Sunday, July 24, 2011

புதுமைகள் பல நிறைந்த புத்தக சேவை தளம்.

Type Writer for Books
புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான நேரம் தான் இல்லை என்று கூறுபவர்களுக்கு என்றே பிரத்யேகமான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் ஆங்கில சொல்லான புக்ஸில் ‘கே’ விற்கு பதிலாக கியூ என்னும் எழுத்து இடம் பெறும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. பெயரில் மட்டும் அல்ல செயல்பாட்டிலும் இதே புதுமை இருக்கிறது.
படிப்பதை இன்னும் செயல் திறனோடு மேற்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த தளம் வாசிப்பதன் மூலம் தேவைப்படும் அறிவை சுலபமாகவும், இலவசமாகவும் பெறுங்கள் என்கிறது.புத்தகத்தில் உள்ளவற்றை சுலபமாக தெரிந்து கொள்வது என்பது சரி. ஆனால் இலவசமாக தெரிந்து கொள்வது என்றால் என்ன பொருள் என்று குழப்பம் ஏற்படலாம்.
இலவசமாக படிப்பது என்றால் படிக்காமலேயே படிப்பது என்று வைத்து கொள்ளுங்களேன். படிக்காமல் படிப்பது எப்படி என்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டால் முழு புத்தகத்தையும் படிக்காமல் அதன் சாரம்சத்தை மட்டும் சில வரிகளில் தெரிந்து கொள்வது என்று பொருள்.
புத்தகங்களின் சாரம்சம் அல்லது அதன் முக்கிய பகுதியை சுருக்கமாக தருவதுண்டு அல்லவா, அதே போல இந்த சேவை புனை கதை அல்லாத எந்த புத்தகத்தையும் முக்கிய வரிகளாக சுருக்கி தந்துவிடுகிறது.அதாவது மேற்கோள்கள் போல அளிக்கிறது.
புத்தகத்தை முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் பரவயில்லை, அதன் சாரம்சத்தை தெரிந்து கொள்ள முடிந்தால் நல்லது என்று கருதுபவர்களுக்கு புத்தகத்தின் உள்ளடக்க சுருக்கம் மிகவும் பயனுள்ளது. ஆனால் இதையும் கூட படிக்க முடியாமல் திணறுபவர்கள் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் எதையுமே ரத்தின சுருக்கமாக சில வரிகளில் சொல்லும் போது எல்லோரையும் கவரவே செய்யும் தானே.அதை தான் இந்த தளம் வாசிப்பதை புதுமையானதகாவும் புத்திசாலித்தனமானதாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. அதற்கேற்ப புத்தகங்களில் உள்ளவற்றை கிரகித்து கொள்வதற்கான புதுமையான வழியை உருவாக்கியிருப்பதகாவும் பெருமைப்பட்டு கொள்கிறது.
புனை கதை அல்லாத புத்தகங்களின் உள்ளடக்கத்தை முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கும் வழியையும் இந்த தளம் வழங்குகிறது.இப்படி பகிரப்பட்ட புத்தகங்களின் முக்கிய வரிகளை முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தக பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் உள்ள புத்தகத்தை கிளிக் செய்தால் அந்த புத்தகத்திற்கான தனி பக்கம் வருகிறது.
அதில் அந்த புத்தகத்தின் முக்கிய வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிகளை படித்தாலே புத்தகத்தின் ஆதார அம்சம் என்னவென்று புரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு சில வரிகளில் ஒரு புத்தகத்தை படித்து விடுவது என்பது சிறந்த விடயம் தானே.புத்தக பிரியர்கள் தாங்கள் படித்த புத்தககங்களில் இருந்தும் முக்கிய வரிகளை இப்படி பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே இடம்பெற்றுள்ள புத்தகத்தை படித்தவர்கள் தாங்கள் முக்கியமாக கருதும் வரிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புத்தகம் படிப்பதென்பது ஒரு தவம்.அந்த தவத்தின் மூலம் பெறக்கூடிய அறிவையும் புரிதலையும் ஒரு சில வரிகளில் பெற முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் பக்கம் பக்கமாக படிக்க முடியாதவர்களுக்கு புத்தகம் படிப்பதன் ஆர்வத்தையும் அதன் பலனையும் தரக்கூடியது என்னும் விதத்தில் இந்த சேவையை வரவேற்கலாம்.புத்தகங்களை பார்த்தாலே ஓடுபவர்களில் பலரை புத்த்க உலகின் பக்கம் இந்த சேவை இழுத்து வரக்கூடும்.  மேலும் எதையுமே சில வரிகளில் தெரிந்து கொள்ள துடிக்கும் டிவிட்டர் தலைமுறைக்கு இந்த சேவை மிகவும் தேவை என்றும் சொல்லலாம்.
அதோடு இங்கு சமர்பிக்கப்படும் பட்டியலில் இருந்து புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். அதன் சாரம்ச வரிகளை கொண்டு அந்த புத்தகத்தை படிக்கலாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தீவிர புத்தக புழுக்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.இப்போது தான் துவக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த தளத்தில் உள்ள புத்தக பட்டியல் பெரிதாக இல்லை. ஆனால் அமைப்பும் உள்ளடக்கமும் கவரக்கூடியதாகவே இருக்கின்றன. பலரும் பயன்படுத்த துவங்கினால் இந்த தளம் சுவாரஸ்யம் மிகுந்ததாக உருவாகலாம்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF