Tuesday, March 29, 2011

செயற்கை இலை விஞ்ஞானிகளின் ஓர் அரிய கண்டுபிடிப்பு.

Artificial_Leaves.jpg
செயற்கை இலை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை எம்ஐடி விஞ்ஞானிகள் கண்டபிடித்துள்ளனர். இந்த புதிய செயற்கை இலை இயற்கையாக உருவாகும் இலையைக்காட்டிலும் 10 மடங்கு திறன் வாய்ந்ததாக உள்ளது.
குறிப்பாக ஒளிச்சேர்க்கை நிகழ்வின்போது இயற்கை இலைகள் செயல்படுவதைக்காட்டிலும் இ;ந்த செயற்கை இலைகள் திறன் வாய்ந்ததாக உள்ளன. இதனை தயாரிப்பதற்கு அதிக செலவு பிடிக்காத கிரியா ஊக்கிகள் பயன்படுத்தப்பட்டன.கோபால்ட், நிக்கல் போன்றவை இந்த செயற்கை இலை தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்த செயற்கை இலை சக்தி சேகரிப்பில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏம்ஐடி எனப்படும் மாசா சூட்ஸ் தொழில்நுட்ப இன்ஸ்டியூட் விஞ்ஞானிகள் இந்த செயற்கை இலை தயாரிப்பை மேற்கொண்டனர்.உலகில் உருவாக்கபட்ட முதல் செயற்கை இலை இதுவாகும். இந்த புதிய இலை சூரிய ஒளிமூலம் தண்ணீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தனி எரிபொருள் செல்லின் மின்சாரத்தை உருவாக்க முடியும். இந்த புதிய செயற்கை இலை அறிவியலுக்கு கிடைத்த புனித பாத்திரம் என ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.செயற்கை இலை தயாரிப்புக்கு காரணமாக அமைந்த ஆய்வுக்குழுவின் தலைவராக டேனியல்நோசெரா இருந்தார். அவர் கூறுகையில் வளரும் நாடுகளில் இந்த செயற்கை இலை ஒரு நாளைக்கு தேவையான அடிப்படையான மின்சாரத்தை அளிக்கக்கூடியதாக இருக்கம் என்றார்.
கடந்த 10 ஆண்டகளுக்கு முனனர் கொலராடோவில் ஒரு செயற்கை இலை தயாரிக்கப்பட்டது. அந்த இலை ஒருநாள் மட்டுமே தாக்குப்பிடித்தது. ஆனால் அந்த இலையை தயாரிப்பதற்கு கூடுதல் செலவினம் பிடித்தது.அந்த இலையை விஞ்ஞானி டர்னர் கண்டுபிடித்து இருந்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF