Sunday, July 10, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணிந்து விடவில்லை. புலிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொருளாதாரம் மீது தாக்குதல்: பீரிஸ்

நாடு கடந்த தமிழீழம் உலகில் எங்கும் கிடையாது. அதனை எமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.இந்நிலையில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தமக்கேயுரிய பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எமது நாட்டை அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதற்கான நோக்கத்தில் சர்வதேசத்தை தொடர்புபடுத்தி இந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துவருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். 

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்த சந்தர்ப்பத்தில் அது வெற்றி கொள்ளப்படுவதற்காக இந்தியா இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பாரியளவிலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்கியிருந்தது. அது தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு அடிபணிந்து விடவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தின் மீது இந்தியாவின் அழுத்தம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசுகையிலேயே அமைச்சர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

செனல் 4 வீடியோ காட்சிகள் ஜெனீவாவிலும் காட்டப்பட்டன. அங்கு அந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதும் அவர்கள் அதனைப் பார்த்ததும் அவர்களுக்குரிய உரிமையாகும். குறித்த வீடியோவை நானும் பார்த்தேன். குறித்த வீடியோ மற்றும் ஓடியோ தொகுப்புக்களில் சந்தேகங்கள் நிலவுகின்றன. அந்த வீடியோ ஓடியோவில் தமிழ் மொழியில் பேசுவது தெளிவாக இருக்கின்றது. எனவே, இதனை உண்மையென ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இன்றைய காலகட்டத்தில் எமது நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. எனவே, இலங்கைக்கு சொந்தமான நாம் அனைவரும் இணைந்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் செயற்பட வேண்டும்.

புலிகளின் அமைப்பு இராணுவ ரீதியில் தோல்வியடைந்துள்ளது. அவ்வாறு தோல்வியடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தற்போது எமது நாட்டின் மீது பொருளாதார ரீதியில் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பொருளாதர வளத்திலும் நவீன தொழில்நுட்ப ரீதியிலும் பலம் பெற்றுள்ள மேற்படி புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இவ்வாறான வீடியோ காட்சிகளைத் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இதன்மூலம் இலங்கைக்கு கிடைக்கப்பெற்று வருகின்ற சர்வதேச உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் தடுத்துவிடுவதற்கும் எமது நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்துக்கு தள்ளிவிடப்படுவதற்கும் என சூழ்ச்சிகரமான நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றனர். சர்வதேசத்தின் முன்னால் இலங்கையைப் பொருளாதார வீழ்ச்சி கண்ட நாடாக ஆக்கிவிடுவதே இதன் நோக்கமாகும்.

நாடு கடந்த தமிழீழம் குறித்து இங்கு பேசப்படுகின்றது. அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் நாடு கடந்த தமிழீழம் என்ற நிறுவனம் ஒன்று உலகில் எங்கும் கிடையõது. அ“வ்வாறு ஒரு நிறுவனம் செயற்படுவதாக நாம் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. எனவே, இல்லாத ஒரு நிறுவனத்தினால் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாத நிறுவனத்தினால் எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாரில்லை. அவ்வாறு பதிலளிக்கும் தேவையும் கிடையாது. பதிலளித்து அவ்வாறு ஒரு நிறுவனம் இருப்பதாக அங்கீகரிப்பதற்கும் அரசாங்கத்திற்கு அவசியம் இல்லை. எந்தவொரு நாடும் தமது பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமானால் பூகோள ரீதியாக, பிராந்திய ரீதியாகவே செயற்பட வேண்டியிருக்கின்றது. அந்த வகையிலேயே இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது. சில சந்தர்ப்பங்களில் இந்தியா தனது தேவைக்காக செயற்படலாம். இதனை மறுக்க முடியாது. அதேபோல் நாமும் எமது தேவைகளினிமித்தம் செயற்பட்டு எமக்குத் தேவையானவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இலங்கை ஒருபோதும் இந்தியாவுக்கு அடிபணிந்து விடவில்லை. மாறாக இரு நாடுகளும் பூகோள ரீதியில் இணைந்து செயற்பட்டுவருகின்றன. அத்துடன் இலங்கை அதன் தனியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன் காரணத்தாலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அவசியமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே, பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது காலத்தை வீணடிக்கும் செயற்பாடு அல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளமைத்து அதனை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதில் இருந்து அரசாங்கம் விலகிச்சென்று விடமுடியாது.

அந்த வகையில் தெரிவுக்குழுவின் தீர்மானங்கள் அரசியல் யாப்பு ரீதியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது அனைத்து சமூகமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் அமையப்பெற வேண்டும். 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தற்போது தமது பொருளாதார வளத்தை மேம்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அ“த்துமீறி நுழைந்து மீன்களை அள்ளிச்செல்வது நியாயமாகாது. இவ்வாறான நிலையில்தான் நாம் தலையிட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதற்காக நாம் யாருக்கும் எதிரிகள் எ“ன்ற கருத்தினைக் கொள்ள முடியாது.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை பாரியதாகும். இவர்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுக்களின் மூலமே தீர்வுகாண வேண்டும். இது தொடர்பில் பேசுவதற்கென இலங்கை இந்திய கூட்டுக்குழுவின் கலந்துரையாடல் ஒன்று ஆகஸ்ட் மாதத்தில் கொழும்பில் இடம்பெறுகின்றது.எந்த சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது. இதுவே எமது நிலைப்பாடு. இந்தியாவுடனான எமது உறவினை தவறான கோணத்தில் பார்க்கக்கூடாது. இராணுவ ரீதியில் எமக்கு உதவிகளை வழங்கிய இந்தியா பொருளாதார ரீதியிலும் உதவி வருகின்றது. அதுமட்டுமல்லாது தற்போதும் இந்தியா இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்கி வருகின்றது, இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பெரிய அண்ணாவைப்போல் செயற்பட்டு வருவதாகக் கூறுவது தவறாகும்.

இந்திய தலைவர்கள் இலங்கை தொடர்பில் சிறந்த கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு தலைவரும் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வில்லை. இந்நிலையில் இந்தியாவைப் பற்றி சந்தேகிப்பதோ தவறாகப் பேசுவதோ அரசியல் தந்திரமாகாது. இன்று இந்தியாவானது எமது நாட்டின் பாரிய பொருளாதார நண்பனாக இருந்து வருகின்றது. இந்தியாவை பகைத்துக் கொண்டு எம்மால் எந்தத் துறையிலும் முன்னேற்றத்தைக்காண முடியாது என்றார்.
லியாம் பொக்ஸ் - மஹிந்த ராஜபக்ச சந்திப்பு.

பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இன்று காலை இலங்கை ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்சவை சந்தித்தார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது.கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் சொற்பொழிவு ஒன்றுக்காக லியாம் பொக்ஸ் இலங்கை வந்துள்ளார்.இந்தநிலையிலே அவர் ஜனாதிபதியை சந்தி;த்துள்ளார்இதன் போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.எனினும் இலங்கையின் தற்போது அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்பட்டதாக அலரி மாளிகை தரப்புக்கள் தெரிவித்தன.
இதில் போர்க்குற்ற விடயங்கள் மற்றும் செனல் 4 காணொளி விடயங்களும் அடங்கியிருந்தன.ஏற்கனவே கடந்த பல மாதங்களுக்கு முன்னர் லியாம் பொக்ஸ இலங்கை வரவிருந்த போதும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரின் ஆலோசனைப்படி அந்த பயணம் இடைநிறுத்தப்பட்டது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரித்தானியாவுக்கு சென்று அங்கு பாரிய எதிர்ப்பார்ப்பாட்டத்துக்கு முகங்கொடுத்த நிலையிலேயே லியாம் பொக்ஸின் பயணம் அப்போது ஏற்பாடாகியிருந்தது.
லியாம் பொக்ஸ் இலங்கை உயர் மட்ட பிரமுகர்களை சந்தித்துள்ளார்.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ்; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.அலரி மாளிகையில் இந்த இன்று (09) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது..லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த கருத்தரங்கில் தமது உரையை நிகழ்த்துவதற்காக நேற்றிரவு பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை வந்தார்.இதனிடையே அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இதுதவிர,, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உடனான சந்திப்பின் போது இரு தரப்பு விடயங்கள் பல ஆராயப்பட்டுள்ளன.லக்ஷ்மன் கதிர்காமர் நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த கருத்தரங்கு இன்று இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.இதன்போது கருத்துரைத்த லியாம் பொக்ஸ் உலக பொருளாதார மேம்பாட்டில் இலங்கை பெரும் பங்காற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.உலகின் பொருளாதார ஸ்திரம் மிக்க நகரங்களில் இலங்கையின் சில நகரங்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவை கொழும்பு வருமாறு மஹிந்த அழைப்பு விடுக்கவுள்ளார்?
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமை தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுக்கவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் மூலமே இந்த அழைப்பை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அழைப்பானது மிகவும் இரகசியமான முறையிலேயே விடுக்கப்படவுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிலிருந்து கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுடன் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் பிரசாத் காரியவசத்தின் சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்படவுள்ளது.இது இவ்வாறிருக்க இவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்பட்டாலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பணிப்பெண்களுக்கு நேர்முகப்பரீட்சை நடத்த, சவுதி அரேபிய தொழில் கொள்வோர் விருப்பம் தெரிவிப்பு.
பணிப்பெண்ணாக சேவைக்கு  அமர்த்த விரும்பும் பெண்களை தனிப்பட்ட முறையில் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்துவதற்கு சவுதி அரேபிய தொழில்கொள்வோர் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் கெசட் செய்தி நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பயிற்சி பெற்ற வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் சட்டவிரோதமாக சவுதி அரேபியாவிற்குள் வரும் பெண்கள் ஆகியோரை இனங்கண்டு கொள்வதற்;கு இந்;த நடைமுறை துணைபுரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டுப்பெண்கள் சில குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்களை பணிக்கு அமர்த்தும் தொழில் தருனருக்கும் நெருக்கடிகள் ஏற்படுவதாக முகவர் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.சவுதி அரேபியாவில் இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கைப் பணிப்பெண்கள் உட்பட 44 ஆயிரத்து 124 பேர் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கெசட் நாளிதழ் மேலும் குறிப்பிட்டுள்ளது. 
சிலி எரிமலை வெடிப்பு: விமானங்கள் அவசரமாக தரையிறக்கம்.
சிலியின் புயயே எரிமலை வெடிப்பால் சாம்பல் பரவி வருகிறது. வான்பகுதியில் பரவும் இந்த சாம்பல் காரணமாக அர்ஜென்டினா, உருகுவே விமானங்கள் அவசரமாக தரை இறங்கின.எரிமலைச் சாம்பல் விமான என்ஜினில் படிந்ததால் பாதிப்பு ஏற்படும் என்பதால் விமானங்கள் அவசரமாக தரை இறங்கின. அர்ஜென்டினாவில் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.கடந்த ஜுன் மாதம் 4ம் திகதி முதல் சிலி புயயே எரிமலை சீறி சாம்பல் வெளி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் முதன் முறையாக இந்த மலை பெருமளவு சாம்பலை வெளிப்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்காவில் இந்த எரிமலைச் சாம்பலால் விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சிலி மற்றும் தெற்கு பிரேசிலில் பாதிப்பு அதிகம் இருந்தது.அவுஸ்திரேலியா, நியூசிலாந்து செல்லும் விமான சேவையும் தாமதம் அடைந்தது. இந்த ஜுலை மாதம் 1ம் திகதி முதல் 24ம் திகதி வரை மிகப்பெரும் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண தாமதம் ஏற்பட்டதால் விமானத்தில் வரும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எரிமலை சாம்பல் இரண்டு கிலோ மீற்றர் உயரத்திற்கு பரவி உள்ளது.சிலி ஆண்டஸ் மலை பகுதியில் மிக உயரமான எரிமலையாக புயயே எரிமலை உள்ளது. இது சிலி தலைநகருக்கு 870 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்து உள்ளது. இந்த எரிமலைக்கு அருகே அர்ஜென்டினா எல்லை உள்ளது.
ஒபாமாவை தத்துக் கொடுக்க முடிவெடுத்த தந்தை.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தந்தை அவரை தத்துக் கொடுக்க இருந்தமை புதிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.தனது மனைவியான ஆன் இன்ஹாம் 5 மாத கர்ப்பமாக இருந்த போது ஒபாமாவின் தந்தை பிறக்கப் போகும் குழந்தையை தத்துக் கொடுக்கப் போவதாக குடிவரவு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பல பெண்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பராக் ஒபாமாவின் தந்தைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட குடிவரவு அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.1960 களில் கறுப்பினத்தவரான ஒபாமாவின் தந்தையை மணந்த 18 வயது யுவதியான ஆன் கூன்ஹாம் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையை கைவிட வேண்டும் என கடும் நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.
அச்சமயம் அவர்கள் வாழ்ந்த ஹவாயில் கலப்பின திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் அமெரிக்காவின் ஏனைய 22 மாநிலங்களில் அத்தகைய திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டமை காரணமாக கலப்பின திருமணம் மூலம் பிறக்கும் குழந்தை ஒபாமாவை கைவிட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பியூஜி க்யூ மன மகிழ் பூங்காவில் உலகின் உயரமான ரோலர் கோஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.141 அடி உயரம், 2 மைல் தூரம், வயிறு பிசைய வைக்கும் 7 வளைவுகள், மணிக்கு 100 கிலோமீற்றர் வேகம். இதில் ஏறவே தனி தைரியம் வேண்டும்.
2 நிமிட நேர பயணம் என்றாலும் சப்த நாடிகளையும் ஒடுங்க வைக்கும் இந்த ரோலர் கோஸ்டர் கின்னஸில் இடம் பிடித்து விட்டது.வரும் 16ம் திகதி முதல் சுற்றுலா பயணிகளை பயங்காட்ட தயாராகி விட்டது இந்த ராட்சத ரோலர் கோஸ்டர்.
பாகிஸ்தானில் வன்முறை தீவிரம்: வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு.
அல்கொய்தா தலைவர் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் பாகிஸ்தானில் தீவிரவாத தொடர் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுகிறது.முக்கிய நகரான கராச்சியில் கடந்த 4 நாட்களாக துப்பாக்கி சூடு சம்பவம், ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் அடிக்கடி நடக்கிறது.இதில் மொத்தம் 88 பேர் பலியாயினர். கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிபர் சர்தாரி, உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் ஆகியோர் கராச்சியில் முகாமிட்டு தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இருந்தும் வன்முறை குறையவில்லை.
இதுகுறித்து கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதர் கேமரூன் முன்டர் கவலை தெரிவித்தார். கராச்சியில் அமைதியை ஏற்படுத்த அனைத்து கட்சியினரும் ஒன்றாக இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசை கேமரூன் முன்டர் கேட்டுக் கொண்டார்.கராச்சியில் வன்முறையை குறைக்க ராணுவத்தினர் ஆயிரம் பேர் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் பகுதிக்கு அமெரிக்க தூதர் வருகை: சிரியா ஆவேசம்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.போராட்டக்காரர்களின் மையப்பகுதியாக ஹமா நகரம் உள்ளது. இந்த பகுதிக்கு அமெரிக்கத் தூதர் ரொபர்ட் போர்ட் சென்று உள்ளார்.அவருடன் பிரான்ஸ் தூதர் எரிக்செவாலியரும் சென்று உள்ளார். இரு தூதர்கள் வருகையால் உற்சாகம் அடைந்த போராட்டக்காரர்கள் நேற்று ஜனாதிபதி அசாத்துக்கு எதிராக அதிக அளவு குவிந்தனர்.
ஹமா நகருக்கு அமெரிக்க தூதர் வருகை சிரியா அரசை எரிச்சலடைய வைத்துள்ளது. ஹமா நகரில் போக்குவரத்து நிறுத்தத்தால் மக்கள் பணிக்கு செல்ல முடியாமல் தடைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.இந்த தடைகளை ஏற்படுத்திய நபர்களை அமெரிக்க தூதர் சந்தித்து உள்ளார். இதன் மூலம் சிரியா போராட்டத்தை அமெரிக்க தூண்டுவதை காண முடிகிறது.பேச்சுவார்த்தைக்கு உடன்படக் கூடாது என்றும் அமெரிக்க தூதர் அறிவுறுத்தி உள்ளார் என்றும் உள்துறை அமைச்சகம் கூறி உள்ளது. சிரியா வெளியுறவுத்துறை அமைச்சகமும் இதே கருத்தை பிரதிபலித்து உள்ளது.
சிரியாவில் மேற்கத்திய நாடுகள் இதுவரை தலையிட வில்லை. எகிப்திலும், லிபியாவிலும் மேற்கத்திய படைகள் தலையிட்டு உள்ளன. லிபியாவில் கர்னல் கடாபி விலக வேண்டும் என அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்து உள்ளது.சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடவில்லை எனக்கூறிய போதும் அதன் தூதர் போராட்டக்காரர்களை சந்தித்து உள்ளார். சிரியாவுக்கு இது எரிச்சலைத் தந்து உள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவியில் நீடிக்க உரிமை இல்லை என பிரான்ஸ் பகிரங்கமாக அறிவித்து உள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி: 1 கோடி மக்கள் உயிருக்கு போராட்டம்.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் கடுமையான வறட்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் 1 கோடி மக்கள் போதிய உணவு  கிடைக்காமல் உயிருக்கு போராடி வருகிறார்கள்.வறட்சியின் காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு எத்தியோப்பியா, கென்யா, திபோதி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் மக்கள் கண்ணீர் விடுகின்றனர். அவர்கள் உயிர் பிழைக்க அருகாமை நாடுகளுக்கு தப்பி வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை,"ஆயிரக்கணக்கான சோமாலியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக தெரிவித்தது".கென்யாவில் உள்ள தாதப் பகுதியல் உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாம் உள்ளது. அங்கு 90 ஆயிரம் பேர் தங்க வசதி உள்ளது. ஆனால் 3 லட்சத்து 80 ஆயிரம் பேர் அந்த இடத்தில் குவிந்து இருப்பதாகவும் ஐ.நா குறிப்பிட்டு உள்ளது.
மழை உரிய நேரத்தில் பெய்யாததால் உணவுப்பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்து உள்ளது. இதனால் பிராந்திய மோதல்களும் ஏற்பட்டு உள்ளன என்று குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் உன்னி கிருஷ்ணன் கூறுகிறார்.கடந்த 10  ஆண்டுகளாக ஹார்ன் ஆப்பரிக்கா பகுதியில் தொடர்ச்சியாக மழை அளவு குறைந்து உள்ளது என ஐ.நா உலக உணவு திட்டம் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதும் வறட்சி தாண்டவம் நீடிப்பதால் வருகிற அக்டோபர் மாதமும் அறுவடை இருக்காது. எனவே உணவு பற்றாக்குறை மேலும் அதிகமாகும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
தொலைபேசி தகவல் திருட்டு: நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை முன்னாள் ஆசிரியருக்கு ஜாமீன்.
பிரிட்டனை சேர்ந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல பிரபலங்களின் தொலைபேசி தகவல்களை எடுத்து பரபரப்பு செய்தி வெளியிட்டு வந்தது.அந்த பத்திரிகையின் நடவடிக்கையை கண்டித்த அரசியல் தலைவர்களால் நியூஸ் ஆப் தி வேர்ல்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டது.
தற்போது இந்த பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கோல்சன் பொலிஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்ததாக சந்தேகம் எழுந்து கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் போது தொலைபேசி தகவல் திருட்டு குறித்து தமது பதவி காலத்தில் தெரியாது என அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
தொலைபேசி தகவல் திருட்டு தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பெயர் குறிப்பிடப்படாத 63 நபர் கைது செய்யப்பட்டார். ஊழல் சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சர்ரே பகுதியில் கைது செய்யப்பட்டார்.தொலைபேசி தகவல் திருட்டு தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டு நியூஸ் ஆப் தி வேர்ல்டின் ஆசிரியர் கிளைவ் குட் கூட்மன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.43 வயது முன்னாள் ஆசிரியர் கோல்சன் வெள்ளிக்கிழமை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். அவர் தெற்கு லண்டனில் உள்ள லெவிஷம் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.
நாஜி படைத்தலைவர் ஹிட்லரின் குடியுரிமை ஆஸ்திரியாவில் பறிப்பு.
இரண்டாம் உலகப்போர் முடிந்து 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த போருக்கு காரணமான நாஜி படைத்தலைவர் அடால்ப் ஹிட்லர் ஆஸ்திரியா நகரில் பிறந்தார்.இந்த நகரில் இருந்து அவரது கவுரவ குடியுரிமை தற்போது பறிக்கப்பட்டு உள்ளது. அடால்ப் ஹிட்லர் ஆஸ்திரியாவின் பிரானு அம் இன் நகரில் 1889ஆம் ஆண்டு பிறந்தார்.
அவரது கவுர குடியுரிமை நீக்கம் குறித்து வியாழக்கிழமை இரவு முடிவு அறிவிக்கப்பட்டது. ஹிட்லரின் குடியுரிமை நீக்குவது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே அவரது பெயர் குடியுரிமை பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என மேயர் ஜோகன்னஸ் வெய்ட் பாச்சர் தெரிவித்தார்.
கடந்த 1938ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரையில் ஹிட்லர் பற்றிய ஆவணங்கள் நகர குறிப்புகளில காணப்படவில்லை. ஆஸ்திரியாவை சேர்ந்த ஹிட்லர் 7ஆண்டுகள் எந்த நாட்டு குடியுரிமை பெறாதவராக இருந்தார்.ஆனால் 1932ஆம் ஆண்டு ஜேர்மனி குடியுரிமை பெற்றார். கடந்த 1938ஆம் ஆண்டு ஆஸ்திரியாவை ஜேர்மனி சேர்த்துக் கொண்டது.
கூகுளில் சர்ச்சைக்குரிய விடயங்களை நீக்க கனடா வலியுறுத்தல்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 7 சர்ச்சைக்குரிய விடயங்ளை கூகுள் நீக்க வேண்டும் என கனடா கூறி உள்ளது.இது போன்ற கோரிக்கையை கூகுளிடம் விடுத்த 13வது நாடு கனடா ஆகும். இந்த விவரங்கள் கூகுளின் வெளிப்படையான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனடா நாட்டின் மீதான அவதூறு விடயங்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. பொதுவாக கிரிமினல் மற்றும் அவதூறு விடயங்களை நீக்குமாறு எங்களுக்கு வேண்டுகோள் வருகிறது என கூகுள் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.குறிப்பிட்ட பயன்பாட்டாளர்களின் விவரங்களை இதே கால கட்டத்தில் கனடா 38 முறை கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் 10 பயன்பாட்டாளர் முகவரி விவரங்களை கூகுளிடம் கனடா அரசு கேட்டு இருந்தது.கடந்த 2009ஆம் ஆண்டு கனடா கொள்கைகளை விமர்சித்து வெளியாகி இருந்த விடயங்களை நீக்க கோரி கனடா அரசியல் தலைவர்களிடம் இருந்து கூகுளுக்கு வேண்டுகோள் வந்தது.
அரசுகள் விடுக்கும் வேண்டுகோள்களை கூகுள் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கி உள்ளது. கூகுளின் அதிக விடயங்களை நீக்க கோரி பிரேசில் வேண்டுகோள் விடுத்து இருந்தது. 12 ஆயிரம் விடயங்களை நீக்கவேண்டும் என பிரேசில் அரசு கோரி இருந்தது.இதனையடுத்து தென் கொரியா, லிபியா, ஜேர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிக அளவில் சர்ச்சைக்குரிய விடயங்களை கூகுள் நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தன.
இந்தியாவில் வறுமை குறைந்து வருகிறது: ஐ.நா சபை.
இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: மேற்கு ஆசிய நாடுகளில் முக்கியமாக சீனாவிலும், இந்தியாவிலும் வறுமை வேகமாக குறைந்து வருகிறது. 2015ஆம் ஆண்டுக்குள் சீனாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 5 சதவீதமாகக் குறைந்து விடும்.
சர்வதேச அளவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இந்தியாவும், சீனாவும் முக்கியக் காரணம். ஏனெனில் மக்கள்தொகை அதிகமுள்ள இந்த இருநாடுகளிலும் வறுமையில் இருப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.இங்கு வறுமை குறைவதன் மூலம் சர்வதேச அளவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.1990ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி இந்தியாவிலும், சீனாவிலும் 51 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனர். 2015ல் இந்த எண்ணிக்கை 22 சதவீதமாகக் குறையும்.
1990க்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடையே இந்தியா, சீனாவில் இருந்து 45.5 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 2015ல் மேலும் 32 கோடி பேர் வறுமை நிலையில் இருந்து முன்னேறுவார்கள்.பசி, பட்டினி, குழந்தைகள் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியவை இந்தியாவில் குறைந்து வருகிறது. 2008-09ல் சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது வறுமை ஒழிப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 2015ல் சர்வதேச அளவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்துக்கு கீழ் குறைந்துவிடும். ஆனால் 23 சதவீதம் என்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தனது பயணத்தை வெற்றிகரமாக துவக்கிய அட்லாண்டிஸ் விண்கலம் .
அமெரிக்காவின் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் தனது கடைசிப்பயணத்தை வெள்ளிக்கிழமை தொடங்கியது.கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்க விண்வெளித்துறையான நாசாவினால் விண்வெளி ஓடமாக பயன்படுத்தப்பட்டு வந்த அட்லாண்டிஸின் பயன்பாடு இந்தப் பயணத்துடன் முடிவுக்கு வருகிறது.
அமெரிக்க விண்வெளி வீரர்களுடனும், சர்வதேச விண்வெளி மையத்துக்குத் தேவையான உபகரணங்களுடனும் செல்லும் அட்லாண்டிஸ் 12 நாள்களுக்கு பின் பூமிக்குத் திரும்புகிறது.அட்லாண்டிஸின் கடைசிப் பயணத்தைக் காண 7,50,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் புளோரிடா மாகாணத்தில் குவிந்தனர்.
இனி வரும் காலங்களில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் விண்வெளி ஓடத்திலேயே அமெரிக்க விண்வெளி வீரர்கள் செல்வார்கள்.அடுத்த விண்வெளி ஓடம் உருவாக்கப்படும் வரை இந்த நிலையே தொடரும்.விண்வெளிப்பயணம் முடிந்து பூமிக்கு திரும்பிய பின் அட்லாண்டிஸ்க்கு ஓய்வு அளிக்கப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


காங்கோவில் விமான விபத்து: 72 பேர் பலி.
காங்கோ குடியரசு நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் 72 பேர் பலியாயினர்.காங்கோ நாட்டில் உள்ள கின்சாகா மற்றும் கிசான்கனி நகருக்கு இடையே ஹேவா போரா என்ற விமானம் பயணிகள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.சம்பவத்தன்று இந்த விமானத்தில் சுமார் 127 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணம் செய்தனர்.
இந்த விமானம் கிசான்கனி அருகே சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்திற்குள்ளானது. இதில் 72 பேர் வரை பலியாயினர்.மீதமுள்ளவர்களில் 51 பேர் வரை உயிர் பிழைத்திருக்க கூடும் என்று காங்கோ விமான போக்குவரத்து நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.விமான போக்குவரத்தில் மோசமாக பராமரிப்பு கொண்ட நாடு என்ற பெயரை காங்கோ பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று புது நாடாக உதயமாகும் தெற்கு சூடான்.
ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு தெற்கு சூடான் இன்று புதிய நாடாக உதயமாகிறது.சூடான் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கோரி கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டு போர் நடந்தது. வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் பழங்குடி மக்கள் அதிகம் உள்ளனர். உள்நாட்டு சண்டையில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
கடந்த 2005ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் பேரில் சூடானை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஜனவரியில் இதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. சூடானை இரண்டாக பிரிக்க பெருவாரியான மக்கள் ஓட்டளித்தனர். இதையடுத்து வடக்கு சூடான், சூடான் என்ற பெயரிலேயே அழைக்கப்படும்.புதிய சூடான் தெற்கு சூடான் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இன்று உலகின் 193வது நாடாக உதயமாகும் தெற்கு சூடானை சிறப்பிக்கும் வகையில் நடக்கும் விழாவில் உலக நாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
சூடானிய அரசுக்கும், சூடானிய மக்கள் விடுதலை ராணுவத்துக்கும் கடந்த 2005ம் ஆண்டில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பவல் ஆகியோரின் முன்னிலையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.இதனால் தெற்கு சூடானுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. அங்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது. வடக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை பெறுவதற்காக கடந்த ஜனவரி மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு தெற்கு சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
உலகில் 193வது சுதந்திர நாடான தெற்கு சூடானின் முதல் சுதந்திர தின கொண்டாட்டம் தலைநகர் ஜூபாவில் இன்று நடக்கிறது. இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக இந்திய துணை ஜனாதிபதி அமீது அன்சாரி நேற்று அந்நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.ஆசிய நாடுகளில் முதன் முதலாக இந்தியா தான் தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் கடந்த 2007ம் ஆண்டு துணைத் தூதரக அலுவலகம் திறந்தது. தெற்கு சூடானுக்கு போகும் வழியில் அமீது அன்சாரி கம்பாலாவில் உகாண்டா ஜனாதிபதி யோவேரிமுசேவேனியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.
விண்ணில் பறக்கும் மர்ம பொருளால் அணு ஏவுகணை மையத்திற்கு ஆபத்து.
விண்ணில் பறக்கும் மர்ம யு.எப்.ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பொருளால் அணு ஏவுகணை மையத்திற்கு ஆபத்து வருமா என அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது.வேற்று கிரகத்தில் இருந்து வரும் மர்ம யு.எப்.ஓ பறந்த போது மேற்கு அமெரிக்காவின் வியூமிங் அணு ஏவுகணை மையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.இதனால் 50 அணு ஏவுகணை மற்றும் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இலக்கை தாக்கும் ஏவுகணைகளின் கட்டுப்பாடு துண்டிக்கப்பட்டது.
யு.எப்.ஓ வந்த போதும் இந்த மின்சாரமும் துண்டிக்கப்பட்ட நேரத்தையும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் திகதி அமெரிக்காவின் அணு ஆயுதக்கிடங்கின் 9 பகுதியில் ஒரு பகுதி மின்சாரமும் இல்லாமல் முடங்கி போனது.
45 நிமிட நேரம் மின்சாரம் இல்லாமல் காணப்பட்டது. யு.எப்.ஓ வந்த நேரத்தில் இந்த மின் இணைப்பு ஏவுகணை பகுதியில் துண்டிக்கப்பட்டது குறித்து பீதி ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த நிகழ்வால் அபாயம் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர்.மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட அணு ஏவுகணை மையத்திற்கு மேல் சம்பவ நாளிலும் அதற்கு மறுதினமும் யு.எப்.ஓ மர்மப் பொருள் வானில் வட்ட மடித்ததை பார்த்தவர்கள் கூறினர்.
உலகின் மிக வறட்சியான பாலைவனத்தில் கடும் பனிப்பொழிவு: மக்கள் தவிப்பு.
அர்ஜென்டினா போன்ற நாடுகளில் தற்போது பனி பெய்வதால் கடும் குளிர் நிலவுகிறது.சிலி தலைநகர் சான்டியாகோ நகரில் நேற்றைய வெப்பநிலை மைனஸ் 8.5 டிகிரியாக இருந்தது.இங்குள்ள அடகாமா பாலைவனம் உலகிலேயே மிகவும் வறட்சியான பகுதி. ஆனால் இங்கும் கடுமையாக பனி பொழிகிறது.
சில இடங்களில் 80 செ.மீ உயரத்துக்கு பனி பெய்துள்ளது. சாலைகள் பனியால் மூடப்பட்டதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.நேற்று முன்தினம் ஒரு பஸ் பனியில் சிக்கியது. அதில் 2 நாட்களாக தவித்த பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
அதிபர் ஒபாமாவை கொல்ல திட்டம்: குற்றவாளி கைது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டதாக கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை சனிக்கிழமை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.சிகாகோவை சேர்ந்தவர் ஜேம்ஸ் வெர்னான் மெக்வி(47). வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் தெற்கு டகோடா பகுதியில் உள்ள மேபெலி ஷெய்ன் என்ற 75 வயது மூதாட்டியின் வீட்டில் புகுந்து கத்தியால் அவரைக் குத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.பின்னர் அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேபெலியின் காரில் ஏறி தப்பிச் சென்றார். இது குறித்து அறிந்த பொலிசார் சென்சார் மூலம் வாகனங்களை கண்டறியும் கருவியைக் கொண்டு ஜேம்ஸ் ஓட்டிச் சென்ற காரை மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை கொலை செய்ய முடிவு செய்ததாகவும், அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வாஷிங்டன் செல்ல கார் தேவைப்பட்டதால் மேபெலி ஷெய்னை கொன்றதாகவும் தெரிவித்தார்.அவரை கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்தனர். அவர் மீது போதைப்பொருள் வைத்திருந்தது, பொலிசாரிடமிருந்து தப்ப முயன்றது மற்றும் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றது உள்பட மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கண்களை குருடாக்கும் தாவர வகை: வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் மனித உடலில் எரிகாயங்கள் மற்றும் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய தாவர வகையொன்று வேகமாகப் பரவி வருவதாக அம்மாநில சுற்றாடல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்."ஜயன்ட் ஹொக்வீட்" எனப்படும் இவ்வகை மரமானது சுமார் 12 அடி வரை வளரக் கூடியது. இம்மரத்தின் பூக்கள் குடைகள் போன்ற வடிவில் காணப்படும்.
இதன் பால் உடலில் பட்டு அவ்விடத்தில் சூரிய ஒளிக் கதிர்கள் படுமிடத்து மோசமான காயங்களை உண்டாக்கக் கூடியது. மேலும் கண்களில் பட்டால் நிரந்தரமாக குருடாக்கக் கூடிய தன்மை கொண்டவை.நியூயோர்க் நகரில் மாத்திரம் சுமார் 944 இடங்களில் இத்தாவரமானது இனங்காணப்பட்டுள்ளது.மேலும் அம்மாநிலத்தில் இத்தாவரத்தை யாராவது இனங்கண்டால் உடனே அறிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதுடன் இதற்கென விசேட தொலைபேசி இலக்கங்களையும் வழங்கியுள்ளனர்.
பூட்டிய வீட்டுக்குள் 8 ஆண்டுகளாக பிணமாக கிடந்த பெண்.
அவுஸ்திரேலியாவில் சிட்னி நகரின் புறநகர் பகுதியில் வசித்தவர் நடாலி உட். 80 வயதை தாண்டிய இந்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இவரது உறவினர் அருகில் உள்ள ஊரில் வசித்து வருகிறார். அவர் எப்போதாவது வந்து நடாலி உட்டை பார்த்து செல்வார். சில வருடமாக உறவினர் அவரை பார்க்க வரவில்லை.
இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இவருக்கான பென்சன் தொகை டெலிவரி ஆகாமல் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கே திரும்பிச் சென்றுள்ளது. மின் கட்டணம் கட்டாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் அந்த வீடு இருளில் கிடந்தது. நடாலி உட் வீட்டை விட்டு வெளியேறி வேறு எங்கோ சென்று விட்டார் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் கருதினர்.நடாலி உட்டின் உறவினர் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் அங்கு வந்தார். அப்போது நடாலியின் படுக்கை அறையில் எலும்புக் கூடுகள் மட்டுமே கிடந்தன. இதையடுத்து அவர் பொலிசுக்கு தகவல் தெரிவித்தார்.பொலிசார் வந்து எலும்பு கூடுகளையும், மண்டை ஓட்டையும் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பினர். இதில் இறந்தவர் நடாலி தான் என்றும், இறந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர்கள் தொடர்ந்து இருப்பார்கள்: பிரதமர் உறுதி.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ள பிரிட்டன் துருப்புகள் தங்கள் பணியை 2014ஆம் ஆண்டு பூர்த்தி செய்கின்றனர்.அவர்கள் பணி முடிவடைந்த பின்னரும் வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பார்களா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் பிரதமர் டேவிட் கமரூன் பொதுச்சபையில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,"ஆப்கானிஸ்தானில் 9500 பிரிட்டன் வீரர்கள் உள்ளனர். அவர்களில் 500 பேர் வருகிற ஆண்டு இறுதியில் நாடு திரும்புவார்கள்" என்றார். வருகிற 2012ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 426 வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என ஏற்கனவே அமைச்சர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த வீரர்கள் குறைப்பு நடவடிக்கை மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ஆம் ஆண்டு அனைத்து வீரர்களும் நாடு திரும்புவார்கள் என கூறப்பட்டது. பிரிட்டன் துருப்புகள் பணிக்காலம் முடிந்தாலும் ஆப்கானிஸ்தானிற்கு ராணுவ உதவி நீண்ட காலம் தொடரும் என்று பிரதமர் தெரிவித்தார்.ஆப்கானிஸ்தான் சர்வதே தீவிரவாத பிடியில் சிக்கி உள்ளது. அந்த அமைப்பிடம் இருந்து ஆப்கானிஸ்தானை காப்பாற்ற வேண்டி இருப்பதால் நமது உதவியை அளிக்க வேண்டி உள்ளது.2104ஆம் ஆண்டிற்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் போர் நடவடிக்கையில் ஈடுபடாத போதும் இதர ராணுவ உதவி நடவடிக்கைகளில் பிரிட்டன் செயல்படும் என கமரூன் தெரிவித்தார்.
ஆப்கன் ராணுவ அதிகாரிகளுக்காக பயிற்சி கல்லூரி அமைக்க 120 பிரிட்டன் வீரர்கள் உதவுவார்கள். ஆள் இல்லாத விமானங்களை ஆப்கன் ராணுவத்தினர் இயக்க பிரிட்டன் வீரர்கள் பயிற்சி அளிப்பார்கள் என்றார்.பிரதமரின் திட்டத்திற்கு தொழிலாளர் தலைவர் எட் மிலிபான்ட் ஆதரவு தெரிவித்தார். பிரதமர் டேவிட் கமரூன் இந்த வார துவக்கத்தில் ஆப்கானிஸ்தானிற்கு திடீர் பயணம் மேற்கொண்டு பிரிட்டன் வீரர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளின் அடக்குமுறையை ஆதரிக்கும் ஜேர்மனி: எதிர்க்கட்சிகள் பயங்கர குற்றச்சாட்டு.
மத்திய கிழக்கு நாடுகளில் அடக்கு முறையை ஜேர்மனி அரசு ஆதரிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.சவுதி அரேபியாவுடன் முறைகேடான பீரங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது தொடர்பாக எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் இவ்வாறு குற்றம் சாட்டின.
சவுதி அரேபியாவுக்கு பீரங்கி அளித்தது குறித்து ஜேர்மனி அரசு ஒப்புதல் அளிக்கவோ அல்லது மறுக்கவோ இல்லை.கடந்த மாதம் லியோபார்டு பீரங்கிகளை விற்க பெர்லின் ஒப்புதல் அளித்ததாக ஊடக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் வந்ததை தொடர்ந்து எதிர்கட்சிகள் அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
எதிர் கட்சிகள் குற்றச்சாட்டுக்கு ஜேர்மனி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹான்ஸ்-ஜேசிம் ஓட்டோ கூறுகையில்,"பல ஆண்டுகளாக சவுதி அரேபியா ஜேர்மனியிடம் இருந்து ஆயுதங்கள் பெற்று வருகிறது" என்றார்.சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது குறித்த கொள்கையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சியனர் வலியுறுத்தினர்.
அந்த பிராந்தியத்தில் ஏராளமான ஜனநாயக போராட்டங்கள் நடைபெறும் தருணத்தில் இந்த ஆயுத சப்ளை குறித்த விளக்கம் தேவை என்றும் அவர்கள் கூறினார்கள். இந்த வார துவக்கத்தில் பீரங்கி ஒப்பந்தம் குறித்து சவுதி பாதுகாப்பு தரப்பு உறுதிபடுத்தியது.ஆர்டர் செய்த 200 பீரங்கிகளில் 44 பீரங்கிகளை பெற்றுள்ளதாக சவுதி தெரிவித்துள்ளது. இருப்பினும் பீரங்கி ஒப்பந்த மதிப்பு விவரம் தெரிவிக்கப்படவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF