லிபியா மீதான தாக்குதல்களுக்கு சீனா, இந்தியா, ரஸ்யா என்பன எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன.பிரான்சின் தாக்குதல் விமானங்கள் கடந்த மூன்று நாட்களில் கிட்டத்தட் 10 தாங்கிப்படையணிகளை அழித்துள்ளதாக பிரான்சின் பாதுகாப்பமைச்சர் G�rard Longuet தெரிவித்துள்ளார். லிபிய மக்களைக் காப்பதற்காக கவசவாகன மற்றும் தாங்கிப்படையணிகளைத் தாக்கியழிப்பதாகக் கூறினார்.
எந்த வழிமுறைகளிலாவது மக்கள் காக்கப்பட வேண்டுமென்பதே 1973ன் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானமாகும். இதையே நாம் நடைமுறைப் படுத்துகின்றோம். கடாபியின் அரசு ஒரு மூடிய ஒருவழிப்பாதையினுள் சிக்கியிருப்பதாகக் கருத்துத் தெரிவித்த அவர் இந்தப் போர் லிபிய அரசின் ஆட்சியை உடைத்து ஜனநாயகம் மலர வழிவகுக்கும் என்றார். மேலும் பிரான்சில் எந்தவிதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களும் அடையாளம் காணப்படவில்லை என்றும் பாதுகாப்பமைச்சர் உறுதி கூறினார்.
பிரன்சின் AWACS வேவு விமனங்கள் 11 000 மீற்றர் உயரத்திலிருந்த படி லிபிய வான்பரப்பின் நடவடிக்கைகளை அவதானிக்கின்றனர். Misrata நகரம் இவர்களின் கடுமையான கண்காணிப்பில் உள்ளது. இவ்விமானத்தில் 12 அவதானிகளும் மற்றும் இரண்டு RAFALE விமானங்களும் இந்தப் பகுதியைக் கண்காணிக்கின்றன. இவற்றின் வேவுகள் AWACS தளத்தோடும் Lyonல் உள்ள வான் நடவடிக்கைகளின் தேசிய மையம் (Centre national des op�rations a�riennes (CNOA) de Lyon) என்பவற்றிற்கிடையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
ஆனால் அத்தனை தாக்குல்களிற்குப் பின்னரும் கடாபியின் படையினர் தமது நிலங்களைப் புரட்சிப்படையினரிடமிருந்து வேகமாக மீட்கின்றனர். சர்வதேசக் கூட்டுப்படைகளின் உதவியோடும் புரட்சிப்படையினர் தத்தளிக்கின்றனர். Ajdabiya, Misrata, Zawiya ஆகிய நகரங்களில் கடாபியின் படையினருக்கும் புரட்சிப்படையினருக்குமிடையில் கடும் சண்டை நடைபெறுகின்றது. Tripoli யில் இன்னமும் வான் எதிர்ப்பு ஆயுதங்கள் இயங்கியபடிதான் இருக்கின்றது. புரட்சிப்படைகள் ஆயுதங்களின்றி பெரும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். கடாபி தப்பி ஓடுவாரா அல்லது புரட்சியாளர்களை ஒடுக்குவாரா.