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் பெரியதாகாமல் தடுப்பது எப்படி என்று அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தன. பின்னர் ஓசோன் படலத்தை பாதுகாக்க 196 நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டன.அதன் பின் நான்கு ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓசோன் குறித்து 300 விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதன் தொகுப்பை அளித்துள்ளனர். அதன்படி கார்பன் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஓசோனை பாதிக்காத பொருட்களை பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 10 கிகா தொன் கார்பன் கழிவுகள் உருவாவது கட்டுப்படுத்தப்படுகிறது. அதனால் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை பெரிதாவது தடைபட்டு சுருங்கி வருகிறது.1980 ம் ஆண்டில் இருந்த நிலைக்கு வரும் 2045 முதல் 2060 ம் ஆண்டு காலகட்டத்தில் ஓசோன் படலத்தின் ஓட்டை சிறுத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் துருவத்தில் ஏற்பட்டுள்ள ஓசோன் படலம் ஒவ்வொரு குளிர்காலத்தின் போதும் அடைவு ஏற்பட முயற்சிப்பதும் பருவநிலை மாறுபடும் போது ஓட்டை அடைபடுவதில் தடை ஏற்படுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF