Wednesday, March 16, 2011

இன்றைய செய்திகள்.

லிபியாவில் புரட்சியாளர்களிடம் இருந்து மேலும் ஒரு நகரம் மீட்பு: ராணுவம் அதிரடி நடவடிக்கை.

லிபியாவில் அதிபர் கடாபி பதவியில் இருந்து வெளியேற வலியுறுத்தி பொதுமக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தும் போராட்டக்காரர்கள் பெங்காசி, ஷாலியா, ராவ்வஜப், அஜ்தா பியா உள்ளிட்ட நகரங்களை பிடித்து தங்கள் கட்டுப்பாட் டில் வைத்திருந்தனர்.எனவே, அவற்றை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவத்துக்கு கடாபி உத்தர விட்டார். இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் வசம் இருந்த நகரங்கள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
போராட்டக்காரர்கள் வசம் இருந்த ஷாவியா, ராவ் வஜப், பிரகா ஆகிய நகரங்களை ராணுவம் மீட்டு மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதை தொடர்ந்து அஜ்தாபியா நகரை மீட்பதில் முனைப்பாக இருந்தது.அந்நகரின் மீது கடாபியின் ராணுவ விமானங்களும், ஆதரவாளர்களும் ராக்கெட் குண்டுவீசி தாக்கினர். போராட்டக் காரர்களின் புரட்சி படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். கடந்த 3 நாட்களாக நடந்த சண்டையில் அஜ்தாபியா நகரம் ராணுவம் வசம் வீழ்ந்தது.
தற்போது அது கடாபியின் ஆதரவாளர்கள் வசமாகி விட்டது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்களின் வசமுள்ள லிபியாவின் 2-வது பெரிய நகரமான பெங்காசியை கைப்பற்றுவதில் ராணுவம் மிக தீவிரமாக உள்ளது. இதற்கிடையே, லிபியாவின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் அங்கு போர் விமானங்கள் பறக்க தடை குறித்து விவாதிப்பதற்கான வளர்ந்த நாடுகள் கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தது.
அதில், பிரான்ஸ் தவிர மற்ற 7 நாடுகளுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்பட வில்லை. பிரான்ஸ் மட்டுமே போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. லிபியா மீது தீவிர நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா.சபையை வலி யுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இது அதிபர் கடாபிக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், அவருக்கு ஐரோப்பிய யூனியனில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கடாபியின் நெருங்கிய நண்பரான இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி இவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.மேலும் லிபியா போராட் டக்காரர்களை பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஷி அங்கீகரித்துள்ளார். இது கடாபிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் 4வது அணு உலையும் வெடித்தது.
நிலநடு‌க்க‌த்தாலு‌ம், சுனா‌மியாலு‌‌ம் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஜ‌ப்பா‌‌ன், அணு ‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌ல் உ‌ள்ள 4வது அணு உலை‌யி‌ல் ‌தீ ‌விப‌த்து ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் க‌தி‌ர்‌வீ‌ச்சு அபாய‌ம் அ‌தி‌க‌ரி‌த்து‌ள்ளது.
சுனா‌மி‌யா‌ல் ஃபுகு‌ஷிமா, டாய்ச்சி அணு ‌மி‌ன் ‌நிலைய‌த்‌தி‌ல் உ‌ள்ள அணு உலைக‌ள் தொட‌ர்‌ந்து பா‌தி‌‌ப்பு‌க்கு‌ள்ளா‌கி வரு‌கி‌ன்றன. அணு உலைகளை கு‌ளி‌ர்‌வி‌க்க செ‌ய்ய எடு‌த்து முய‌ற்‌சிக‌ள் அனை‌த்து‌ம் தோ‌ல்‌வி அடை‌ந்தன.
1 முத‌ல் 3வது அணு உலைக‌ள் அடு‌த்தடு‌த்து வெடி‌த்ததா‌ல் அணு ‌மி‌ன் ‌நிலைய‌த்தை சு‌ற்‌றி‌யிரு‌ந்த 1 ல‌ட்ச‌த்‌தி‌‌ற்கு‌ம் மே‌ற்‌ப‌ட்ட ம‌க்க‌ள் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.
த‌ற்போது 4வது அணு உலை‌யி‌ல் ‌தீ ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல் க‌தி‌ர்‌வீ‌ச்சு அபாய‌ம் அ‌தி‌க‌ரி‌த்து‌ள்ளது. அணு உலை‌யி‌ல் இரு‌ந்து க‌‌தி‌ர் ‌வீ‌ச்சுக‌ள் வெ‌ளியேறுவது இ‌ன்று காலை முத‌ல் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இதனா‌ல் அ‌ங்கு ப‌ணியா‌ற்று‌ம் ஊ‌ழிய‌ர்க‌ள் அனைவரையு‌ம் ஜ‌ப்பா‌ன் அரசு ‌திரு‌ம்ப அழை‌த்து‌ள்ளது.
க‌தி‌ர் ‌வீ‌ச்சு அளவு மேலு‌‌ம் அ‌திக‌ரி‌த்தா‌ல் பெ‌‌‌ரிய ‌விப‌த்தை ஜ‌ப்பா‌ன் எ‌தி‌ர்கொ‌ள்ள நே‌ரிட‌ம் எ‌ன்பதா‌‌ல் மு‌ன்னெ‌‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கையாக உலக நாடுக‌ள் அணு உலைகளை பாதுகா‌ப்பது கு‌றி‌த்து ஆ‌ய்வுக‌ள் மே‌ற்கொ‌‌ண்டு வரு‌கி‌ன்றன.இத‌னிடையே அணு உலைகளை பாதுகா‌க்க உதவுமாறு அமெ‌‌ரி‌க்கா‌விட‌ம் ஜ‌ப்பா‌ன் உத‌வி கோ‌ரியு‌ள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டம்: பக்ரைனில் அவசர நிலை பிரகடனம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான பக்ரைனில் மன்னர் ஹமாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தில் ஷியா பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் மனாமாவில் மீண்டும் போராட்டம் வெடித்தது. ஷியா பிரிவினரும், மன்னருக்கு ஆதரவாக செயல்படும் சன்னி பிரிவினரும் மோதிக் கொண்டனர். எனவே கலவரம் மூண்டது.
கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போராட்டம் வலுவடைந்துள்ளது.மனாமா நகரம் முழுவதும் மோதல்கள் வெடித்துள்ளன. இதனால் அங்கு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பாங்கிகள் மூடப்பட்டன.எனவே அங்கு தெருக்கள் முழுவதும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.போராட்டத்தை அடக்க சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளை சேர்ந்த ராணுவம் வர வழைக்கப்பட்டுள்ளது.
அவை பக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இது 3 மாதத்துக்கு அமலில் இருக்கும். இதற்கான உத்தரவை மன்னர் ஹமாத் பிறப்பித்துள்ளார்.
உலக அணுவாயுதக் கையிருப்பை விட 1000 மடங்கு சக்தி வாய்ந்த ஜப்பான் பூமியதிர்ச்சி.
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத்தினதும் அணு ஆயுதங்களை விட 1000 மடங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வதிர்ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் டி.என்.டி வெடிபொருட்களின் சக்திக்கு சமனானதெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். டி.என்.டி எனப்படுவது Trinitrotoluene என்பதன் சுருக்கமாகும். இது ஒருவகை வெடிக்கக்கூடிய இரசாயன பொருளாகும். பொதுவாக கடல் அடியில் ஏற்படும் புவி அதிர்வானது சாதாரண நில அதிர்வினை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாகும்.உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் 20 வீதமானவை ஜப்பானிலேயே இடம்பெறுகின்றன. இவற்றில் அதிகமானவை 6 ரிச்டர்களுக்கும் அதிகமாகும்.

புவியியலாளர்களின் கருத்தின்படி பூமியின் பல கண்டங்களினதும் மற்றும் சமுத்திரங்களினதும் தட்டுக்கள் உதாரணமாக பசுபிக் தட்டு, பிலிப்பைன் தட்டு, யூரோ ஏசிய தட்டு, வட அமெரிக்க தட்டு ஆகியன ஜப்பானிய பகுதியிலேயே சந்திக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு பல எரிமலைகள் மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எனபன அமைந்துள்ளன.

மேலும் ஜப்பான் பசிபிக் எரிமலை வலையம் எனப்படும் உலகின் அதிகமான நிலநடுக்கங்கள் எரிமலை கொந்தளிப்புக்கள் இடம்பெறும் பகுதியிலேயே அமையப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதொரு காரணியாகும்.




பிரிட்டனில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கான தொழில்கள் குறைப்பு!

ஐரோப்பிய யூனியனுக்குள் வரும் நாடுகளில் வேலை வாய்ப்புக்களில் அரைவாசி மட்டுமே ஐரோப்பிய யூனியனுக்கு வெளியேயுள்ள குடியேற்ற வாசிகளுக்கு வழங்கப்படும்.இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் வெளியிடப்பட்டது. தற்போது 500000 பதவிகளை வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. 

இவற்றை பிரிட்டிஷ் அல்லது ஐரோப்பிய யூனியன் தொழிலாளர்களால் நிரப்ப முடியாமல் உள்ளதாக முதலாளிமார் தெரிவித்துள்ளனர். இது ஏப்பிரல் மாதம் முதல் 230000 மாகக் குறையவுள்ளது. பட்டதாரிகளற்ற தொழில்கள் உள்துறை அமைச்சின் பதவிநிலைக் குறைபாட்டுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள தொழிலில் மலர்த் தொழிலும் அடங்கும். ஐரோப்பிய யூனியனுக்கு வெளியேயுள்ள அழகியல் சலூன் முகாமையாளர்கள், பெருந்தோட்ட முகவர்கள், மலர்த் தொழில், குழாய் பொருத்துனர்கள், உருக்குத் தொழில், வெல்டிங் தொழில் என்பன இந்தத் தடைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.ஏனைய தொழில் வகைப்படுத்தல் பற்றிய நிபுணத்துவ ஆலோசனையையும் பெற்றுக்கொள்ள உள்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது. பிரிட்டனில் போதியளவு ஆற்றல்மிக்க தொழிலாளிகள் ஏராளமாக உள்ளனர். 

இன்னும் பல துறைகளை இவர்களைக் கொண்டு நிரப்பலாம் என்று உள்துறை அமைச்சு கருதுகின்றது.ஆற்றல்மிக்க தொழிலாளிகளுக்கு உண்மையிலேயே தட்டுப்பாடு ஏற்படுகின்ற போதுதான் வெளிநாட்டவர்களுக்கான வாய்ப்பின் மீது கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதே பிரிட்டிஷ் அரசின் நோக்கமாகும்.
அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்.
பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். 

அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். 


மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.

அட்லாண்டிஸ்
கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.
அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார். 

அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர். 

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் பாரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவர்களின் கண் முன்னே துடிக்க துடிக்க சுட்டுக் கொல்லப்பட்ட பசுக்கள்!

ஒரு பண்ணையில் இருந்துத் தப்பிச் சென்ற 30 பசுக்களும் அவற்றைச் சுற்றி வளைத்த துப்பாக்கி நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டன. இந்தப் பயங்கரக் காட்சியைக் கண்ட சிறுவர்கள் குழுவொன்று அச்சமடைந்துள்ளது. 

ஈவு இரக்கமின்றி துடிதுடிக்க இந்த பசுக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது தமது வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களே அதைக் கண்டுள்ளனர். இந்தச் சிறுவர்களுள் சிலர் எட்டு வயதானவர்கள். இந்தச் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கருகில் ஆஸ்பத்திரி ஒன்றும் உள்ளது. அங்குள்ள நோயாளிகள் இதைக் கண்டு அதிர்ச்சியடையக் கூடாது என்பதற்காக வைத்தியர்கள் அதன் யன்னல் திரைச் சேலைகளையும் இழுத்து மூடினர்.

இந்த பசுக்களைக் கொன்று குவித்தவர்கள் வேறு யாருமல்ல. குறிபார்த்துச் சுடும் பொலிஸார். வேல்ஸ் வடக்கில் உள்ள ரெக்ஸ்ஹேமில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த மிருகங்களை சுட்டுக் கொல்வதற்கான முடிவு நேற்றிரவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பசுக்கள் பார்ப்தற்கு ஆரோக்கியமாகவே இருந்தன. ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான பவுண்கள் பெறுமதியானவை.

வெறுமனே ஒரு இடத்தில் இருந்து தப்பி வந்தமைக்காக இவற்றைக் கொன்று குவித்தமை நியாயமற்றது என்று சம்பவம் நடந்த இடத்தில் வசிக்கும் மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டப் பசுக்கள் வாகனங்களில் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டன. பசுக்கள் மேலும் வேதனைப்படக் கூடாது என்பதற்காகவே அவை கொல்லப்பட்டதாக சம்பந்தப்படவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அது என்ன வேதனை என்று எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆனால் இது மிருக நலன் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையென்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது..

கொரிய தீபகற்பம் 5 செ.மீ., நகர்ந்தது.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக கொரிய தீபகற்பம் 5 செ.மீ., நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 
ரஷ்யாவில் கதிர்வீச்சு : ராணுவம் உஷார்
ஜப்பானில் அணுஉலை வெடித்து கதிர்வீச்சு ஏற்பட்டுள்ளது. காற்றில் பரவிய கதிர்வீச்சு, தற்போது ரஷ்யா-ஜப்பான் எல்லையில் இருக்கும் விளாடிவஸ்தக் நகரிலும் பரவியுள்ளது. இதனையடுத்து ரஷ்ய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ராணுவம் வலியுறுத்தி வருகிறது.
அமெரிக்காவிடம் உதவி கோரியது ஜப்பான்.
ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருக்கும் அணுஉலைகள் சேதமடைந்தன. அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டுள்ளதால் ஜப்பானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிடம் ஜப்பான் உதவி கோரியுள்ளது. அமெரிக்க ராணுவப்படைகள் அணுகதிர்வீச்சை சமாளிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
நுண்ணறிவு திறனில் விஞ்ஞானிகளை மிஞ்சிய 11வயது மாணவி.
21-ம் நூற்றாண்டின் கம்ப்யூட்டர் உலகின்ஜாம்பவனான பில்கேட்சின் காட்டிலும்நுண்ணறிவுத்திறனில் முன்னிலை வகிக்கிறார்.இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர்.இது பற்றிய விபரம் வருமாறு: இங்கிலாந்தை சேர்ந்தவர் விக்டோரியா கவ்வி. இவர் மற்ற மாணவிகளைப்போன்ற வயதுடையவராக இருப்பினும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறார். காரணம் இவரிடம் காணப்படும் அபரிமிதமான அறிவுத்திறனே . பல ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐஸ்டீனின் நுண்ணறிவுத்திறன் அளவு 160. பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரும் இதே விகித்தை கொண்டுள்ளனர்.ஆனால் விக்டோரியாவின் நுண்ணறிவுத்திறனின் அளவு 162 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விக்டோரியாவிடம் கேட்டபோது எனக்கு இப்படி ஒரு திறமை இருப்பது நம்ப முடியாத ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது என தெரிவித்தார். இவரின் நுண்ணறிவுத்திறனுக்கு முன்னால் பல அறிஞர்களின் அறிவித்திறனின் அளவுகள் பின்தங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாவீரன் நெப்போலியனின் நுண்ணறிவின் அளவு 145,சிக்மண்டு பெர்ரடு 156, மடோனா- 140, ஹிலாரி கிளிண்டன்- 140, பில் கிளிண்டன்-135, நிக்கோலே கிட்மன்-132 என அனைத்து தரப்பினரும் இம் மாணவிக்கு பின்னரே வருகின்றனர்.புதிர் போட்டியில் அதிக விருப்பம் உள்ளது என தெரிவிக்கும் மாணவி விக்டோரியாவின் விருப்பம் தாவரவியல் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்பதே ஆகும்.இவரின் பெற்றோர் டேவிட் ஆலிசன் தம்பதியினர் வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த கிளாவர்லி நகரில் வசித்து வருகின்றனர். விக்டோரியா தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் மட்டுமல்லாது பாடுவது.நடனம், பியானோ, சாக்ஸோபோன் இசைப்பது, நீந்துவது போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தயாரிப்பு டீசல் ரயில் எஞ்ஜின்கள் இறக்குமதிக்கு இலங்கை தடை.
தொழில்நுட்ப ‌கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இந்திய டீசல் ரயில் எஞ்ஜின்களை இறக்குமதி செய்ய இலங்கை தடை விதித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டீசல் ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதற்காக 167 மில்லியன் டாலர் அளவுக்கு 17 ரயில் எஞ்ஜின்கள் ஏற்றுமதி செய்ய இலங்கை- இந்தியா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி 17 டீசல் ரயில் எஞ்ஜின்கள் இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்டன. இத்தகைய டீசல் ரயில் எஞ்ஜின்களுக்கு நடந்த சோதனை ஒட்டத்தின் போது தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் குமாராவெல்காமா, டெய்லி மிரர், ஆன்லைன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் தென்பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து துவங்குவதற்காக இந்தியாவிடமிருந்து 17 ரயில் எஞ்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இதற்காக சோதனை ஒட்டம் நடத்திய போது ரயில்கள் இயங்குவதில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதன்மூலம் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு்ள்ளது தெரியவந்துள்ளது. இனி இந்தியா ரயில் எஞ்ஜின்களை இறக்குமதியை நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் இந்திய ரயில் எஞ்ஜின்களின் தரம் குறித்து நன்கு ஆராய்ந்த பிறகே இறக்குமதி குறித்து பரிசீலிக்கப்படும். இலங்கை அரசின் பொதுநிதியினை இனிமேல் வீணடித்திட மாட்டோம்.. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட டீசல் ‌எஞ்ஜின்களின் தரம் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்படு். இவ்வாறு அவர் கூறினார் .
லிபியா நாட்டின் மீது விமானம் பறக்க தடை: ஜி 8 நாடுகள் முடிவு
லிபியா நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்தஅந்நாட்டின் மீது விமானம் பறக்க தடை விதிக்க வேண்டும் என ஜி-8 உறுப்பு நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜி-8 என்றழைக்கப்படும் வளர்ந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் லிபியாவில் அதிபர் கடாபி நடத்தி வரும் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.அதற்காக அந்நாட்டின்மீது விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் கைடோ வெஸ்டர் வெல்லி கருத்து தெரிவித்தார். இந்த கருத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் சரியான தீர்வு என்றும் இதனை விரைவில் செயல்படுத்த ÷ண்டும் என்றும் கூறினார்.ஆனால் ஜி-8 நாடுகளின் கருத்தை ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புக்கொள்ளவில்லை.பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பு நாடுகளாக உள்ள ரஷ்யா விமானம் பறக்க தடை விதிப்பதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF