Saturday, July 23, 2011

கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளை அழிப்பதற்கு.


பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் கணணியில் பல வெற்று கோப்பறைகள்(Empty Folders) நமக்குத் தெரியாமல் உருவாகி நிறைந்திருக்கும்.
இவை கணணியின் வன்தட்டில் பல இடங்களில் இருக்கலாம். கணணியில் மென்பொருள்களை நிறுவும் போதும் அவற்றை நீக்கும் போதும் சில வெற்று கோப்பறைகள் அழிக்காமலே விடப்படுகின்றன.
சில நேரம் நாமே New Folder உருவாக்கி விட்டு அதனை எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல் விட்டு வைத்திருப்போம். இவைகளைத் தேடிக் கண்டறிந்து அழிப்பது சுலபமான விசயமன்று.
கணணியில் உள்ள வெற்று கோப்பறைகளைத் தேடவும் அதனை உடனடியாக அழிக்கவும் உதவுகின்ற ஒரு மென்பொருள் தான் RED(Remove Empty Directories). இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படக்கூடியது.
இதனை நிறுவிய பின்னர் தேவையான டிரைவைத் தேர்ந்தெடுத்து Scan Drive என்பதைக் கிளிக் செய்யவும். இதன் பின் குறிப்பிட்ட டிரைவில் உள்ள வெற்று கோப்பறைகள் எல்லாமே பட்டியலிடப்படும். Delete பட்டனைக் கொடுத்தால் அனைத்து கோப்பறைகளும் அழிந்துவிடும்.
அழிக்கப்படும் கோப்பறைகள் Recycle binக்கே செல்லும். அடுத்ததாக Empty Recycle bin கொடுத்தால் கணணியிலிருந்தே நீக்கப்படும். இதன் Settings பகுதியில் நேரடியாக நீக்குவது, Hidden Folder களைச் சோதித்தல், எந்த மாதிரி கோப்பறைகளை நீக்கக் கூடாது போன்ற அமைப்புகளைக் கையாள முடியும்.
இம்மென்பொருளின் ஒரே குறை என்னவென்றால் தேவைப்பட்ட கோப்பறைகளைத் தேர்வு செய்து அழிக்க முடியாது. எல்லா வெற்று கோப்பறைகளுமே ஒரே கிளிக்கில் அழிக்கப்படும். அதனால் விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் டிரைவ்/சி டிரைவ் (C Drive) பகுதியைச் சோதிப்பதைத் தவிர்ப்பது நலம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF