டோக்கியோ: ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்தின்படி ஒரு துறைமுக நகரமே அழிந்து காலியாகி விட்டது என்றும் ஏறக்குறையை பத்தாயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் தொடர்ந்து சுனாமி என ஜப்பான் உருக்குலைந்து போனது. இதில் வீடுகள் , சாலைகள், என அனைத்தும் பல்வேறு தீவு பகுதிகிளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரம் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தெரிவித்தது. இந்நிலையில் ஜப்பான் தேசிய என்.எச்., கே செய்தி ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கடற்கரை சாலை மற்றும் பெரும் சுவர்களில் இருந்து பிணங்கள் சேகரித்து அழிக்கப்பட்டு வருகின்றன.
மினாமிசன்ரிக்கு என்ற துறைமுக நகரம் முழுவதும் அடியோடு அழிந்து விட்டது. இங்கு மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் வரை காணவில்லை. இவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை என இங்குள் போலீஸ் தேசிய போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் ஜப்பானில் ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில் சிக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஜப்பானை மையமாக கொண்டுள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Parts of a beer factory's facilities are collapsed as the employees gather on the rooftops.