Olivier என்பவர் இந்தோனேசியாவில் உள்ள East Java என்ற பகுதியில் உள்ள சல்பர் சுரங்கத்தை பற்றி நமக்கு கூறும் தகவல்களை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம்.200 மீற்றர் ஆழமான பள்ளத்தில் இருந்து சல்பர் {கந்தகம்}குழம்பானது வெளிவருகிறது. இந்த சல்பர் சுரங்கம் 2600 மீற்றர் உயரமுள்ள எரிமலைக்கு அடுத்து உள்ளது. கற்களாக உள்ள இந்த சல்பரை நிலவு வெளிச்சத்தில் மீண்டும் தொழிற்சாலைக்கு எடுத்து சென்று தூய சல்பராக மாற்றப்படுகிறது. உரம், வெடிமருந்து, தீக்குச்சி, பூச்சிக் கொல்லி போன்றவை தயாரிப்பில் பயன்படுகிறது.