பூமியில் மிகுந்த உரத்த சத்தம் போடும் மிருகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.மிருகத்தின் உருவத்தை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட சத்த அளவில் வாட்டர் போட்மேன் எனப்படும் தண்ணீர் படகு பூச்சி உரத்த சத்தம் போடுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.இந்த சிறு பூச்சி இனம் 99.2 டெசிபல் அளவில் சத்தம் போடுகிறது. இசைக்குழு பாடும் பாடலை முதல் வரிசையில் அமர்ந்து கேட்கும் போது ஏற்படும் ஒலி அளவு இந்த தண்ணீர் படகு பூச்சியின் சத்தத்தில் உள்ளது.மனிதர்கள் கேட்கும் அளவான 10 கிலோ ஹெர்ட்ஸ் ஒலி அளவில் இந்த சிறு பூச்சியின் சத்தம் உள்ளது என ஸ்டிராத் கிளைடு பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் ஜேம்ஸ் விண்டமில் தெரிவித்தார்.
இந்த தண்ணீரில் பூச்சி எழுப்பும் சத்தத்தில் 99 சதவீதம் தண்ணீரில் இருந்து வெளிக்காற்றுப் பகுதிக்கு வரும் போது மறைந்து விடுகிறது. இதனால் இந்த பூச்சியின் பயங்கர சத்தம் பற்றி யாரும் கவனம் செலுத்துவதில்லை. இந்த பூச்சிகள் ஆற்றின் அடியே எழுப்பும் சத்தத்தை கரை வழியாக நடந்து செல்லும் நபர் தெளிவாக கேட்க முடியும்.இந்த தண்ணீர் பூச்சியின் அளவு 2 மில்லி மீற்றர் தான். ஆனால் இது போடும் சத்தம் ஊரையே கூட்டி விடும் என ஆய்வாளர்கள் உறுதிப்பட தெரிவித்து உள்ளனர்.