எனவே அவற்றை யாரும் தொடக்கூட முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹெங்கொங்கை தளமாகக்க கொண்ட சங்ரி-லா ஹோட்டல், காலிமுகத்திடலில் அமைக்கப்படவுள்ளது.
இதற்காக 125 மில்லியன் டொலர்கள் வைப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிதியை யாரும் எடுக்க வேண்டுமானால் அமைச்சரவையின் அனுமதியை பெறவேண்டும்.
இந்தநிலையில் குறித்த ஹோட்டலுக்காக முதல்கட்டமாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த கருத்துக்கணிப்பில் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றனர்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை வெளிக்காட்டும் காணொளி அண்மையில் Four cornor தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது.
இதனையடுத்து தெ ஏஜ் நடத்திய கருத்துக்கணிப்பில் 3527 பேர் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.
2856 பேர் அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது இங்கிலாந்தின் கிளொவ்செஸ்டர்செயார் அணிக்காக விளையாடும் முத்தையா முரளிதரன், இந்த விடயத்தில் வீரர்கள் தமது தனிப்பட்ட தீர்மானத்தை எடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு வேறு அரசியல் வேறு. அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கும்; ஸிம்பாவ்வேக்கு செல்லாமல் இருக்கிறது
இந்தநிலையில் அவுஸ்திரேலிய இலங்கைக்கும் செல்லாவிட்டால் உலக கிரிக்கெட் விளையாட்டில் சில அணிகளே எஞ்சியிருக்கும் எனவே கிரிக்கட் விளையாட்டு இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் இலங்கை அணி இங்கிலாந்து சென்றிருந்த போது சிறிய அதுவும் அர்ப்பணிப்புள்ள குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தமது சொந்த நலனுக்காக, அவுஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ புகலிடத்தை பெற்றுக் கொள்வதற்காக செயற்படுகிறார்கள் என்பதே முரளிதரனின் கருத்தாக அமைந்துள்ளதாக தெ ஏஜ் குறிபபிட்டுள்ளது.
இதேவேளை முரளிதரனின் கருத்து தொடர்பில் தமது கருத்தை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய தமிழ் சம்மேளனத்தின் கலாநிதி விக்டா ராஜகுலேந்திரன், முரளிதரனின் நிலைப்பாட்டை தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய நண்பர்களான கிரிக்கட் வீரர்கள் தண்டிக்கப்படுவதை அவர் விரும்பமாட்டார் என்பது இதிலிருந்து புரிகிறது என்று ராஜகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் செனல் 4 காணொளி காட்சிகளை பார்த்திருந்தால் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் தமது தனிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும்.
கிரிக்கெட்டையும் அரசியலையும் கலக்கக்கூடாது என்ற யாரும் சொல்வார்களானால், ஏன்? முன்னர் தென்னாபிரிக்காவுக்கும் ஸிமபாப்வேக்கும் செல்லாமல் இருந்தார்கள் என்று ராஜகுலேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இலங்கைக்கு செல்வதா இல்லையா என்பதை தனிப்பட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் தீhமானிக்க வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.
எனவே அவர் அந்த தீர்ப்பின்படி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதியே விடுவிக்கப்படுவார் என்று சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வுதுறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்புக்கான 25 தரத்துக்குள் இராணுவ சட்டத்தின் கீழ் பொன்சேகா உள்ளடங்கவில்லை.
எனவே அவருக்கு பொதுமன்னிப்பை வழங்க வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தாயாரான மேற்படி மூதாட்டி குறித்த நாய்க் கூட்டினுள்ளேயே காலத்தைக் கழித்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே மாத்தறை பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு அவரை மீட்டுள்ளது.
குறித்த கூண்டுக்குள்ளிருந்த நாய், மேற்படி மூதாட்டி அங்கிருந்து வெளியே செல்லாது பாதகாத்து வந்ததாகவும் குறித்த நாயை அங்கிருந்து அகற்றிய பின்னரே அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தேயிலை பறிக்கச் சென்ற பெண் ஒருவரே இதில் பலியானவராவார்.
இன்று காலை தொழிலாளர்கள் தமது தேயிலை பறிக்கும் பணிக்காகச் சென்றபோது, அங்கு இருந்த குளவிக் கூடு ஒன்று கலைந்து, அதில் இருந்த குளவிகள் தொழிலாளர்களைத் தாக்கியுள்ளதாகவும், அதனால் அவர்கள் காயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்துள்ளன.
அதனையடுத்து காயமடைந்த 12 பேர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலிய அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பயனளிக்காமல் அவர்களில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் அந்தச் செய்தியாளர் கூறியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை. சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் தொடர்ச்சியாக தொழிற்சங்கப் போரட்டத்தை முன்னெடுப்பது என தீர்ர்மானிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கு மட்டுமே இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வுகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நிர்மால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு தவிர்ந்த ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் இடம்பெற்ற ஊழலே இதற்கான காரணம் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை முன்னாள் கிரிக்கட் சபையின் நிறைவேற்று பணிப்பாளர் ஒருவரின் நிறுவனத்துக்கெ வழங்கப்பட்டதாக ஐக்கிய தேசியக்கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸா டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் இ;ந்த அதிகாரி, அண்மையில் கூடிய அரச நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவான கோப் முன்னிலையில் தமது நிறுவனத்தின் பணிப்பாளர்களை பெயரிட தவறிவிட்டார்.
அதேநேரம் குறித்த சுற்றுப்போட்டியின் உரிமை சமர்செட் என்ற சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது. எனினும் அந்த நிறுவனம் யாருடையது என்றோ அதன் பணிப்பாளர்களே பெயரிடப்படவில்லை.
இந்தநிலையி;ல் குறித்த ஊழல்களை கண்டுபிடிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படவேண்டும் என்று ஹர்ஸா டி சில்வா கோரியுள்ளார்.
2009ம் ஆண்டில் இது 12.1 சதவீத வளர்ச்சியாக இருந்தது. மத்திய வங்கியின் கணிப்பீட்டின்படி இது ஒரு துரித வளர்ச்சியாகும்.
போர் முடிந்த குறுகிய காலகட்டத்தில் இது போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியை வட மாகாணம் பெற்றிருக்கிறது என்று இலங்கையின் மத்திய வங்கி கூறியிருப்பதில் எந்த விதமான ஆச்சரியமும் கிடையாது என்று இலங்கைப் பொருளாதரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா கூறுகிறார்.
ஏனெனில், 2009 ஆம் ஆண்டு என்பது போரின் உச்சக்கட்ட ஆண்டு என்றும் அப்போது வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களும் போரினால் சூழப்பட்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறும் சர்வானந்தா, அதனை அடுத்த ஆண்டுகளின் அப்போது இருந்த நிலையை விட இரு மடங்கு மொத்த உற்பத்தி ஏற்படுவது என்பது வழமையானதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒரு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பார்க்கும்போது, அந்தப் பிராந்தியத்தின் மொத்த உற்பத்தி அதிகரிப்பை வைத்து மாத்திரம் பொருளாதாரம் வளர்ந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனி நபர் வருமான, வேலைவாயப்பு வசதிகளுக்கான சுட்டிகள் ஆகியவற்றையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். ஆனால் இவற்றை அரசாங்கம் தெரிந்தோ, தெரியாமலோ மறைத்து வருகின்றது'' என்றும் சர்வானந்தா கூறினார்.
பிரிட்டனைச் சேர்ந்த நபரொருவர் 'யூரோ மில்லியன் லொத்தர்' சீட்டிழுப்பில் 185 மில்லியன் யூரோக்களை (சுமார் 2829 கோடி இலங்கை ரூபா) வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரிட்டனைச் சேர்ந்த மற்றொரு நபர், 129 மில்லியன் யூரோக்களை வென்றமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.யூரோ மில்லியன் லொத்தர் கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லொத்தர் விளையாட்டானது மேற்கு ஐரோப்பியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து, லக்ஸம்பேர்க், போர்த்துகல், ஸ்பெய்ன் மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய 9 நாடுகளில் விளையாடப்பட்டு வருகின்றது.
பிரிட்டனின் லொத்தர் சபை பேச்சாளர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், இது உண்மையில் ஆச்சரியமளிக்கும் செய்தியாகும். பிரிட்டனைச் சேர்ந்தவர் அந்த லொத்தர் பரிசு முழுவதையும் வென்றமை குறித்து நாங்கள் முழு மகிழ்ச்சியடைந்துள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி: பசி, பட்டினியால் பலியாகும் அவலம்.
உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர் என ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் கொமிஷன் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கென்யாவில் தடாப் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில், இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகின்றனர்.
இந்த முகாமை பார்வையிட்ட ஐ.நா. விற்கான அகதிகள் உயர் கொமிஷன் தலைவர் அன்டோனியோ கட்டர்ரஸ் கூறியதாவது, கென்யாவில் தடாப்பில் உள்ள அகதிகள் முகாமில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர். முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந்தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்துவிட்டார்.
முகாமில் இருப்பவர்கள் பரம ஏழைகள். 50 சதவீத குழந்தைகள் சத்து குறைபாட்டால் உயிருடன் போராடி, பல குழந்தைகள் இறக்கின்றன. சத்து குறைபாட்டால், பல குழந்தைகள் தோலுரிந்து காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளியேறி வருகின்றனர்.
இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவதற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்திருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா எல்லைகளில் உள்ள இடங்கள் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்களும் நிறைந்துவிட்டதால், முகாம்களுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது என்று கட்டர்ரஸ் தெரிவித்தார்.
ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. விற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு உதவி: ஹிலாரி கிளிண்டன்.தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அந்நாட்டிற்கு ராணுவ உதவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்குமிடையே நல்லுறவு இருந்து வருகிறது. அது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே இரு நாடுகளும் விரும்புகின்றன. ஆனால் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.
இதனால் தான் பாகிஸ்தானுக்கு அளிப்பதாக உறுதி அளித்த ராணுவ ரீதியான உதவிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ரூ.3,600 கோடி மதிப்பிலான ராணுவ உதவி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.
விரைவில் பேசும் கார்கள் அறிமுகம்: இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கம்.வாகனங்கள் தகவல்களை பறிமாறிக் கொள்ளும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை இத்தாலி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
எனவே, ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டே சாலைகளில் விரையும் கார்களை விரைவில் நாம் பார்க்க முடியும். போலோனா பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவினர் பேசும் இந்த கார்கள் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் குழுத் தலைவர் பேராசிரியர் மார்கோ ரோசெட்டி இதுபற்றி கூறியது, ஒரு கிலோ மீற்றர் தொலைவுக்கு முன்னால் சாலையில் என்ன நடக்கிறது என்பதை சென்சார் மூலம் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடு இவ்வகைக் கார்களில் அமைக்கப்படும். இதன் மூலம் விபத்தில் சிக்காமல் தப்புவதுடன், வீண் அலைச்சலை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றார்.
நாம் கார்களில் சென்று கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் ஏதாவது விபத்து ஏற்பட்டிருந்தால், விபத்தில் சிக்கிய வாகனத்தை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் சென்சார் பொருத்தப்பட்ட கார்கள், தானாகவே இயங்கி வேகத்தை உடனடியாகக் குறைத்து நின்றுவிடும். இதனால் அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
அதோடு நின்றுவிடாமல், குறிப்பிட்ட காரில் இருந்து வெளியாகும் சென்சார் தகவல், அடுத்தடுத்து வரும் கார்களை சென்றடைந்து எச்சரிக்கும். இதனால் விபத்து குறித்து அறிந்துகொள்வதுடன், மாற்று வழியில் செல்லவும் நமக்கு ஏதுவாகும்.
புதிய சென்சார் அமைப்பை கார்களில் பொருத்திக்கொள்ளலாம் அல்லது அதிநவீன வசதிகள் கொண்ட தொலைபேசி போன்றவற்றை கார்களில் வைத்துக்கொள்வதன் மூலமும் இத்தகைய வசதிகளை பெற முடியும். ஆனால், அனைத்து கார்களிலும் இதற்கான மென்பொருளை பொருத்தினால் மட்டுமே தடையின்றி தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும். இவ்வகை சென்சார் பொருத்தப்பட்ட கார்களை வரும் ஓகஸ்டில் சாலைகளில் சோதித்துப் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் மார்கோ ரோசெட்டி.
ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டுத் தாக்குதல்: பிரான்ஸ் வீரர்கள் 5 பேர் பலி.ஆப்கானிஸ்தானில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பிரான்ஸ் வீரர்கள் பலியாயினர்.
இந்த ஆண்டு இறுதியில் ஆப்கானி்ஸ்தானில் இருந்து 1,000 வீரர்களை விலக்கிக் கொள்ள பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு அதிபர் சர்கோசி சில நாட்களுக்கு முன் வெளியிட்ட நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கபிசா மாகாணத்தில் நேட்டோ படைத்தளத்தில் பிரான்ஸ் படையினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை இந்தத் தளத்துக்குச் சென்று கொண்டிருந்த வாகன அணிவகுப்பின் முன் பாய்ந்த வாலிபர், தனது உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் ஒரு வாகனத்தி்ல் இருந்த பிரான்ஸ் படையினர் 5 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
பிரான்ஸ் அதிபர் சர்கோசி சில நாட்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தான் சென்று திரும்பினார். அங்குள்ள 4000 பிரான்ஸ் படை வீரர்களில் 1000 பேர் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று அங்கு அறிவித்தார்.
இந்நிலையில் பிரான்ஸ் படை வீரர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 306 நேட்டோ வீரர்கள் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 69 பேர் பிரான்ஸ் வீரர்கள் ஆவர்.
ஆப்கானிஸ்தான் படை குறைப்பு: அமெரிக்கா துவக்கியது.ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராடும் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து குறைக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஒபாமா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவின் ஒரு பிரிவு வீரர்கள் நாடு திரும்ப தயாரானார்கள். கடந்த 2010 ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் முகாம்களுக்கு வோபா தேசிய படையின் 650 வீரர்கள் வந்தனர். புதிதாக வந்த வீரர்களுக்கு தங்கும் வசதி போதிய அளவு இல்லை.
33 ஆயிரம் கூடுதல் துருப்புகள் மூலம் ஆப்கானிஸ்தான் தலிபான் வன்முறை ஒடுக்க முடியும் என அமெரிக்க தளபதிகள் நம்பினர். புதிய வீரர்கள் ஆப்கானிஸ்தான் வந்து தங்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த கூடுதல் வீரர்களால் பலன் கிடைத்ததா என தெரியவில்லை. இருப்பினும் அமெரிக்க வீரர்கள் சிலர் நாடு திரும்பும் பணி துவங்கிவிட்டது.
இந்த மாதத்தில் அமெரிக்காவின் தேசியப்படை பிரிவின் 1000 வீரர்கள் நாடு திரும்புகிறார்கள். கிழக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாணத்தில் உள்ள அவர்கள் அமெரிக்கா திரும்புவதற்கு துவங்கி உள்ளனர். அதே போன்று இன்னொரு படைப்பிரிவினர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து புறப்படுகிறார்கள்.
2011 ம் ஆண்டில் 10 ஆயிரம் வீரர்களும் 2012 ம் ஆண்டு கோடைக் காலத்தில் 23 ஆயிரம் வீரர்களும் நாடு திரும்புவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
விக்கி லீக் ஜூலியன் அசாங்கே நாட்டை விட்டு வெளியேற எதிர்ப்பு.ஸ்வீடனுக்கு தம்மை அனுப்பக்கூடாது என விக்கி லீக் இணையத்தள நிறுவனர் ஜூலியன் அசாங்கே போராடி வருகிறார்.
பாலியல் வன்முறை மற்றும் மானபங்கம் தொடர்பான வழக்கில் அசாங்கேவை கொண்டு செல்ல ஸ்வீடன் விரும்புகிறது. அசாங்கேவை லண்டனில் இருந்து வெளியேற்றக் கூடாது என அவரது வழக்கறிஞர்கள் போராடி வருகிறார்கள்.
ஸ்வீடன் நீதிமன்றத்தில் அசாங்கே மீது விசாரணை நடைபெறும் என கருதவில்லை என கடந்த பிப்ரவரி மாதம் 24 ம் திகதி பிரிட்டிஷ் நீதிமன்றம் கூறியது. இதனால் ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவோம் என கருதிய அசாங்கே லண்டன் நீதி மன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
அசாங்கேவிடம் 2 நாள் விசாரணை முடிந்துள்ளது. இந்த விசாரணை தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாங்கே கண்ணாடி அணிந்திருந்தார். தலைமுடியை வெகு நேர்த்தியாக குறைத்திருந்தார். அவர் நீதிமன்றத்தில் 2 வது வரிசை பகுதியில் இருந்து விசாரணையை கவனித்தார்.
தனது அப்பீலுக்கு உரிய தீர்வு வராத நிலையில் யு.கே. உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக கூறியுள்ளார். அசாங்கே ஜாமீன் கைது நடவடிக்கையில் உள்ளார். தமக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகள் மிகக் கடுமையானதாக உள்ளன என்று அவர் புகார் செய்துள்ளார்.
இரவு நேரத்தடை, எலெக்ட்ரானிக் கண்காணிப்பு பட்டை அணிதல், தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜர் ஆவது போன்ற கடுமையான விதிமுறைகள் குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் விமானம் நொறுங்கியது: 16 பேர் மரணம்.பிரேசிலின் வடக்கு நகரத்தில் நோயர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு நொறுங்கி விழுந்தது.
இந்த விபத்தில் 16 பயணிகள் மரணம் அடைந்ததாக தேசிய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரேசில் நேரப்படி நேற்று காலை 7 மணிக்கு ரைசைப்பில் இருந்து நேடல் நகருக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது.
விமானத்தில் தகவல் பதிவு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் விமான விபத்துக்கான காரணம் தெரிய வரும். விமானம் புறப்பட்ட 5 நிமிடத்தில் அதன் விமானி அவசரமாக தரை இறக்க முயன்றுள்ளார். அவர் விமானத்தை ரெனசம் கடற்கரை பகுதிக்கு அருகாமையில் உள்ள காலி நிலத்தில் அவசரமாக தரை இறக்கினார். விமானம் கட்டுப்பாடு இல்லாமல் இருந்ததால் நொறுங்கி தீப்பிடித்துள்ளது.
விபத்துக்கு உள்ளான விமானம் செக் குடியரசின் எல்.இ.டி. ஏர்கிராப்ட் இண்டஸ்ட்ரியில் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த விமானத்தில் 19 பயணிகள் பயணிக்கும் வசதி உள்ளது. அதைத் தவிர 2 ஊழியர்கள் செல்லலாம்.
நோயர் ஏர்லைன்ஸ் நிறுவன இணையத்தள தகவல்படி 2010 ம் ஆண்டு இந்த நிறுவனம் சேவையைத் துவக்கி உள்ளது. வாராந்தம் 278 விமான சேவைகளை இயக்கி வந்துள்ளது. இதற்கு 4 சிறிய விமானங்கள் உள்ளன. விபத்துக்கு உள்ளான விமானம் ஒரு ஆண்டிற்கு முன்னர் வாங்கப்பட்டது ஆகும்.
பருவநிலை மாற்றத்தை தடுக்க கரி, எரிவாயுவில் புதிய மின் நிலையங்கள்: ஜேர்மனி முடிவு.உலக நாடுகளில் தொழில்துறை நடவடிக்கைள் அதிகரித்து உள்ளன. இந்த நடவடிக்கைகள் காரணமாக தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவு கரியமில வாயுக்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் உலக வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழல் காரணமாக பருவ நிலை மாறி மழை பொய்த்து போவதுடன் வேளாண் உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. திடீர் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களும் ஏற்படுகின்றன.
பருவநிலை மாற்ற நடவடிக்கையில் தீவிரம் காட்ட ஜேர்மனி முடிவு செய்து உள்ளது. அதன்படி இயற்கை சார்ந்த நிலக்கரி மற்றும் எரிவாயுக்கள் மூலமாக மின் உற்பத்தி செய்யும் மின் நிலையங்களை அதிக அளவில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பல லட்சம் யுரோக்களையும் முதலீடு செய்கிறது.
கடந்த மார்ச் மாதம் 11 ம் திகதி ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக மனித உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் கதிர்வீச்சும் பரவியது. இந்த நிலையில் ஜேர்மனியில் உள்ள அணுமின் நிலையங்களை 2022 ம் ஆண்டுக்குள் மூட ஏங்கலா மார்கெல் தலைமையிலான ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவும் புதிய நிலக்கரி மின் நிலையங்கள் அமைப்பதில் ஜேர்மனி அரசு ஆர்வம் கொண்டுள்ளது.
ஜேர்மனி அரசின் புதிய திட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது. ஆனால் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறை அதனை வெகுவாக ஆதரிக்கிறது. இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அணுமின் உற்பத்தியில் இருந்து விலகி இதர புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களில் அரசு செயல்படுகிறது கரி மற்றும் எரிவாயு மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக 2013 மற்றும் 2016 ம் ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் ஆண்டு எரிசக்தி மற்றும் பருநிலை மாற்ற செலவினத்தில் 5 சதவீதம் வரை தரப்படுகிறது.
போஸ்டன் தொழில்துறை எஸ்டேட்டில் திடீர் வெடிப்பு: 5 பேர் பரிதாப பலி.போஸ்டன் லின்கோன்ஷயரில் நேற்று இரவு திடீர் வெடிப்பு ஏற்பட்டது. இந்த திடீர் பாதிப்பில் தீ கடுமையாக பரவியது.
வெடிப்புக்கு ஏதேனும் வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது. தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் 5 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லபட்டார்கள்.
இது குறித்து லின்கோன்ஷயர் பொலிஸ் பெண் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், வெடிப்பு ஏற்பட்ட சில நிமிடங்களில் ஆண்கள் உயிரிழந்தனர் என்றார். குறிப்பிட்ட ஆலை பகுதியில் முறைகேடாக ஆல்கஹால் தயாரிக்கும் பணி நடந்தாக பொலிசார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்தும் தகவல் அறிந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெடி விபத்தில் காயம் அடைந்த 6 வது நபர் போஸ்டன் பில்கிறீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் நாட்டிங்காமில் உள்ள குயின் மெடிக்கல் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்த ரஷ்யாவுடன் சுவிஸ் அமைச்சர் ஒப்பந்தம்.ரஷ்யாவின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் சுவிட்சர்லாந்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
சுவிஸ் பொருளாதார அமைச்சர் ஜோகன் ஸ்னைடர் அம்மானும் ரஷ்யா பொருளாதாரத்துறை அமைச்சர் எல்விரா நபிபுலினாவும் ரஷ்யா நவீன மய நடவடிக்கை ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டனர். இதன்படி ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு நடவடிக்கைக்கு சுவிஸ் தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் உதவுவார்கள்.
சுவிஸ் அமைச்சர் அமமான் தலைமையில் 20 உறுப்பினர் கொண்ட குழு ரஷ்யா சென்று உள்ளது. அந்தக்குழு இந்த மாதம் 10 ம் திகதி முதல் 13 ம் திகதி வரை 4 நாட்கள் தங்கி பல்வேறு திட்டப்பணிகளில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சுவிஸ் அமைச்சர் தலைமையிலான குழு பயணத்தில் தாராள வர்த்தகம் குறித்து முக்கிய ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது.
வருகிற 2014 ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியையும் 2018 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியையம் ரஷ்யா நடத்துகிறது. இந்த போட்டிகளின் போது சுவிட்சர்லாந்தின் வணிக பங்கேற்பு குறித்து சுவிஸ் அமைச்சர் அம்மான் ரஷ்யா விளையாட்டுத்துறை அமைச்சர் விடாலியுலியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சர்தேச நிதியத்தின் செயல் குழுவில், சுவிட்சர்லாந்தின் தொடர் பிரதிநிதித்துவத்திற்கு ரஷ்யா ஆதரவு அளிக்க வேண்டும் என ரஷ்யா பொருளாதார அமைச்சர் எல்.விராவிடம் அமைச்சர் அம்மான் வேண்டுகோள் விடுத்தார்;. ரஷ்யா பொரளாதார நவீன மயம் ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.
உலக நிதி நெருக்கடிக்கு பின்னர் சுவிஸ் மற்றம் ரஷ்யா இடையே வர்த்தக அளவு உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு சுவிசில் இருந்து ரஷ்யாவுக்கான ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்து உள்ளது. 260 கோடி சுவிஸ் பிராங்க் மதிப்புக்கு வர்த்தகம் உயர்ந்துள்ளது. டொலர் மதிப்பில் 310 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.
2009 ம் ஆண்டு கால கட்டத்தில் ரஷ்யாவில் சுவிட்சர்லாந்தின் நேரடி முதலீடு 620 கோடி சுவிஸ் பிராங்க் ஆகி உள்ளது. ரஷ்யாவில் சுவிஸ் நிறுவனங்கள் 75 ஆயிரம் ஊழியர்களை அங்கு பணியில் அமர்த்தி உள்ளன.
லிபியாவில் ராணுவ நடவடிக்கை தொடர பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்.லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ராணுவத்திற்கு எதிராக நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
இந்த கூட்டுப்படையில் பிரான்ஸ் துருப்புகளும் இடம் பெற்று உள்ளன. நேட்டோ படைகள் கடந்த 4 மாதங்களாக லிபியாவில் உள்ளன. அங்கு தொடர்ந்து பிரான்ஸ் படைகள் இருப்பது குறித்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரான்சில் 2008 ம் ஆண்டு சீரமைப்பு நடவடிக்கை படி பிரான்ஸ் ஜனாதிபதி பிறப்பிக்கும் உத்தரவில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கை பற்றி 4 மாதத்திற்கு பின்னர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். அது குறித்து ஆய்வு செய்யப்பட்டு நாடாளுமன்ற ஒப்புதல் வாக்கம் பெற வேண்டும். அதன்படி லிபியாவில் உள்ள பிரான்ஸ் ராணுவம் தொடருவதற்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் லிபியா ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக 482 வாக்குகள் அளிக்கப்பட்டன. 27 வாக்குகள் எதிர்த்து போடப்பட்டன. லிபியாவில் பிரான்ஸ் ராணுவம் இருக்கக்கூடாது என பல கொம்யுனிஸ்ட் மற்றும் கிறின் கட்சியினர் வாக்களித்தனர்.
செனட்டில் ஆதரவாக 311 வாக்குகளும் எதிர்த்து 24 வாக்குகளும் விழுந்தன. இரு அவைகளிலும் லிபியாவில் முகாமிட்டுள்ள பிரான்ஸ் ராணுவ செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக கடந்த மே மாதம் போர் ஹெலிகொப்டர்களை லிபியாவுக்கு அனுப்பியது பற்றி அவைகளில் விவாதிக்கப்பட்டது. ஜூன் மாதம் இறுதியில் லிபியா போராட்டக்காரர்கள் பகுதிக்கு ஆயுதங்கள் அனுப்பப்பட்டன. அது குறித்தும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
கனடாவில் வீடுகள் விற்பனை கடுமையாக சரிகிறது: புதிய ஆய்வில் தகவல்.கனடாவில் இன்னும் 2 ஆண்டுகளில் வீடுகள் விற்பனை 15 சதவீதம் சரியும் என்றும் வீடுகள் மறு விற்பனை விலை 10 சதவீதம் குறையும் என்றும் டிடி பொருளாதார ஆய்வு எச்சரித்து உள்ளது.
உலக நாடுகளில் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள் பட்டியலில் றோறண்டோவும் வான் கூவரும் இடம் பெற்று உள்ளன. இந்த இரு முக்கிய நகரங்களிலும் வீடுகள் விற்பனையில் பெரும் தேக்கம் காணப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
வீட்டு வருவாய் வளர்ச்சியில் கட்டுப்பாடு, வேலை வாய்ப்பில் மோசமான நிலை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் கூட்டு நிகழ்வாக வீடுகள் விற்பனையில் தேக்க நிலை எற்படுகிறது. கனடாவின் 12 முக்கிய நகரங்களில் டிடி பொருளாதார நிபுணர்கள் ஆய்வினை மேற்கொண்டார்கள். அவர்கள் வான் கூவர் மற்றும் றொறண்டோவை குறிப்பிடத்தக்க வகையில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கனடாவில் மிக அதிக செலவின மார்க்கெட் சந்தையாக அவை உள்ளன என்று தற்போதைய ஆய்வில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நகரங்களில் சராசரி வீழ்ச்சியை விட மிக அதிக அளவில் வீடுகள் விற்பனை வீழ்ச்சி இருக்கும் என தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் எந்த நகரமும் வீடு விற்பனையில் பெரும் முன்னேற்றத்தை சமீப நாட்களில் காண முடியாது என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக கூறுகிறார்கள். இருப்பினும் ரெஜினா, செயின்ட் ஜான், என்.பி, ஹாலிபாக்ஸ், கால்காரி மற்றம் எட்மாண்டன் ஆகியவற்றில் விலை வீழச்சி அடையும் என கூறுகிறார்கள். சராசரி அளவை காட்டிலும் அங்கு வீடு விலை வீழ்ச்சி அடையலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அல்பைன் பனிமலைகள் சுருங்கி வருகின்றன: சுவிஸ் விஞ்ஞானிகள் கவலை.அல்பைன் பனிமலை சுருங்கி வருகிறது என்று சுவிஸ் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
இந்த பனிமலை சுருங்கி வருவதால் ஐரோப்பாவின் பெரும் நதிகளுக்கு தண்ணீர் வருவதில் தட்டுப்பபாடு ஏற்படும். இந்த தண்ணீர் குறைவு காரணமாக நீர் வழி போக்குவரத்து முதல் மின் உற்பத்தி வரையிலான பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
டான்பே, ரைனே, ரோனே மற்றும் போ ஆகியவை பெருமளவு தண்ணீரை பனிமலை பகுதிகளில் இருந்து பெற்றுள்ளன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் பனிமலை வெகுவாக சுரங்கி ஐரோப்பிய நீர் ஆதாரத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் என்று பிரைபோர்க் பல்கலைக்கழக மண் இயல் நிபுணர் மத்தயாஸ் ஹஸ் எச்சரித்து உள்ளார்.
அல்பைன் பனிமலையில் இருந்து உருகி ஓடிய தண்ணீரில் 25 சதவீதம் ரோனேவில் இருந்து மத்திய தரைக்கடல் பதிக்க சென்று வீணாகி உள்ளது. பனிமலைகள் உருகுவது குறித்து சுவிஸ் அறிவியல் அகாடமி புதிய அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளது. அந்த ஆய்வில் 2010 ம் ஆண்டு ஆய்வு செய்ததில் 86 பனிமலைகள் மோசமான நிலையில் இருந்து மீண்டு உள்ளன.
6 பனிமலை சிறிய மாற்றத்தை சந்தித்து உள்ளன. 3 பனிமலைகள் சிறிய அபாய நிலையை எட்டிப்பார்த்து உள்ளன. பெர்ன் கான்டோன் நிர்வாகத்தில் உள்ள காவ்லி பனிமலைப் பகுதி 196 மீற்றர் சுருங்கி இருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். அந்த பனிமலை அபாயத்தில் இருந்து மெல்ல மீண்டு உள்ளன.
பனிமலைகள் பெரும் பனிக்கட்டிகளின் சேர்க்கை ஆகும். சுவிட்சர்லாந்தில் நீர் பிடி அணைகளுக்கு பனிமலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தி நீர் மின்சாரம் மூலமே பெறப்படுகிறது. இதற்கான நீர் தேவைகள் பனிமலையில் இருந்து பெறப்படும் நீரில் இருந்தே கிடைக்கிறது.
எகிப்து கலவரத்தில் அப்பாவி மக்கள் பலர் பலி: 700 பொலிஸ் உயரதிகாரிகள் அதிரடி நீக்கம்.எகிப்து கலவரத்தின் போது அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு காரணமாக இருந்த 700 பொலிஸ் உயரதிகாரிகள் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். எகிப்தில் அதிபர் முபாரக்கின் ஆட்சி அகற்றப்பட்டப் பின்னர் நேற்று, புதிய அரசியலமைப்பு வரையறுக்கப்பட்டது. இதற்கு வழிகாட்டியாக 100 பேர் கொண்ட அரசியல் நிர்ணய சபை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
எகிப்தி்ல் வரும் ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அதிபர் முபாரக்கிற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 800 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தகிரிர் சதுக்கத்தில் நடந்த வன்முறையில் தான் அதிகம் பேர் கொல்லப்பட்டனர். அப்போது பணியாற்றிய உயர் பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் என 700 பேர் நேற்று அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதிய பிரதமர் ஈசாம் ஷெராப் தெரிவித்தார்.
அதன்படி 505 மேஜர் ஜெனரல்கள், உள்துறை அமைச்சகத்தின் 10 பொலிசார்கள், 82 கர்னல்கள் மற்றும் 82 உதவி கர்னல்கள் என ஏறத்தாழ 700 பொலிஸ் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 164 பேர் வரும் ஓகஸ்ட் 1 ம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF