Sunday, July 17, 2011

முதன் முறையாக சூரியனை சுற்றி வந்த நெப்டியூன்.
degrees ahead of neptune


இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போது தான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்துள்ளது. அதாவது சூரியனை இந்த கிரகம் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம் 165 ஆண்டுகளாகும்.
18ம் நூற்றாண்டில் யுரேனஸ் தான் நமது சூரிய குடும்பத்தின் கடைசி கிரகமாகக் கருதப்பட்டது. ஆனால் யுரேனஸின் சுற்றுப் பாதையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததே இதற்கு காரணமாகும். இதையடுத்து யுரேனசுக்கு அப்பாலும் கிரகங்கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சிகள் தொடங்கின.
இந்நிலையில் பிரிட்டிஷ் வானியல் ஆய்வாளரான வில்லியம் ஹெர்செல் மற்றும் அவரது சகோதரி கரோலின் ஆகியோர் 1781ம் ஆண்டு யுரேனஸ் என்ற கிரகம் ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அதை அவர்கள் பார்க்கவில்லை.
நெப்டியூன் இருக்கும் இடத்தை மிகச் சரியாக கணித்தவர்கள், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கணிதவியல்-வானியல் ஆய்வாளர்களான லெ வெர்ரியர் மற்றும் ஜான் கெளச் ஆடம்ஸ் ஆகியோர் தான். இவர்களும் யுரேனஸை பார்க்கவில்லை.
இந்நிலையில் லெ வெர்ரியர் தந்த தகவலின் பேரில் 1846ம் ஆண்டு ஜேர்மனியின் வானியல் ஆய்வாளரான ஜோஹன் கல்லே இந்த கிரகத்தை தொலைநோக்கி மூலம் முதன் முதலாக அடையாளம் கண்டார்.
இவருக்கு முன்பே இத்தாலியின் பிரபலமான வானியல் ஆய்வாளரான கலிலியோ கலிலி 1612ம் ஆண்டு டிசம்பரிலேயே இந்த கிரகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும் அதை நட்சத்திரம் என நினைத்து விட்டு விட்டார். ஆனால் அவரது நோட்ஸ்களில் உள்ள தகவல்களின்படி அவர் பார்த்தது நட்சத்திரம் இல்லை நெப்டியூன் தான் என பின்னாளில் தெரியவந்தது.
இதனால் இந்த கிரகம் அதிகாரப்பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது 1846ம் ஆண்டு தான் என்றாகிவிட்டது. சூரியனிலிருந்து 4.5 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள இந்த கிரகத்தில் இருப்பதெல்லாம் ஹைட்ரஜனும், மீத்தேனும், ஹீலியமும் தான். இதனால் இதன் நிறம் நீல நிறமாக உள்ளது. இங்கு தரை என்று ஏதும் கிடையாது. இது ஒரு "கேஸ் ஜயண்ட்".
1846ம் ஆண்டு இந்த கிரகம் எந்த இடத்தில் இருந்ததோ, அந்த இடத்தை கிட்டத்தட்ட 164.8 ஆண்டுகளுக்குப் பின் இன்று வந்து அடைந்துள்ளது நெப்டியூன். அதாவது நெப்டியூன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது, 165 வருடங்கள்.
கண்ணால் பார்க்காமலேயே காதல் மாதிரி, தொலைநோக்கி மூலம் பார்க்கப்படாமலேயே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் நெப்டியூன் என்பது இதன் சிறப்பம்சமாகும். எப்படி யுரேனஸின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் வருகிறது என்ற ஆராய்ச்சியின் மூலம் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டதோ, அதே மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது தான் புளுட்டோவும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெப்டியூனின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் பாதிக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தபோது தான் புளுட்டோ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது முழுமையான கிரகமே அல்ல.. ஒரு முழுமை பெறாத கோள் (dwarf planet) என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சூரிய குடும்பத்தின் கடைசி கிரகம் இன்றைய திகதியில் நெப்டியூன் தான். நெப்டியூன் என்பது ரோமன் பெயராகும். இதற்கு அர்த்தம் "கடல் சாமி" (Sea of God).
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF