Tuesday, March 22, 2011

கம்யூடரை கட்டுப்படுத்தும் புதிய கருவி: கண்கள்

Lenovo laptops desktop
கம்யூட்டரை கட்டுப்படுத்தும் புதிய கருவியாக நமது கண்கள் உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பத்தை டோபி டெக்னாலஜி உருவாக்கியுள்ளது.
இந்த டோபி கண் பார்வை தொழில்நுட்பம் மூலம் கம்யூட்டரின் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும்.
கம்யூட்டர் திரையில், நமது கண்கள் பார்க்கும் இடத்தில் உள்ள பணியை கைகளை இயக்காமலேயே தொடர முடியும்.
கம்யூட்டரை பயன் படுத்துபவர், பார்க்கும் போதே, கம்யூட்டர் மங்கலான நிலையில் இருந்து பளிச்சென

லெனாவோ கம்யூட்டர் தயாரிப்பு நிறுவனத்துடன் இந்த புதிய தொழில்நுட்ப கம்யூட்டரை டோபி உருவாக்கியுள்ளது.
இந்த புதிய வகை லேப்டாப்பில் ஒரு சிறிய பார்வை மூலம் பரிவர்த்தனை அளவை அதிகரிக்க முடியும்.

கணனி திரையில் நமது பார்வையை ஒரிடத்தில் வைக்கும் போது சாட்கட் ஐகானை பெரிதுபடுத்தப்பட்ட படங்கள் வரைபடங்கள் இமெயில் பிரவுஸ், ஆவணங்கள் பார்வையிடல் என பல தகவல்களை பெற வழி வகுக்கிறது.
டோபி, லெனவொ நிறுவனங்களின் கூட்டுத்தயாரிப்பில் கண்களால் கட்டுப்படுத்தப்படும் 20 லேப்டாப் கம்யூட்டர்கள் உருவாகியுள்ளன.
கண்களால் இயக்கப்படும் கம்யூட்டர் மக்களுக்கு பெரும் பரவசத்தை ஏற்படுத்தும் என டோபி நிறுவன நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF