Wednesday, March 30, 2011

நீங்கள் தேடும் தகவல்களை சேகரிக்கும் கூகுள்: தடுப்பது எப்படி?


கூகுள் இணையதளம் தான் அதிகளவில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் கணணியிலிருந்து கூகுளில் தேடும் போது ஒவ்வொரு தேடலைப் பற்றிய விவரங்களும் கூகுள் நிறுவனத்தால் சேமிக்கப்படுகின்றன.
இந்த விவரங்கள் உங்கள் கணணியில் குக்கிகள்(Cookies) எனப்படும் சிறிய கோப்புகளில் பதிந்து வைக்கப்படுகின்றன. குக்கிகள் வலை உலவியில் ஒவ்வொரு இணையதளத்தில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து சில விவரங்களைச் சேமிப்பதற்காக ஏற்படுத்தப்படும் கோப்புகளாகும்.
எந்தெந்த சொற்கள்(Keywords) அதிக முறை தேடப்பட்டது என்பதை கண்டுபிடிக்கவும், பயனர்களின் தேடும் விருப்பங்கள், நடைமுறைகளை அறியவும் அதை வைத்து அறிக்கைகள் தயாரிக்கவும் கூகுள் பயன்படுத்துகிறது. இதை வைத்துத் தான் நீங்கள் தேடும் தகவலுக்கேற்ப விளம்பரங்களையும் அங்கங்கே வெளியிடும்.
கூகுள் இந்த மாதிரி தேடும் தகவல்களைச் சேமிப்பதனால் ஒன்றும் கெடுதல் இல்லை. இது சிலருக்குப் பிடிக்காமல் நாம் தேடும் தகவல்கள் கூகுள் அறியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்கிறது ஒரு மென்பொருள்.
G-Zapper என்ற மென்பொருள் நாம் கூகுளில் தேடும் போது எந்த விவரங்களையும் சேமிக்க விடுவதில்லை. இந்த மென்பொருள் கூகுள் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள குக்கியைக் கண்டுபிடித்து அது எப்போது முதல் உங்கள் விவரங்களைச் சேகரிக்கிறது எனப் பட்டியலிடும்.
மேலும் இந்த குக்கியில் எத்தனை நாளாய் சேகரிக்கப்படுகிறது என்றும், நீங்கள் தேடிய அத்தனை சொற்களையும் என்று பட்டியலிடும். இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது. ஏற்கனவே கூகுள் சேமித்திருக்கும் தகவல்களை அழிக்க Delete cookies என்பதைக் கொடுக்கவும்.
நீங்கள் கூகிளின் மற்ற சேவைகளான ஜிமெயில், ஆட்சென்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால் Block cookies என்பதைக் கொடுத்து முடக்கிவிட வேண்டாம். இந்த மென்பொருள் Internet Explorer மற்றும் Firefox வலை உலவிகளை மட்டுமே ஆதரிக்கிறது. மேலும் இது விண்டோசின் அனைத்து பதிப்புகளிலும் செயல்படக் கூடியது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF