விலங்கினங்களை காட்டிலும் மனிதர்கள் வயோதி கால நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.
மனிதர்களின் ஆயுட்காலம் சிம்பன்சிகளை விட கூடுதலாக இருப்பதால் வயோதிக நோய் தாக்கமும் கூடுதலாக உள்ளது. வயோதிக காலத்தில் மூளை எடை குறைந்து விடுகிறது. 80 வயதில் மூளையின் உண்மையான எடை அளவில் 15 சதவீதம் குறைந்து விடுகிறது.
மூளை சுருக்கம் காரணமாக வயோதிக காலத்தில் அல்சீமர் என்ற மறதி நோய்கள் ஏற்படுகின்றன. மூளை சுருங்குவதால் உடலின் இதர உறுப்புகளும் தங்களது திறனை படிப்படியாக இழக்கின்றன.
மூளைச் சுருக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதை வயோதிகம் சார்ந்த பல்கலைகழக ஆய்வாளர்களால் உறுதியான முடிவுக்கு வரமுடியவில்லை.
வயோதிக கால மூளை சுருங்குதல் பற்றி வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழக வயோதிக ஆய்வு துறை தலைவர் செட் ஷெரீவுட் கூறுகையில்,"சிம்பன்சி குரங்கு மூளையைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு பெரிதாக உள்ளது. நியூரான்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதில்லை. எனவே வயோதிக காலத்தில் பிரச்சனை ஏற்படுகிறது" என்றார்.
மூளை சுருங்குதல் பிரச்சனை மனிதர்களுக்கு மட்டுமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது.