Sunday, March 13, 2011

சிரித்தால் புண்கள் குணமாகி விடும்: ஆராய்சித் தகவல்.


புண்களை குணப்படுத்துவதற்கு தற்போது பயன்படும் தொழில் நுட்பத்தை காட்டிலும் சிரிப்பு வெகுவாக உதவுகிறது என லீட்ஸ் பல்கலைகழக குழு தெரிவித்துள்ளது.
புண்களை குணப்படுத்துவதற்கு இதே போன்று ஆய்வு 5 ஆண்டுகளில் 338 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பெரும் வித்தியாசம் தெரியவில்லை என பிரிட்டிஷ் மருத்துவ குழு குறிப்பிடுள்ளது.இந்த ஆய்வினை மேற்கொண்ட குழுவின் முதன்மை ஆராய்ச்சியாளரான பேராசியர் அஸ்ட்ரியா நெல்சன் கூறியதாவது: காயமடைந்த நோயாளிகளுக்கு கால் முதல் இதயம் வரை ரத்த ஓட்டத்தை தூண்ட முயற்சித்தோம். இந்த முயற்சிக்கு புண் ஏற்பட்ட நோயாளியை நன்கு சிரிக்க அறிவுறுத்துகிறோம்.
இப்படி சிரிப்பதால் முக்கிய உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் வேகமாக செல்கிறது. புண்களும் விரைவாக குணமடைகின்றன என்றார். இந்த ஆய்வின் போது 6 மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் புண்கள் ஆறாத நோயாளிகளிடம் கவனம் செலுத்தப்பட்டது.புண்களுக்கு துணி கட்டி வழக்கமான சிகிச்சை முறை அளிக்கப்பட்டு அல்ட்ராசவுண்ட் சிகிச்சை அளிப்பதால் விரைவாக காயம் குணமடைவதை உணர முடியவில்லை என்றும் இந்த ஆய்வுக்குழு தெரிவித்தது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF