பதவி விலக கடாபிக்கு 72 மணிநேரம் கெடு.
லிபிய அதிபர் பதவியிலிருந்து விலக கடாபிக்கு 72 மணி நேரம் காலகெடு விதிக்கப்பட்டுள்ளது. கடாபி பதவி விலகினால் போராட்டங்களை கைவிடுவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடாபி பதவி விலக மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடாபி பதவி விலகக்கோரி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக லிபியாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த கடாபி உத்தரவிட்டதை அடுத்து போராட்டங்கள் எச்சக்கட்டத்தை எட்டி உள்ளன..
சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை அழிக்க உத்தரவு!
டயனமைட் மூலம் பிடிக்கப்பட்ட 219 கிலோ கிராம் மீன்களையும் மண்ணெண்ணை ஊற்றி எரித்து அழித்துவிடும்படி மாத்தறை நீதிமன்ற நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்ட தோடு, சந்தேக நபரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்.
டயனமைடைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவன் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.கடந்த 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெலிகம மிரிஸ்ஸ பகுதியிலே இம் மீன்கள் பிடிக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்டபோது பொலிசார் இம்மீன்கள் கண்டுபிடித்தனர்.
மொத்தம் 219 கிலோ கிராம் நிறைகொண்ட இம்மீன்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கடந்த திங்கட்கிழமை மீன் வலையொன்றினுள் 600 கிலோ எடையுள்ள பெரிய சுறாமீன் ஒன்றும் சிக்கியுள்ளது.
டயனமைடைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேக நபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவன் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.கடந்த 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெலிகம மிரிஸ்ஸ பகுதியிலே இம் மீன்கள் பிடிக்கப்பட்டு கடத்திச் செல்ல முற்பட்டபோது பொலிசார் இம்மீன்கள் கண்டுபிடித்தனர்.
மொத்தம் 219 கிலோ கிராம் நிறைகொண்ட இம்மீன்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை கடந்த திங்கட்கிழமை மீன் வலையொன்றினுள் 600 கிலோ எடையுள்ள பெரிய சுறாமீன் ஒன்றும் சிக்கியுள்ளது.
தேர்தல் போஸ்டர் அச்சிடும் அச்சகத்தின் மீது குண்டுத் தாக்குதல்!
அநுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் தேர்தல் பிரசார போஸ்டர்கள் அச்சிடும் அச்சகத்தின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என நொச்சிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். இக்குண்டுத்தாக்குதலில் அச்சகத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது.
அச்சகத்தின் உரிமையாளர் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்குண்டுத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சகத்தின் உரிமையாளர் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்குண்டுத் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் ஜனாதிபதி!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி இன்று மன்னாரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார். மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி பொதுக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திர சிறி , அமைச்சர்களான றிஸாட் பதியுதீன், மில்றோய் பெர்ணாண்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான உனைஸ் பாரூக், முத்தலீபாபா பாரூக் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்களங்களில் இருந்தும் அதிகாரிகளும், உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்திலுள்ள சகல அரச திணைக்களங்களில் இருந்தும் அதிகாரிகளும், உள்ளுராட்சி சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்களங்களில் இருந்தும் அதிகாரிகள் பலவந்தமாக பிரச்சாரக்கூட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்தாகவும் இங்குள்ள சகல பாடசாலைகளில் இருந்தும் 20 ஆசிரியர்கள் வீதம் ஆழைத்துச்செல்லப்பட்டதால் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்று பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மீள் குடியேறிய முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!
யாழ் பொம்மை வெளிப்பகுதியில் மீள்குடியேறிய முஸ்லீம் மக்கள் இன்று மாலை முதல் அரசைக் கண்டிக்கும் வகையில் சுழற்சி முறையிலான உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமக்குரிய அடிப்படை வசதிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்றும் அதனைக் கண்டிக்கும் முகமாகவே தான் தாம் இதனை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.இரண்டு நாட்கள் மட்டும் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வுண்ணாவிரத்திற்கும் அதிகாரிகளும் அரசும் செவி சாய்க்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமக்குரிய அடிப்படை வசதிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்றும் அதனைக் கண்டிக்கும் முகமாகவே தான் தாம் இதனை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.இரண்டு நாட்கள் மட்டும் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வுண்ணாவிரத்திற்கும் அதிகாரிகளும் அரசும் செவி சாய்க்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பகல் நேரத் தூக்கம் இருதயத்துக்கு நல்லது.
பகல் நேரத்தில் தூங்குவது இருதயத்துக்கு நல்லது என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.
பென்சில்வேனியா நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றும் ரியான் பிரின்டில், சாரா காங்கிளின் ஆகியோர் ஒரு ஆய்வில் ஈடுபட்டனர். இதில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கினால் அது இருதயத்துக்கு நல்லது என்பதை கண்டறிந்தனர்.
இந்த ஆய்வை அவர்கள் 85 மாணவர்களிடம் மேற்கொண்டனர். அவர்களில் ஒரு பாதியினரை பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்படியும், இன்னொரு பகுதியினரை பகலில் தூங்காமல் இருக்கும் படியும் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் முடிவில் பகலில் ஒரு மணிநேரம் தூங்கினால் ரத்தம் அழுத்தம் குறைவதை கண்டறிந்தனர்.
விபத்தில் கை இழந்த பெண்ணுக்கு வேறொருவர் கை பொருத்தி சாதனை.
கலிபோர்னியாவில் உள்ள மருத்துவர்கள் இந்த கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயது பெண். 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கிய இவரின் வலது கை துண்டானது. அவரது இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமானது. நண்பர்கள் ஆலோசனையின் பேரில் கை மாற்று அறுவை சிகிச்சை குறித்து கேள்விப்பட்டு தன் பெயரை பதிவு செய்தார்.
இந்நிலையில் இறக்கும் நிலையில் இருந்த ஒருவரிடம் இருந்து கை அகற்றப்பட்டிருப்பதாக கலிபோர்னியாவில் உள்ள ரொனால்ட் ரீகன் மருத்துவமனைக்கு தகவல் கிடைத்தது. "கை தேவை" என்று பதிவு செய்து வைத்திருந்த 50 பேரும் உடனடியாக தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர்.
அனைவரிடமும் முதல் கட்ட சோதனைகள் நடந்தது. எலும்பு இணைப்பு, செல் மற்றும் திசு என எல்லா வகையிலும் இந்த பெண்ணின் கையும் தானமாக வந்திருந்த கையும் ஒத்துப் போனது.ரீகன் ஆஸ்பத்திரியில் மருத்துவர் கொடிஅசாரி தலைமையில் சுமார் 14 மணி நேரம் ஓபரேஷன் நடந்தது. அவருக்கு கை நன்கு பொருந்தி இருப்பதாகவும், அவர் உடல் நலம் தேறி வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறுகிறார் கடாபி? லிபியா பரபரப்பு அதிகரிப்பு.
தானும், தன் குடும்பத்தினரும் சொத்துக்களுடன் எவ்வித ஆபத்துமில்லாமல் லிபியாவை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பளிக்கும்படி, எதிர்த்தரப்பிடம் கடாபி கோரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது குறித்த தீர்மானம் ஒன்றை, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஐ.நா.,வில் கொண்டு வந்துள்ளன.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாவியா, மிஸ்ரட்டாவிலும், மேற்குப் பகுதியில் உள்ள ராஸ் லுனுப், பிரிகாவிலும் அரசுப் படைகள் மற்றும் எதிர்ப்புப் படைகளுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் வசிப்பவர்களை தற்போது, கடாபி ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இச்சண்டையில், எத்தனை பேர் பலியாயினர் என்பது தெரியவில்லை. எனினும் கணிசமான அளவு பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருதரப்பு சண்டையில், கடாபி ராணுவம், போர் விமானங்களைப் பயன்படுத்தி எதிர்ப்பாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. எதிர்ப்பாளர்களிடம் போர் விமானங்கள் எதுவும் இல்லாததால், இதுவரை அவர்கள் பிடியில் இருந்த நகரங்கள் கடாபி வசமாகி வருகின்றன. இதனால் பீதியடைந்துள்ள எதிர்ப்பாளர்கள் விடுத்த அறிக்கையில், "லிபிய விவகாரத்தில் அன்னிய நாடுகள் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை விதித்தால் அதுவே எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்' என்று, சர்வதேச கோரிக்கை வைத்தனர்.
ஐ.நா.,வில் குழப்பம்: இதைக் கருத்தில் கொண்டு, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள், லிபியா மீது போர் விமானங்கள் பறக்கத் தடை செய்யும் தீர்மானம் ஒன்றை தயாரித்துள்ளன. இத்தீர்மானம் நாளை, ஐ.நா.,வில் விவாதத்திற்கு வரும் எனத் தெரிகிறது. அமெரிக்க எம்.பி.,க்கள் சிலர், லிபியாவில் அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அது சாத்தியமில்லை என்று, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். லிபியாவின் மீதான ராணுவ நடவடிக்கை அல்லது போர் விமானம் பறக்கத் தடை உள்ளிட்டவற்றுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கைகள், லிபியா மீதான அன்னிய படையெடுப்புக்குச் சமம் என்றும் அது கருதுகிறது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு "வீட்டோ' அதிகாரம் உள்ளதால், இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றவிடாமல் அதனால் தடுத்து விட முடியும் என்பது குறிப்பிடத் தக்கது. ஐ.நா.,வைத் தொடர்ந்து ஜப்பானும், தன் நாட்டில் உள்ள கடாபி சொத்துக்களை முடக்கி, லிபியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கடாபி மகன் எச்சரிக்கை: கடாபி மகன்களில் ஒருவரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான சாடி கடாபி, நேற்று முன்தினம் அல் அராபியா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,"கடாபிக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், சோமாலியாவைப் போல லிபியாவிலும் உள்நாட்டுப் போர் மூளும். என் தந்தை, என் சகோதரரான சயீப் அல் இஸ்லாமிடமும், பிற அமைச்சர்களிடமும் அன்றாடச் செய்திகள் மற்றும் விலைவாசி பற்றி தன்னிடம் தகவல் தெரிவிக்கும்படி சொன்னார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யாததால் தான் இப்போது இந்தளவுக்கு வந்து விட்டது' என்று தெரிவித்தார்.
வெளியேற கடாபி விருப்பம்? இதற்கிடையில், லிபியாவை விட்டு வெளியேறுவது குறித்து எதிர்த்தரப்புக்கு கடாபி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தன் தரப்பில் ஒரு பிரதிநிதியை பெங்காசியில் இயங்கி வரும் இடைக்கால தேசிய கவுன்சில் அரசிடம் அனுப்பி வைத்தார். தானும் தன் குடும்பத்தாரும் சொத்துக்களுடன் லிபியாவில் இருந்து பத்திரமாக வெளியேற அனுமதியளிக்க வேண்டும்; எதிர்காலத்தில் தன் மீது எவ்வித வழக்கும் போடக் கூடாது; இடைக்கால அரசை அங்கீகரிக்கும் விதமாக பார்லிமென்டில் ஒப்பதல் அளிக்கப்படும் என்ற கோரிக்கைகளை அவர் வைத்துள்ளார். ஆனால், கடாபியின் கோரிக்கையை ஏற்க எதிர்ப்பாளர்கள் மறுத்து விட்டனர். அவர், அவ்வாறு எளிதாக லிபியாவை விட்டு வெளியேறினால் அது, இதுவரை பலியானோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறியுள்ளனர். இடைக்கால அரசின் ஊடக செய்தித் தொடர்பாளர் முஸ்தபா கெரானி கூறுகையில்,"கடாபியிடம் இருந்து அதுபோன்ற கோரிக்கை வந்தது உண்மை தான். ஆனால், இன்றைக்கு லிபியா ரத்தம் சிந்தக் காரணமான அந்த ஆளை நாங்கள் எதற்காக நம்ப வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார். கடாபி தப்பிச் செல்வது குறித்த இத்தகவலை லிபிய அரசு மறுத்துள்ளது.
"நேட்டோ' கண்காணிப்பு தீவிரம்: * லிபிய வான்வெளி மீதான 24 மணி நேர "வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு' (அவாக்ஸ்) முறையை "நேட்டோ' அமைப்பு அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், நேட்டோ கண்காணிப்பு விமானங்கள் லிபிய வான்வெளியில் 24 மணி நேரமும், பறக்கும் விமானங்களை அடையாளம் கண்டறியும்.
* லிபிய எதிர்த்தரப்புக்கு உதவும் பல்வேறு முடிவுகளில், அவர்களுக்கு ஆயுதம் வழங்கும் திட்டம் பற்றியும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. ஆனால், அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி இதுபற்றி கூறுகையில், "அது, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் லிபியா மீது விதித்துள்ள ஆயுதப் பரிமாற்றத் தடைக்கு எதிரானது' என்று கூறியுள்ளார்.
* அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கடாபி ஆதரவாளர்கள் அவரை விட்டு விலகி விட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.
* கிழக்கு லிபியாவில் செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதால், பெங்காசி உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நேரும். அதனால், இடைக்கால அரசு இத்தாலியில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.
டோக்கியோ : ஜப்பானின் வட கிழக்கு பகுதியி்ல் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இதில் ஏராளமான கட்டிடங்கள் குலுங்கின. இதனால் ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
கடாபி ஆதரவாளர்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை.
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கடாபி ஆதரவாளர்கள் அவரை விட்டு விலகி விட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என்று எச்சரித்துள்ளார்.கிழக்கு லிபியாவில் செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டதால், பெங்காசி உள்ளிட்ட பகுதிகளில் விரைவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு நேரும். அதனால், இடைக்கால அரசு இத்தாலியில் இருந்து பெட்ரோலை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசித்து வருகிறது.