
கூகுள் குரோம் உலவியானது தற்போது அதிக பயனாளர்களை பெற்று வருகிறது. இதற்கு காரணம் கூகுள் நிறுவனம் அளிக்கும் புதுப்புது சேவைகள் மட்டுமே ஆகும்.
அந்த நிறுவனம் எல்லாத் துறையிலும் வெற்றி பெற்று வருகிறது. சர்ச் எஞ்சினில் தொடங்கி ஈமெயில் வரை அனைத்தும் கூகுளின் ஆதிக்கமே உள்ளது. ஆனால் உலவி என்று எடுத்துக் கொண்டால் அதில் இண்டர்நெட் எக்ஸ்புளோரரும், நெருப்புநரி உலவியின் ஆதிக்கமே நிறைந்துள்ளது.
இதிலும் கூகுள் நிறுவனம் தன்னுடைய உரிமையை நிலைநாட்ட விரும்பி இரண்டு வருடங்களுக்கு முன்னர் கூகுள் குரோம் என்ற உலவியை வெளியிட்டது. ஆனால் இந்த உலவி தொடக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. ஆனால் இந்த உலவியால் பயனாளர்களை எந்த அளவிற்கும் கவர இயலவில்லை.
இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனம் கூகுள் குரோம் உலவியில் புதுப்புது வசதிகளை சொடுகியது. அதில் ஒன்று தான் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி ஜிமெயில் இருந்தவாறே Face book அக்கவுண்டை பார்ப்பதற்கான நீட்சி ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஜிமெயில் அக்கவுண்டில் இருந்தவாறே பேஸ்புக் கணக்கை உங்களால் அணுக முடியும். இந்த நீட்சியை உங்களுடைய கூகுள் குரோம் உலவியில் பதிந்து கொள்ளவும். அதற்கு சுட்டியை கிளிக் செய்தவுடன் மேலே குறிப்பிட்ட விண்டோவினை போல் ஒரு விண்டோ தோன்றும்.
அதில் Install என்னும் பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்தவுடன் தோன்றும் விண்டோவில் Allow என்னும் பொத்தானை அழுத்தவும். இப்போது உங்களுடை கூகுள் குரோம் உலவியை ஒருமுறை மறுதொக்கம் செய்து கொண்டு, உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் உள்நுழையவும்.
இப்போது உங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டில் பேஸ்புக் இணைப்புக்கான பொத்தான் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இந்த பொத்தானை அழுத்தியவுடன் பேஸ்புக் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். இப்போது உங்களுடைய பேஸ்புக் கணக்கை காண முடியும். இந்த வசதியை நீங்கள் கூகுள் குரோம் உலவியில் இருந்தால் மட்டுமே பெற முடியும்.