இன்று (மார்ச் 26ம் திகதி), இரவு 8.30 க்கு, 2011 இன் Earth Hour எனும் உலகின் மாபெரும் தன்னிச்சையான பொதுமக்கள் நிகழ்வு இடம்பெறுகிறது.சரியாக இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை, உலகின் பல்லாயிரக்கணக்கான வர்த்தக நகரங்கள் அனைத்தும் தமது மின் ஒளிவிளக்குகளை நிறுத்தி பூமியை குளிர்விக்க சம்மதம் தெரிவித்துள்ளன. மில்லியன் கணக்கான மக்கள் கைகளில் மெழுகு வர்த்திகளுடன் சாலைகளின் ஒன்றிணைந்து Earth Hour ஐ கொண்டாட தயாராகிவிட்டனர். நீங்களும் தயாரா? உங்கள் வீடுகளிலும் மின் விளக்குகளை இந்த ஒரு மணி நேரத்திற்கு அனைத்து வைப்பீர்களா?
மின்சக்தியை நிறுத்தி வைக்க மனித சக்தியால் முடியாதா என்ன?
ஆஸ்திரேலியாவில் இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு 2007 ம் ஆண்டு சிட்னி நகரில் ஒரு சிறிய நிகழ்வாக தொடங்கப்பட்ட இந்த Earth Hour , உலகின் மாபெரும் தன்னிச்சையான தொண்டு நிகழ்வாக 2010 இல் சாதனை படைத்து, இன்று 128 நாடுகளில் இந்நிகழ்வை நடத்த சம்மதம் வாங்கப்பட்டுள்ளது.
மாபெரும் கைத்தொழில், வர்த்தக நகரங்கள் தமது உற்பத்திகளுக்காக ஒரு மணி நேரமென்ன, ஒரு 60 செக்கன் மின்சார வசதியில்லையென்றாலும், பல பில்லியன் கோடிக்கணக்கான பண நஷ்ட்டத்தை எதிர்கொள்ளும். ஆனால் ஒரு மணி நேர மின்சார சேமிப்பினால், எதிர்கால சந்ததியினரினதும், எதிர்கால பூமித்தாயின் நல்வாழ்வுக்குமாக இந்த சம்மதத்தை மனமுவந்து அளித்துள்ளன. இன்று யூடியூப் வீடியோ தளமும் தனது லோகோவில் Earth Hour க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
WWF மற்றும் earthhour.org ஆகிய இணைந்து இந்த Earth Hour நிகழ்வை நடத்துகின்றன. நீங்களும் earthhour.org இணைவதன் மூலம் இந்நிகவில் உங்களது நேரடியான பங்களிப்பை வழங்கலாம்! உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்நிகழ்வை பற்றி அறிவித்து, ஒன்றாக கொண்டாடலாம்!
எங்கே நீங்கள் தயாரா? மறந்துவிடாதீர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு! (உலக கோப்பை போட்டி தொலைக்காட்சியில் சென்றாலும் பார்ப்பதை தவிருங்கள்)
இதோ Earth Hour பற்றிய மேலதிக தகவல்களுக்கு: http://www.earthhour.org/Homepage.aspx
சிறுவர்களுக்கு : http://www.earthhour.org/kids/MakeALantern.aspx
இந்த Earth Hour நிகழ்வில் உலக நாடுகள் எவ்வளவு மும்முரமாக, தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளன என்பதற்கு கீழ்வரும் வீடியோக்கள் நல்ல சாட்சி!