பழைய நண்பர்களை யானைகள் மறப்பது இல்லை. குறிப்பாக ஆசிய வகை யானைகள் விஞ்ஞானிகள் எண்ணியதை விட பழைய நண்பர்களை நன்றான நினைவில் வைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
மனிதர்களைப் போலவே யானைகள் நண்பர்களுடன் தேடி விளையாடுகின்றது. முந்தய ஆய்வின் போது பெண் யானை அதன் குட்டி என சிறு குழுவாகவும், ஆண் யானை தனியாக நடமாடிக் கொண்டு இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது.
மனிதர்களிடம் காணப்படும் பழக்கவழங்களைப் போலவே பெண் யானை மற்றும் அதன் குட்டிகள் நண்பர்களை தேடி ஓடுவதாக உள்ளது.
பழைய நண்பர்களிடம் பாசமாக இருக்கும் யானைகள் குறித்த ஆய்வை பென்சில்வேனியா பல்கலைகழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் மேற்கொண்டு இருந்தனர்.
நீண்ட காலம் பார்க்காத போதும் பழைய நண்பர்களை பார்க்கும் போது யானைகள் நன்றாக நினைவு வைத்து மீண்டும் உற்சாகமாக பழகுகின்றன.
சில யானைகள் நண்பர்களுக்காக விசுவாசமாகவும் இருக்கின்றன. ஆப்பிரிக்க யானைகளை காட்டிலும் ஆசிய யானைகள் சிறியதாகவும், காதுகள் சீராகவும் உள்ளன.