Wednesday, July 27, 2011

தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிப்பு ஏற்படும்: ஆய்வில் தகவல்.


தூக்கத்தில் அடிக்கடி எழுந்தால் நினைவுத் திறன் பாதிக்கும் என ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பகலில் நடந்த நிகழ்வுகளை மதிப்பீடு செய்ய இரவு நேர தூக்கத்தை மூளை பயன்படுத்திக் கொள்கிறது என பிரிட்டன் தூக்க மருத்துவ நிபுணர் நீல் ஸ்டான்லி கூறினார்.
தூக்கத்தில் அடிக்கடி எழுவதால் நினைவு பாதிப்பும் ஏற்படுகிறது என அவர் தெரிவித்தார். பாலூட்டி வகையை சேர்ந்த எலி ஆராய்ச்சி மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குறித்து மருத்துவர் நீல் ஸ்டான்லி மேலும் கூறுகையில்,"அல்சீமர் எனப்படும் நினைவு தடுமாற்ற நோய் உள்ளவர்கள் தூக்கப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். சரியாக தூக்கம் இல்லாத நிலையில் நினைவுத் திறன் பாதிக்கப்படுகிறதா அல்லது மூளை திறன் குறைபாட்டால் தூக்கம் குறைகிறதா என்பது தெரியவில்லை" என்றார்.
தூக்க குறைபாட்டால் நினைவு திறன் குறைவது குறித்து மருத்துவர் லூயிஸ் டே லெசா தலைமையில் ஆய்வு நடந்தது.
லூயிஸ் இந்த ஆய்வு குறித்து கூறியதாவது: தூக்கம் தொடர்ந்து சீராக இல்லாத பட்சத்தில் மறதி உள்பட நோய்கள் ஏற்படுகின்றன. தூக்க பாதிப்பு உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். நினைவுத் திறன் சீராக குறைந்த பட்ச சீரான தூக்கம் தேவை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF