
எகிப்தில் உள்ள சகாரா பாலைவனப்பகுதியில் பழங்காலத்தில் பதனிடப்பட்ட (mummified) நாய்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவ் எச்சங்களானது சுரங்கம் ஒன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக சுமார் 80 லட்சம் எச்சங்கங்கள் காணப்படுவதாகவும், இவை கி.மு. 747-730 காலப்பகுதியைச் சேர்ந்தவையாக இருக்கலாமமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சுரங்கமானது 1897 ஆம் ஆண்டளவில் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அக்காலப்பகுதியில் இவை சரியாக பரிசோதனைக்குட்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இவை அக்காலத்தில் எகிப்தியர்களால் வணங்கப்பட்ட நாய் முகக் கடவுளான 'அனுபிஸ்' ஸுக்கு பலியிடப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சகாரா பாலைவனப்பகுதியில் பசுக்கள், காளைகள் மற்றும் பூனைகளின் பதனிடப்பட்ட எச்சங்கள் வெவ்வேறு சுரங்கங்களில் காணப்படுதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.




