Saturday, March 19, 2011

இன்றைய செய்திகள்.

இன்று சுப்பர் மூன்! - பூமிக்கு அருகில் இன்று தோன்றும் சந்திரன்! மக்கள் பீதியடையத் தேவையில்லையாம்.

குறைந்த பட்சம் 19 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறுவதாகக் கூறப்படும் சந்திரன் பூமியை மிகவும் நெருங்கி வரும் விண்வெளி அதிசயம் இன்று இடம்பெறவுள்ளது.சுப்பர்மூன் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வை தெட்டத் தெளிவாகக் காணக்கூடியவாறு இன்று வானம் மிகத் தெளிவாக இருக்கும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். ஒரு முழு நிலவு அல்லது புது நிலவு பூமியை 90 வீதம் அருகே நெருங்கி வரக்கூடியதாக இன்றைய நிகழ்வுஅமைந்திருக்கும். 

கடைசியாக இந்த நிகழ்வு 1992 ஜனவரியில் இடம்பெற்றுள்ளது. இந்த சுப்பர்மூன் நிகழ்வு இடம்பெறுகின்ற போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் சுமார் 250000 மைல்களாக இருக்கும். இன்று மாலை 6.10க்கு பிரிட்டனில் இருந்து சந்திரனின் தூரம் சரியாக 220625 மைல்களாக இருக்கும். சுமார் ஒரு மாதகாலத்துக்கு முன் இருந்த தூரத்தை விட இது 625 மைல்கள் கிட்டிய தூரமாகும். அதுமட்டுமன்றி வழமையாக சந்திரன் தென்படுவதிலும் பார்க்க 14 வீதம் பெரிதாகவும், 30 வீதம் பிரகாசமானதாகவும் இருக்கும். 

கிட்டத்தட்ட தொடுவானத்துக்கும், மலை முகடுகளுக்கும் மிக நெருக்கமாக இன்று சந்திரன் காட்சியளிக்கும். இன்று தென்படவுள்ள சந்திரனின் அளவு வித்தியாசத்தை மனிதக் கண்களால் ஒப்பீடு செய்ய முடியாமல் இருக்கும் என்றும் வானியல் வஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 

இன்றைய நிகழ்வு பூமியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும்,அன்மையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கும் இன்றைய நிகழ்வுக்கும் சம்பந்தம் உள்ளது என்பதையும் திட்டவட்டமாக விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அதைப் பார்த்து ரசியுங்கள் அவ்வளவுதான் வேறு ஒன்றும் இதில் இல்லை என்று அவர்கள் மக்களுக்குத் தெரிவித்துள்ளனர்

பூமிக்கு அருகில் இன்று தோன்றும் சந்திரன்! மக்கள் பீதியடையத் தேவையில்லையாம் 

பூமிக்கு மிக அருகில் இன்று சந்திரன் வருவதால் (சூப்பர் மூன்) சுனாமி, பூகம்பம் மற்றும் பல்வேறு அனர்த்தங்கள் நிகழ்கின்றது என பரப்பப்படும் வதந்திகள் பொய்யானவை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று பூமியில் இருந்து மிகக் குறைந்தளவான தூரமான 3 இலட்சத்து 56 ஆயிரத்து 577 கிலோமீற்றர் தொலைவில் சந்திரன் காட்சியளிக்கும். பூமியை சந்திரன் நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. இந்த நீள்வட்டப்பாதை இரு இடங்களில் பூமிக்கு நெருக்கமாக வரும். இதனால் வழமையாக தோற்றமளிக்கும் சந்திரனின் தோற்றத்தைவிட 14 சதவீதம் பெரிதாக இருக்கும். 

கடந்த 1912ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி பூமியிலிருந்து 3 இலட்சத்து 56 ஆயிரத்து 375 கிலோமீற்றர் தொலைவில் சந்திரன் காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று 2125 ஆம் ஆண்டு பெப்ரவரி 3ஆம் திகதி பூமியிலிருந்து 4 இலட்சத்து 6ஆயிரத்து 720 கிலோமீற்றர் தொலைவில் சென்றுவிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டமைக்கு சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதனால் என மக்கள் மத்தியில் வதந்திகள் பரப்பப்பட்டன. இது வழக்கமான ஒன்று என்றும் இதுகுறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் புக்குஷிமா : 50 கி.மீ தொலைவுக்கு அணுக்கதிர் வீச்சு அபாயம்.
ஜப்பானின் புக்குஷிமா அணு உலைகளில் வெப்பத்தை தணிக்க, ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி தொடர்ந்து நடக்கிறது. ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட சுனாமியால் புக்குஷிமா டாய் இச்சியில் உள்ள, அணு சக்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இங்குள்ள ஆறு அணு உலைகளில் நான்கு உலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. உலைகளை இயக்கி வரும், டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி, அவற்றின் உண்மை நிலை என்ன என்பது பற்றி முழுமையாக தெரிவிக்கவில்லை.
 
அணுமின் நிலையங்களில் தொடர்ந்து கதிர் வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்த அணுசக்தி நிலையங்களை சுற்றி 50 மைல் தொலைவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணு உலையிலும், உலைக்கு மேற்புறம், பயன்படுத்தப்பட்ட யுரேனியம் கம்பிகள், தனியாக ஒரு நீர் கொள்கலனில் வைக்கப்பட்டிருக்கும். உலைகளுக்குள் கடல்நீர் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்ட உடன், இந்த கம்பிகளில் இருக்கும் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த உஷ்ணம் அபரிமிதமானது.
 
தொடர்ந்து 3 மற்றும் 4ம் உலைகளில் இருந்து புகை மூட்டம் எழுந்தது. இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உலைகளின் மீது தண்ணீர் ஊற்றும் முயற்சி நடக்கிறது. தீயணைப்பு வண்டிகளும் அணு உலைகளின் வெப்பத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் ஹெலிகாப்டரிலிருந்து ஊற்றப்படும் நீர் சரியான இலக்கில் பாயாமல் சிதறுவதால் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் இந்த அணு உலைகளுக்கு மேல் பறக்க செய்து நிலைமையை கண்காணிக்கும் படி அமெரிக்கா, ஜப்பானை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே ஜப்பான் சுனாமியால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்ட சென்டாய் விமான நிலையம் போலீஸ் மற்றும் ராணுவ விமானங்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. சென்டாய் நகரில் தெருக்களை மூடிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும் மீட்பு வாகனங்களுக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தால் பணிகள் சுணக்கமடைந்துள்ளன.
 
* 8 லட்சம் வீடுகளுக்கு மின் சப்ளை இல்லை
*அணுக்கதிர் அபாயம் இருக்கும் என்ற அச்சத்தில் டோக்கியோ நகரின் வான்வெளியில் விமானங்கள் பறக்காமல் சுற்றி வருகின்றன.
*ஜப்பான் வடக்குப் பகுதியில் 8 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளுக்கு மின் சப்ளை இல்லை. வாட்டும் குளிரில் மக்கள் சிரமப்படுகின்றனர். குடிநீர்     சப்ளையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கம்பளியைப் போர்த்தியபடி மிக மோசமான நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.
* குடிநீர் வசதி சரியாக இல்லாததும், மற்ற சுற்றுச்சூழல் பாதிப்பும் பலருக்கு வயிற்றுப் போக்கு நோய் ஏற்படக் காரணமாகிவிட்டது.
* ஜப்பானின் ஆட்டோமொபைல், எலக்டிரானிக் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஜப்பான் மொத்த வளர்ச்சி பாதிக்கப்படும்.
 பிரித்தானியா4 வயதுக்கும் குறைவான 5 இல் ஒரு குழந்தையின் படுக்கையறையில் தொலைக்காட்சி!
நான்கு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுள் ஐந்தில் ஒரு சாராருக்கு அவர்களது படுக்கை அறையில் தொலைக்காட்சி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலைமை காரணமாக இந்த வயதில் பிள்ளைகளுடன் அதிகம் பழக வேண்டிய பெற்றோர்கள் ஓரம் கட்டப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக 17 வீதமான பெற்றோர்களும், 28 வீதமான இளம் பெற்றோர்களும், நான்கு வயதுக்குக் கீழ்பட்ட தங்களது பிள்ளைகளின் படுக்கையறையில் தொலைக்காட்சி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மின்டல் என்ற சில்லறை வர்த்தக ஆய்வாளர்களே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள், செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் என முக்கியஸ்தர்களே பெரும்பாலும் தமது பிள்ளைகளுக்கு இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். வறிய நிலையில் உள்ளவர்களும் போதிய கல்வி அறிவு இல்லாதவர்களும் கூட இதை பெரிதும் விரும்புகின்றனர் என்று இந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களைக் குறிவைக்க பிரிட்டிஷ் வீரர்களுக்கு அதிநவீன துப்பாக்கி!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களைக் குறிவைப்பதற்காக பிரிட்டிஷ் படை வீரர்கள் நவீன துப்பாக்கித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த தயாராகியுள்ளனர். ஒருமைல் தூரத்துக்கு அப்பால் இருந்தே தலிபான்களின் குறிபார்த்து சுடும் போராளிகளின் தோட்டா சத்தங்களைக் கொண்டு அவர்களின் இலக்கினை புரிந்து கொள்ளக் கூடிய நவீன தொழில்நுட்பத்தையே பிரிட்டிஷ் வீரர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

எதிரியின் இருப்பிடத்தை 1.3 வினாடிகளில் இனம் கண்டுகொள்ள இந்தப் புதிய தொழில்நுட்பம் உதவுகின்றது. இந்தத் துப்பாக்கியை சுப்பர்கன் என்று அழைக்கின்றனர். கிளர்ச்சிக் காரர்களின் குறிபார்த்துச் சுடும் பிரிவுக்கு இனி கெட்ட காலம் பிறந்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

 கிளர்ச்சிக்காரர்களின் துப்பாக்கியிலிருந்து தோட்டா வெளியான உடனேயே காற்றலைகளில் ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இருந்தே அது வெளிப்படும் ஓசையைக் கொண்டு அது எங்கிருந்து வருகின்றது என்பதை1.3 வினாடிகளுக்குள் இது காட்டிக் கொடுத்துவிடும். இந்த நவீன துப்பாக்கியின் திரையில் அந்த திசையைத் தெரிந்து கொண்டது வேகமாகச் செயற்பட்டு அதிலிருந்து தப்பிக்கவோ அல்லது பதில் தாக்குதல் நடத்தவோ முடியும்.

ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பம் இதில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. களப் பரிசோதனைகள் முடிவுற்ற நிலையில்இந்தப் பதிய பொறிமுறையுடன் கூடிய துப்பாக்கி இப்போது பாவனைக்குத் தயார் நிலையில் உள்ளது. களத்தில் உள்ள தமது படை வீரர்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொடுக்க உறுதி பூண்டுள்ளதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஏமனில் கலவரம் 46 பேர் பலி.
ஏமனில் அரசுக்கு ஆதரவானவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் போராட்டக்காரர்கள் 46 பேர் உயிரிழந்தனர்.
அதிபர் பதவி விலக வலியுறுத்தி ஏமனில் கலவரம் ஏற்பட்டது. இதில் 46 பேர் பலியானார்கள். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் அப்துல்லாசலே கடந்த 32 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார். அவர் பதவி விலக வலியிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சனாவில் தொடங்கிய போராட்டம் தாய்ஷ், இப், ஹோடைதா, ஏடன், அமரன் உள்ளிட்ட நகரங்களுக்கு பிரவியது. தற்போது அது கலவரமாக மாறியுள்ளது. இந்நிலையில் வெள்ளிக் கிழமையான நேற்று சனா நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிபர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போரட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே அங்கு குழுமியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இருந்தும் போலீசார் 20 நிமிட நேரம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், 46 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்தினால் போராட்டம் நடந்த சதுக்கம் முழுவதும் ரத்த சகதி ஆனது. கூக்குரலும், அழுகையுமாக காணப்பட்டது. போராட்டம் நடைபெற்ற சதுக்கத்தின் அருகே சனா பல்கலைக்கழகம் உள்ளது. அதன் மொட்டை மாடி மற்றும் கூரையின் மீது கவச உடை அணிந்த போலீசார் சரமாரியாக சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள மசூதியில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஏமனில் பொருளாதார சீர் திருத்தம், அரசியல் சட்ட மாற்றத்துக்காகவே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை தங்கள் நாட்டுக்கும் ஏற்படும் என எண்ணை வள நாடான சவுதி அரேபியா கருதுகிறது. எனவே அந்நாட்டு இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்க சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதத்துக்கு குறைந்தது ரூ.37 ஆயிரம் சம்பளம் வழங்க இருப்பதாக மன்னர் அப்துல்லா பின் அப்துல்லாசிஷ் தெரிவித் துள்ளார். மேலும் 5 லட்சம் குடும் பங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகளும், ரூ.20 ஆயிரம் கோடி செலவில் மருத்துவ உதவிகள் வழங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார். ராணுவம் மற்றும் போலீஸ் துறைகளில் மேலும் பல வேலை வாய்ப்பு களையும் அவர் உறுதி செய்தார்.
அணுக்கதிர் வீச்சுஅணுமின் நிலையம்: மூட முடிவு
ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியை தொடர்ந்து புக்குஷிமா நகரில் உள்ள, நான்கு உலைகளில் 1,2,3 ல் யுரேனியம் எரிபொருள் கம்பிகள் உருகிவிட்டன.
தற்போது, 1 மற்றும் 3 ம் உலைகளுக்கு மின்சார இணைப்பு கொடுத்து, அதன் மூலம் நீரை உட்செலுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று 3ம் உலையில், தற்காப்புப் படைகள், 50 டன் நீரைக் கொட்டி வெப்பத்தைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இது குறித்து டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி அதிகாரி ஒருவர் கூறுகையில்,"கான்கிரீட் கலவையைக் கொட்டி அணுமின் நிலையத்தை மொத்தமாக மூடுவதற்கும் வாய்ப்புள்ளது.
எனினும், தற்போது உலைகளின் வெப்பத்தைக் குறைக்கத் தான் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம்' என்றார்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF