Saturday, July 30, 2011

டையனோசரை வேட்டையாடி உண்ணக்கூடிய ராட்சத முதலை கண்டுபிடிப்பு.


பற்கள் பெரிதாகவும் நாயின் தலையை ஒத்த மண்டையோட்டு வடிவத்தைக் கொண்டதாகவும் உள்ள 70 மில்லியன் வயதுடைய முதலை இனம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
"Pissarrachampsa sera" எனும் முதலையின் எச்சப் படிகத்திலிருந்து இது டைனசோர்களையே வேட்டையாடி உண்ணக்கூடியது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இவ் எச்சமானது ஒரு நகரசபைப் பணியாளரால் கற்படிகங்களில் கண்டுபிடிக்கப்பட்டது. டைனசோர் யுகத்தின் கடைசிக்காலப் பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இது அழிந்து போன Baurusuchia வகை முதலை பற்றிய தகவல்களை அதிகளவில் வெளிக்கொணர்கின்றதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவீன வகை முதலைகளுக்குத் தாழ்வான தட்டையான தலைகள் காணப்படும். ஆனால் இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் தலையமைப்புப் பற்றிய ஆழமான விளக்கத்தை அறியக்கூடியதாயுள்ளது.
உயரமான நாய் போன்ற பெரிய வேட்டைப்பற்கள் கொண்ட மண்டையோட்டுடனும் நீண்ட உடலமைப்புடனும் இவை காணப்படுகின்றன என்று கியூபெக் பல்கலைக்கழக முன்னணி ஆய்வாளர் ஹான்ஸ் லார்சன் தெரிவித்தார். இன்று காணப்படும் காட்டு நாய்களின் வாழ்க்கையை ஒத்ததாகவே இவற்றின் செயற்பாடுகளும் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இவற்றின் பற்களின் தொகையையும் பருமனையும் பார்த்து இவை சிலவேளை தங்களைப் போன்ற 15 இருந்து 20 அடி நீளமான ஒரே அளவான முதலைகளையும் டைனசோர்களையுங் கூட வேட்டையாடிச் சாப்பிட்டிருக்கலாமென நம்புகின்றனர்.
இவற்றிடம் இரையைப் பின்தொடர்ந்து பிடிக்கக் கூடிய நுணுக்கமான கட்புலன் இருந்திருக்கலாம். ஆய்வாளர் லாசனினால் வரையப்பட்ட கோட்டு வரைபடத்தின் மூலம் அவை வேட்டையாடும்போது எப்படியான நகர்வில் இருந்திருக்கலாம் என்பதை அறியக்கூடியதாயுள்ளது.
இவற்றின் உடல் முதலையின் வழமையான உடலைப் போலல்லாது டைனசோரைப் போலவே இருந்தாலும் அதன் தலைப்படிகம் மூலம் பெறப்பட்ட குணாதிசயங்களிலிருந்து அது அந்த யுகத்தில் வாழ்ந்த முதலை வகைதான் என்பது உறுதியாக்கப்பட்டது.
இதில் நன்றாக வளர்ந்த கீழ்த்தாடையும் பற்களும் கடினமான எலும்பு மேற்பரப்புகளும் தகட்டுக் கவசம் போன்ற தாடையைச் சுற்றியுள்ள தசைநார்களும் இவற்றை உறுதிப்படுத்த உதவின.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF