Monday, July 25, 2011

இன்றைய செய்திகள்.

அமெரிக்க தடையால் இலங்கைக்கு நட்டம்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா விதிக்கவுள்ள நிதித்தடை காரணமாக ஸ்ரீலங்கா 1.4 பில்லியன் ரூபாய்களை இழக்கநேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் யுஎஸ் எய்ட் நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலுமான நிதி ஆண்டுக்காக இலங்கைக்காக 6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளது
நிதித்தடை காரணமாக அந்த நிதியும் இலங்கைக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த வியாழகிழமையன்று அமரிக்க காங்கிரஸ் இலங்கைக்கு எதிரான நிதித்தடை தீhமானத்தை நிறைவேற்றியது
இலங்கை அரசாங்கம் தம்மீது சுமத்தப்பட்டு போர்க்குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காது போனால் இந்த தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ தரப்பு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வரும் இராஜாங்க செயலாளரும் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் - அமெரிக்கா.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளன்டனும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது
கடந்த வாரம் ஹிலாரி கிளின்டன் தமது இந்திய பயணத்தின் போது சென்னைக்கு சென்றிருந்தார்.
இதன்போது அவர் ஜெயலலிதாவை சந்தித்த போது இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இலங்கையின் இனப்பிரச்சினை முக்கிய இடம்பெற்றதாக அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்தார்.
இதன்போது இருவரும் இலங்கையில் நல்லிணக்கம் விரைவில் ஏற்படவேண்டும் என்பதில் இணக்கம் கண்டுள்ளனர்.
இதேவேளை இலங்கை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் என்று இருவரும் வலியுறுத்தியதாக ரொபட் ஓ பிளேக் குறிப்பிட்டார்.
அத்துடன் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகள் மற்றும் சரணடைந்தவர்கள் தடு;த்து வைக்கப்பட்டிருத்தல் போன்ற விடயங்களும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக பிளேக் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தேர்தல் முடிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி.

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இதேவேளை வடபகுதியில் வல்வெட்டித்துறை நகர சபை, வலிகாமம் தென் மேற்கு, வலிகாமம் வடக்கு மற்றும் துணுக்காய் பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது
இத்தேர்தலின் உத்தியோக பூர்வ முடிவுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.
உலகின் தலைசிறந்த மனைவிமார்களின் பட்டியல் வெளியீடு.
நியூயோர்க்கின் டைம்ஸ் பத்திரிக்கை மிச்செல் ஒபாமா மற்றும் சாரா பாலின் ஆகியோரின் கருத்துக்கள் அடங்கிய உலகின் தலைசிறந்த 10 வரலாற்று மனைவிகளின் பட்டியலை வெளியிட்டது.
இதில் 1857ம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய் பெயரும் இடம்பெற்றுள்ளது.
கணவரின் வளர்ச்சி, போராட்டம் ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்ததுடன் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட மனைவிகளின் பட்டியலில் அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க குடியரசு தலைவர் ஜான் மெக்கைனின் மனைவி சாரா பாலின் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் எகிப்திய முன்னாள் ராணி கிளியோபாட்ரா, டைகர்வுட்ஸ் முன்னாள் மனைவி எலின் நார்டிகரன், ஸ்பெயின் ராணி இசபெல்லா உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற பெண்மணிகளின் பெயர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது
நோர்வே இரட்டைத் தாக்குதல்: குற்றவாளி ஒப்புதல்.
நோர்வேயில் இளைஞர் முகாமில் துப்பாக்கி சூடும், ஓஸ்லோவில் குண்டு வெடிப்பும் நடத்தியதை சந்தேக்கிக்கப்பட்ட நபர் ஒப்புக் கொண்டார்.
32 வயது ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் வெள்ளிக்கிழமை காவல்துறை சீருடையில் உடோயா தீவில் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலின் போது 85 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தவிர தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்பில் 7 பேர் இறந்தனர். இந்த இரண்டு பயங்கர தாக்குதல்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 92 ஆனது. தாக்குதலில் மாயமானவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
உடோயா தீவு முகாமில் துப்பாக்கி குண்டு காயம்பட்ட 4 பேரை காணவில்லை. மாயமானவர்களின் உடல்களை கண்டுபிடிக்க பொலிசார் சிறிய நீர்மூழ்கி படகுகளை பயன்படுத்துகின்றனர்.
இதற்கிடையே ஓஸ்லோவில் குண்டு வெடிப்பில் சிலர் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என பொலிசார் அஞ்சினர். வெள்ளிக்கிழமை தாக்குதலுக்கு மற்றொரு நபரும் காரணமாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் வலது சாரி தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர் என கூறப்படுகிறது. நோர்வேயில் ஆட்சி செய்யும் தொழிலாளர் கட்சி கட்டிடங்களில் குறி வைத்தே தாக்குதல் நடந்து உள்ளது. இறந்தவர்களுக்கு மசூதி, தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.
தலிபான்களுடன் பகலில் சண்டை, இரவில் விருந்து: அமெரிக்க தளபதியின் இரட்டை வேடம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையில் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துகின்றன.
பகல் நேரம் முழுவதும் தலிபான்களை எதிர்த்து மோதல் நீடிக்கிறது. இரவு ஆனதும் அமெரிக்க தளபதிகள் தங்களது ஆயுதங்களை தரையில் வைத்து விட்டு தலிபான் தலைவர்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தி விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்க தளபதியான லெப்டினன்ட் கர்னல் டாம் சேவற், இரவு நேரத்தில் 3 உள்ளூர் தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காத்து இருக்கிறார். கடந்த மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார்.
அவரது மரணத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சு வார்த்தை நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படும் என யு.எஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
தலிபான்கள் உயர் தலைமை பேச்சுவார்த்தையில் இன்னும் தயக்கம் காட்டி வருகிறது. தலிபான் தலைமைக்கு கட்டுப்பட்டு மிகச்சிறிய இளைஞர்களும் போரில் ஈடுபடுத்தப்படுவது குறித்து உள்ளூர் தலிபான் தலைவர்கள் தெரிவித்தனர்.
யு.எஸ் கடல்சார் வீரர்கள் தலிபான்கள் தாக்குதலில் 37 பேர் இறந்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 100 பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் புதிய நம்பிக்கை கிடைக்கும் என தலிபான் உள்ளூர் தலைவர்களுடன் அமெரிக்க தளபதிகள் இரவு நேர விருந்து பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
சீனாவில் அதிவேக புல்லட் ரயில்கள் மோதல்: 35 பேர் பலி.
சீனாவில் புல்லட் ரயில் போக்குவரத்து கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல ஆயிரம் கோடி மதிப்பில் இத்திட்டத்தை சீன அரசு அமல்படுத்தியது.
மணிக்கு 250 கி.மீ வேகத்தில் இந்த ரயில்கள் சென்று வந்தன. இதுவரை எந்த விபத்தையும் சந்திக்காத புல்லட் ரயில்கள் நேற்று இரவு முதல் முறையாக பெரிய விபத்தை சந்தித்தது.
சீனாவின் ஹாங்ஸ்ஷோ மாநிலத்தின் ஜீஜியாசிங் நகரில் இருந்து பியூஜியன் பகுதியில் உள்ள பஸ்ஹோ நகருக்கு நேற்று மாலை ஒரு புல்லட் ரயில் புறப்பட்டது. வென்சோ நகருக்கு வந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் மின்சாதனத்தில் பழுது ஏற்பட்டு ரயில் நின்றது.
சிறிது நேரத்தில் பீஜிங் நகரில் இருந்து பஸ்ஹோ நகருக்கு சென்ற ரயில் அதே வழித்தடத்தில் வேகமாக வந்தது. பழுதாகி நின்றிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது. இதில் நின்று கொண்டிருந்த ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளும், மோதிய ரயிலின் முதல் நான்கு பெட்டிகளும் தடம் புரண்டு, பாலத்திலிருந்து கீழே விழுந்து தொங்கியது.

இந்த விபத்தில் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட 35 பேர் பலியாயினர். 191 பேர் காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்துக்கு மீட்பு குழுவினர் ஆயிரம் பேர் உடனடியாக அனுப்பப்பட்டனர்.
காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உள்ளூர் ரத்த வங்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று விபத்து நடந்த இடத்துக்கு அருகே வசிக்கும் மக்கள் 500 பேர் ரத்தம் கொடுத்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சீன ரயில்வே அமைச்சர் செங் காங்சூ உத்தரவிட்டுள்ளாளர். மீட்பு பணியை விரைவாக மேற்கொள்ளும்படி சீன அதிபர் ஹூ ஜின்டா, பிரதமர் வென் ஜியாபோ ஆகியோர் உத்தரவிட்டனர்.
சண்டே மிர்ரர் பத்திரிகை செய்தி அறையில் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருட்டு.
சண்டே மிர்ரர் பத்திரிகையிலும் பிரபலங்களின் தொலைபேசி தகவல்கள் திருடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாக பி.பி.சி.யின் நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் பிரபல நட்சத்திரங்கள், தலைவர்கள் கைகளில் போன் வைத்துக் கொள்ளவே அஞ்சுகிறார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு செய்தியும் பெரிய பத்திரிக்கைள் திருடி பரபரப்பு செய்திகளை வெளியிட்டு விடுகிறார்கள்.
இந்த தொலைபேசி தகவல் திருட்டு பிரச்சனையில் சிக்கிக் கொண்ட முர்டோக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை கடந்த 10ந் திகதி மூடப்பட்டது. 168 ஆண்டுகள் சிறப்பாக ஓடிய அந்த பத்திரிகை தொலைபேசி தகவல் குற்றச்சாட்டால் மூடப்பட்டது.
இந்த நிலையில் பிரிட்டனில் தகவல் திருட்டு குறித்த விவாதம் கடுமையாக விவாதிப்படுகிறது. பி.பி.சி நியூஸ் நைட் நிகழ்ச்சியில் தொலைபேசி தகவல் திருட்டு குறித்து காரசாரமாக பேசப்பட்டது.
அப்போது சண்டே மிர்ரர் பத்திரிகை அறையில் பிரபலங்களின் தொலைபேசி தகவல் திருட்டு குறித்து கண்காணிக்கப்பட்டது குறித்தும் விவரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் இருக்கும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
பிரிட்டன் திரைப்பட நட்சத்திரம் லிஸ் ஹர்ட்லி மற்றும் கால்பந்து வீரர் ரியோ பெர்டினன்ட் ஆகியோர் பற்றி பரபரப்பு தகவல் வெளியிட பிரிட்டன் பத்திரிக்கைகள் ஆர்வம் காட்டின. அப்போது லியின் போன் தகவல் சண்டே மிர்ரர் பத்திரிகை அறையில் கண்காணிக்கப்பட்டதையும் ஒரு செய்தியாளர் நிகழ்ச்சியில் கூறினார்.
யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது: ஏங்கலா மார்கெல்.
யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்தே பார்க்க முடியாது என ஜேர்மன் அதிபர் ஏங்கலா மார்கெல் கூறினார்.
அதிபர் ஏங்கலா தலைநகர் பெர்லினில் வருடாந்த செய்தியாளர்கள் சந்திப்பை வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது அவர் கூறுகையில்,"யூரோ என்பது ஐரோப்பாவை விட்டு பிரிக்க முடியாத ஒன்று. யூரோ இல்லாத ஐரோப்பாவை நினைத்து பார்க்க முடியாது" என்றார்.
சர்ச்சைக்குரிய பீரங்கி ஏற்றுமதி சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டது குறித்து அவர் கூறுகையில்,"பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டி உள்ளது. அதே நேரத்தில் மனித உரிமை மற்றும் ஜனநாயக மதிப்புகளையும் மேம்படுத்த வேண்டி உள்ளது. எனவே சவுதி அரேபியாவிற்கு 200 பீரங்கிகள் ஏற்றுமதி நியாயமானது தான்" என்றார்.
அரபு நாடுகளில் மக்கள் போராட்டம் ஏற்பட்டு வரும் நிலையில் ஆயுத ஏற்றுமதியை ஜேர்மனி மேற்கொள்வது சரியல்ல என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பா நாடுகளில் ஒன்றான கிறீஸ் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டு கடன் பிரச்சினையில் உரிய பங்கெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வருகிற 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதையும் அவர் தெரிவித்தார். தமது பதவியை நேசிப்பதாக கூறிய அவர் இந்த சூழ்நிலை மாற விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பெல்ஜியத்தின் பாதிப்பகுதியை பிரான்ஸ் ஏற்க வேண்டும்: தேசிய கட்சி தலைவர் மரினே வலியுறுத்தல்.
பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளை பிரான்ஸ் தனது புதிய பகுதியாக ஏற்க வேண்டும் என பிரான்சின் வலது சாரி கட்சியான தேசிய கட்சி தலைவர் மரினே லே பென் கூறினார்.
பெல்ஜியத்தில் டச்சு மொழி பேசும் மக்கள் வடக்கு பகுதியில் உள்ளனர். பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் தெற்கு பகுதியில் உள்ளனர். இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல் நடந்து வருகிறது.
இதன் காரணமாக கடந்த 400 நாட்களுக்கு மேல் எந்த ஒரு அரசாங்கமும் இல்லாமல் பெல்ஜியம் தவித்து வருகிறது.பெல்ஜியத்தின் தேசிய நாளின் போது மரினே அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில் பெல்ஜியத்தின் 50 சதவீதப் பகுதியை பிரான்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். பெல்ஜியம் இனியும் ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால் பிரான்ஸ் தனது கரத்தை பிரான்சு மொழி பேசும் மக்கள் அல்லது வாலுன்களிடம் நீட்ட வேண்டும்.
தற்போதைய பெல்ஜியம் சூழ்நிலை யாருக்கும் மகிழ்ச்சியை தராது. பெல்ஜியம் நிலைப்பாட்டை பிரான்ஸ் கருத்தில் கொள்ள வேண்டும். பிரெஞ்சு மொழி பேசும் தெற்கு பகுதி பெல்ஜிய மக்களுக்கு பிரான்ஸ் உதவிக்கரம் நீட்டவேண்டும் என வலியுறுத்தினார்.
அந்த நிலைபாட்டில் இருந்து தவறக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளின் பொது கருத்து வாக்கெடுப்புக்கு பின்னர் உரிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என மரினே தெரிவித்தார்.
சீன அரசால் தேடப்பட்டு வந்த குற்றவாளி 12 ஆண்டுகளுக்கு பின்னர் கைது.
சீனாவில் 100 கோடி டொலர் கடத்தல் சதியில் முக்கிய நபராக கருதப்பட்ட நபரை அவரது நாட்டுக்கு கனடா அனுப்பியது.
சீனாவை சேர்ந்தவர் லாய் சாங்சிங்க். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சீன அரசின் பிடியில் இருந்து தப்பி கனடா வந்தார். 1999ஆம் ஆண்டு கடனாவில் அவர் அகதியாக வர அனுமதி கேட்டார்.
தன்னை கனடாவை விட்டு வெளியேற்றக்கூடாது. அப்படி செய்தால் தமது உயிருக்கு அபாயம் ஏற்படும் என கனடா அரசிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தார். மேலும் தனது சொந்த நாட்டில் சித்ரவதை செய்யப்படும் நிலையும் உள்ளது என கூறி வந்தார்.
தற்போது லாய் சாங்சிங்கிற்கு 52 வயது ஆகிறது. 12 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் அவர் நேற்று வான்கூவரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு லஞ்சம், கடத்தல் மற்றம் வரி ஏய்ப்பு ஆகிய கிரிமினல் குற்றங்களுக்காக விசாரணை செய்யப்படுகிறார்.
சாங்சிங் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து வராது என சீனா உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து லாய் சாங்சிங் கனடாவில் இருந்து அனுப்பப்பட்டார். சீனாவில் பணியாற்றிய முன்னாள் கனடா தூதர் ஹாவர்டு பாலோச் கூறுகையில்,"தற்போயை நடவடிக்கை மூலம் இருநாட்டு உறவு மேலும் வலுப்படும்" என தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF