சமூகவலையமைப்பான பேஸ்புக் எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார்.அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது.பேஸ்புக் தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், ஸ்கைப் 170 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.
ஸ்கைப்பை மைக்ரோசொப்ட் நிறுவனம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மே மாதம் கொள்வனவு செய்திருந்தது.இதேவேளை கூகுள் நிறுவனம் அண்மையில் "கூகுள் +" என்ற சமூகவலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்தியது. இதில் வீடியோ செட்டிங் வசதி உள்ளடக்கப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே பேஸ்புக் இவ்வசதியை தனது பாவனையாளர்களுக்கும் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF