இவர் மாதிரி உங்களால் முடியுமா? அப்படி இவர் என்ன சாதித்து விட்டார் என்கிறீர்களா?
லண்டனில் பிறந்த 33 வயதுடைய ஸ்ரிபன் என்ற ஓவியர் பார்ப்பவதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைக்கிறார்.இவர் சிறுவயதில் வாய் பேச முடியாத ஊமையாக இருந்துள்ளார். பின்னர் தனது 5 வயதில் லண்டன் உள்ள பாடசாலையில் சேர்ந்துள்ளார். இவருக்கு கிடைக்கும் நேரமெல்லாம் ஓவியம் மூலமே தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்க்கும் ஒவ்வொரு சின்ன சின்ன பொருட்களையும் வரையும் ஸ்ரிபனின் திறமையை பார்த்த ஆசிரியர் ஒருவர் இவரின் ஆற்றலை ஊடகம் ஒன்றின் மூலம் அவரின் 8வது வயதில் வெளிக்காட்டியுள்ளார்.இன்று அவர் புரியும் சாதனைகளும் விருதுகளும் அதிகம்.
அப்படி இவர் என்ன செய்து சாதித்து விட்டார்?
அதாவது ஹெலிகெப்டர் மூலம் ஒரு நகரை சுற்றி பார்வையிடுகின்றார். அவற்ற அவரின் காந்த கண்ணில் பதிவு செய்கிறார். பின்னர் பார்த்த காட்சிகளை அப்படியே ஓவியமாக தீட்டி அசத்துகிறார்.