Thursday, July 14, 2011

ஒருமுறை சூரியனை சுற்றிவர 1,165 ஆண்டு எடுத்துக் கொள்ளும் நெப்டியூன்; டிசம்பர் மாதம் முதல் சுற்றை பூர்த்தி செய்கிறது.

சூரியனை சுற்றி வரும் நெப்டியூன் கோள் இந்த ஆண்டு இறுதியில் தனது முதல் சுற்றை நிறைவு செய்கிறது. சூரிய குடும்பத்தின் 8-வது கோளாக நெப்டியூன் உள்ளது. இந்த கோள் 1846-ம் ஆண்டில் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. நீல நிறத்தை கொண்ட இந்த கோள், சூரியனின் நீல் வட்டப்பாதையில் அதிக தொலைவில் அமைந்துள்ளது. பூமி உள்ளிட்ட மாற்ற கோள்களைப் போலவே, நெப்டியூன் கோளும் சூரியனை சுற்றி வருகிறது. இந்த கோள் கண்டு பிடிக்கப்பட்டது முதல் இதன் சுழற்சியை விஞ்ஞானிகள் கண்காணித்து கணக்கிட்டு வருகின்றனர். 

ஒவ்வொரு கோளும், தொடக்க புள்ளியில் இருந்து சூரியனை சுற்றி அதே புள்ளியை வந்தடைய குறிப்பிட்ட காலங்களை எடுத்துக் கொள்ளும். பூமியானது சூரியனை சுற்றிவர 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் நெப்டியூன் கண்டு பிடிக்கப்பட்டதில் இருந்து, இன்னும் முதல் சுற்றையே பூர்த்தி செய்யவில்லை. 

வருகிற டிசம்பருக்குள் தனது முதல் சுற்றை நெப்டியூன் பூர்த்தி செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படி நிறைவு செய்யும் பட்சத்தில் சூரியனை ஒருமுறை சுற்றிவர இந்த கோளுக்கு 1,168 ஆண்டுகள் பிடித்துள்ளது உறுதிப்படுத்தப்படும். இந்த கோள் 1846-ல் ஜூலை 13-ம் தேதி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, இதன் கண்டு பிடிப்பு தினம், உலகம் முழுவதும் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்படது.



பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF