Wednesday, July 27, 2011

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்.


தற்போது வெளியாகியுள்ள பயர்பொக்ஸ் 5 பிரவுசர் இணைய உலகில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
பயர்பொக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது.
பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டாவிட்டாலும் மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
மற்ற பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன.
பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால் இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.
ஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்புகளையும் இயக்கிப் பார்த்து அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.
இவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில் எளிதாகக் கணணியிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.
1. கூகுள் ஷார்ட்கட்ஸ்(googleshortcuts): என்ன தான் பயர்பொக்ஸ் பிரவுசரை(குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும் நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.
அந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை பயர்பொக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.
இதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பொக்ஸில் கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி:https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-shortcuts-all-google-se/
2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மொனிட்டரில் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை நிறுவியவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால் சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.
அந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
3. லாஸ்ட் பாஸ்(Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல கடவுச்சொல் மேனேஜராக மட்டுமின்றி பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் கடவுச்சொல்கள் அனைத்தும் ஓன்லைனில் தனி ஒரு வாணலியில் பாதுகாக்கப்படுகிறது. இதனால் அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கணணிகளிலும் பயன்படுத்தப்படலாம்.
இதனால் நாம் ஏதேனும் ஓர் இடத்தில் கடவுச்சொல்லை எழுதி வைத்திட வேண்டியதில்லை அல்லது ஒரே கடவுச்சொல்லை திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை. ஓன்லைனில் பாதுகாக்கப்படும் நம் கடவுச்சொல்லை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.
இதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
4. கூலிரிஸ்(Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும் பொட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரிமாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது.http://www.cooliris.com/desktop/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
இந்த ஆட் ஆன் புரோகிராம் யூடியூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற பொட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால் இது பழைய கணணிகளில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கணணியில் சிறப்பாக இயங்குகிறது.
5. ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட்(Asteroids Bookmarklet):  இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.
ஸ்பேஸ் பாரினைத் தட்டினால் லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கணணியில் நிறுவச் செய்திட வேண்டாம்.
இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://erkie.github.com/
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF